முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள்.. ஒரு மகன். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகள் அதிதி டாக்டருக்கு படித்திருக்கிறார். அதே சமயம் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோயாக நடித்து வருகிறார்.

தற்போது தனது மகனையும் ஷங்கர் சினிமாவில் நாயகனாக்க விரும்புகிறார் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது ஷங்கர் தன் மகன் அர்ஜித்தை யாருடைய இயக்கத்தில் அறிமுகம் செய்ய போகிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

தனது முன்னாள் உதவி இயக்குனரின் இயக்கத்தில் தன் மகனை அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் பார்ட் 2 படத்தில் அறிமுகம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அட்லீயின் இயக்கத்தில் தன் அறிமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறாராம் அர்ஜித்.

காதல் படத்தை தயாரித்தவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி சக்திவேல், அட்லீ ஆகிய இருவருமே ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனர்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Arjith Shankar to debut in his father’s associate direction

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது.. “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை தெரிவித்தது.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத் தொகை என இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவு இட்டது.

இதனையடுத்து நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் அபராதத் தொகையை ரத்து செய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இத்துடன் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் எனவும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

வரி அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில தினங்களுக்கு முன் இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறையான கருத்துக்களை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

High court orders TN government in Vijay case

BREAKING இரவு & ஞாயிறு ஊரடங்கு ரத்து.; 1-12 நேரடி வகுப்புகள்.; தியேட்டர் & ஜிம்களில் 50%..; முழு விவரங்கள் இதோ.

BREAKING இரவு & ஞாயிறு ஊரடங்கு ரத்து.; 1-12 நேரடி வகுப்புகள்.; தியேட்டர் & ஜிம்களில் 50%..; முழு விவரங்கள் இதோ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது முதல்வரிடம் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் முதல்வர் விடுத்த அறிக்கையில்..

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பிப்.1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு நாளை (ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜன.30) முழு ஊரடங்கு கிடையாது.

துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேரும் அனுமதி.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள், கேளிக்கை பூங்காக்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

#TNLockdown : Schools to reopen in TN from Feb 1st for class 1 to 12

ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்.

Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள்.

நிஷாந்த் & நக்கலைட்ஸ் செல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்..:

எழுத்து இயக்கம் – பாலா அரன்
ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்
இசை – சுரேன் விகாஷ்
படத்தொகுப்பு – ராம் சதீஷ்
கலை – சந்தோஷ்
ஒலிக்கலவை – சிவகுமார்
நடனம் – பாபு எரிக்
SFX – சேது
மக்கள் தொடர்பு – நிகில்

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை 2021 செப்டம்பரில் சந்தித்த போது…

“இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா.

“சில படங்கள் விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ரசிகர்களுக்கு பிடிச்சா விமர்சகர்களுக்கு பிடிக்காது. ஆனா இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும்” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் இப்படம் சோனி லைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Pandrikku Nandri Solli release date announced

நல்ல நட்பை கொண்டாட வரும் துல்கர் சல்மானின் ‘தோழி’ காஜல் அகர்வால்

நல்ல நட்பை கொண்டாட வரும் துல்கர் சல்மானின் ‘தோழி’ காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது.

மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது.

பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில்,…

“ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும்.

இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில்,…

“இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘தோழி’. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலோடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. பிரதீப் குமார் இப்பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார்,” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறும்போது, “பனித்துளி போல தூய்மையான, அழகான நட்பின் பாடல் தான் ‘தோழி’. இதை கேட்பவர்கள் ஆழமான நட்பை அனுபவிக்க முடியும்,” என்றார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி

இசை: கோவிந்த் வசந்தா

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி

கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்

சண்டை பயிற்சி: அஷோக்

நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்

இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்

இயக்கம்: பிருந்தா

Fascinating melody #Thozhi is out from Hey Sinamika

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் 40-60% வீடுகளில் ஏதாவது ஒரு செல்ல பிராணி இருக்கும்.

கிராம்ப்புறங்களில் இது அதிகமாகவே காணப்படும். அவர்கள் நாய்களை விட ஆடு, மாடு, கோழி, எருமைமாடு ஆகியவற்றை அதிகளவில் வளர்ப்பதுண்டு.

சென்னையை பொறுத்தவரை ப்ளாட் டைப் வீடுகளில் 70% நிச்சயம் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். பெற்றோர்கள் வேலைக்கு சென்றால் வீட்டு குழந்தைகளுக்கு நாய்கள் தான் நட்பான கம்பெனி.

நாய், பூனை, புறா, கிளி, மீன் உள்ளிட்டவைகளை இவர்கள் வளர்ப்பார்கள்.

வாடகை வீட்டில் சிலர் வசித்தாலும் நாய்களுக்கென்றே சிலர் தனி வீடு பார்ப்பார்கள்.

தனக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் நாயை தங்க வைக்க கூடுதல் வாடகை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அப்படியொரு ப்ரியத்தை நாய்கள் மீது வைத்திருப்பார்கள்.

தெருவில் யாரேனும் புதிய நபர்கள் நுழைந்தால் இந்த நாய்கள் குரைத்துக் கொண்டே இருப்பதால் மற்ற வீடுகளில் நிம்மதி இருக்காது.

ஆனால் நாய்களை வளர்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிடும்.

பெரிய பெரிய பங்களா வீடுகளில் நாயை பராமரிக்க வேலையாட்களும் உண்டு.

சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை பலர் நாய் பிரியர்கள் உண்டு. ஆங்கிலத்தில் சொன்னால் டாக் லவ்வர்ஸ்..

நடிகைகளில் த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், ப்ரியா மணி, நஸ்ரியா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் என பெரிய லிஸ்ட்டே இருக்கு.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் தன் நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடி போட்டோ போட்டு இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தன் நாய்க்கு 4வது பிறந்தநாளை கொண்டாடி அந்த படங்களை தன் பிஆர்ஓ மூலம் பகிர்ந்துள்ளார்.

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அர்னவ் நடிக்கும் படத்தின் பெயர் கூட ’ஓ மை டாக்’ தான்.

இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சரவ் சண்முகம் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான நட்புதான் இப்பட கதை.

இத்துடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ என்ற படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Arun Vijay celebrates his pet birthday

More Articles
Follows