நடிகர்கள் சொந்த குரலில் பாடி நடிக்க வேண்டும்.. ஆஸ்கர் நாயகன் ஆசை

நடிகர்கள் சொந்த குரலில் பாடி நடிக்க வேண்டும்.. ஆஸ்கர் நாயகன் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ar rahman‘தி வாய்ஸ்’ என்ற டிவி இசை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க உள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.

இது தொடர்பாf ஏஆர் ரஹ்மான் பேசும்போது…

”சினிமாவில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

அதற்கு அவர்கள் முறையான பயிற்சி எடுக்க வேண்டும். இன்றைய நாட்களில், நடிகர்கள் மிகவும் பரபரப்பான ஷெட்யூல்களில் பிஸியாக நடிக்கிறார்கள். எனவே அவர்கள் பாடல் பாட முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்குள் செஞ்சுரி அடிக்கும் ஜிவி. பிரகாஷ்

2020ஆம் ஆண்டுக்குள் செஞ்சுரி அடிக்கும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஇசையமைப்பாளராக பிஸியாக இருந்த போதிலும் நடிகராகவும் படு பிஸியாக காணப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இவரது நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 படங்களாவது வெளியாகிறது.

இந்த 2019ஆம் ஆண்டின் முதல் படமாக ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படம் வெளியாகவுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இது ‘சிந்து பைரவி’, ‘சலங்கை ஒலி’ போல இசைச் சித்திரமாக உருவாகி இருக்கிறதாம்.

இந்த படத்திலும் பீட்டர் என்ற கேரக்டரில் விஜய் ரசிகனாக நடித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் இதுவரை 20 படங்களில் நடித்துவிட்டாராம். இசையமைப்பாளராக 70 படங்களை முடித்துள்ளார்.

ஆக இதுவரை 90 படங்கள் முடிந்துள்ளன.

2019-ல் கிட்டத்தட்ட 10 படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அவையும் இந்தாண்டு வந்துவிடும் எனத் தெரிகிறது.

எனவே 2020 ஆண்டில் 100 சதம் (செஞ்சுரி) அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

காஞ்சனா ரீமேக்: ரஜினி வில்லன் அக்‌ஷய்குமாரை இயக்கும் லாரன்ஸ்

காஞ்சனா ரீமேக்: ரஜினி வில்லன் அக்‌ஷய்குமாரை இயக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance going to direct Akshay Kumar for Kanchana Hindi remakeபேய் படங்களில் பல வகை வந்தாலும் அனைவராலும் மறக்க முடியாத படம் காஞ்சனா.

இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இதில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் லாரன்ஸ்.

லாரன்ஸ் கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். இவர் ரஜினியின் 2.0 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

சரத்குமார் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.

முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் செல்கிறார் லாரன்ஸ்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

Lawrance going to direct Akshay Kumar for Kanchana Hindi remake

Breaking அசுரன் தனுஷுடன் கைகோர்க்கும் மஞ்சு வாரியார்

Breaking அசுரன் தனுஷுடன் கைகோர்க்கும் மஞ்சு வாரியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Actress Manju Warrier to make her Tamil debut in Dhanushs Asuranவடசென்னை படத்தை தொடர்ந்து அசுரன் என்ற படத்திற்காக தனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்துள்ளனர்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.

இப்பட கெட்-அப்புக்காக வித்தியாசமாக ரெடியாகி வருகிறார் தனுஷ்.

இதன் சூட்டிங் வருகிற ஜனவரி 26-ம் தேதி தொடங்கவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கு முன் தமிழில் பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் நடிக்கும் முதல் படம் இது.

இன்னொரு நாயகியும் இப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.

இவையில்லாமல் வெற்றிமாறனுடன் ஜீ.வி.பிரகாஷ் இணையும் 4வது படம் இது.

‘அசுரன்’ படத்தை முடித்துவிட்டு வடசென்னை 2ஆம் பாகம் மற்றும் சத்யஜோதி தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Actress Manju Warrier to make her Tamil debut in Dhanushs Asuran

கர்ஜனை சுந்தர் பாலுவுடன் கன்னித்தீவில் கூடிய நாலு குமரிகள்

கர்ஜனை சுந்தர் பாலுவுடன் கன்னித்தீவில் கூடிய நாலு குமரிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi Ashna Subiksha and Aishwarya dutta starring Kannitheevuத்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள்.

ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.

ஸ்டண்ட் – ‘ஸ்டண்ட்’ சிவா
எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர்
தயாரிப்பு – கிருத்திகா புரொடக்‌ஷன்

சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

Varalakshmi Ashna Subiksha and Aishwarya dutta starring Kannitheevu

kannitheevu team

Breaking வேற லெவல் கட்அவுட் & அபிஷேகம் செய்யுங்க.; சீறும் சிம்பு

Breaking வேற லெவல் கட்அவுட் & அபிஷேகம் செய்யுங்க.; சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vera level Flex banners is must for my VRV release Simbu request to his fansலைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் ரிலீஸ் குறித்து சிம்பு தன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். (அந்த செய்தியை நாம் பதிவிட்டு இருந்தோம். இதோ அந்த லிங்க்)

https://www.filmistreet.com/cinema-news/gift-new-dress-to-your-parents-instead-of-my-cut-outs-says-simbu/

கட்-அவுட், பேனர் வைக்காதீர்கள். பால் அபிஷேகம் செய்ய வேண்டாம்.

அந்தப் பணத்தில் பெற்றோருக்கு டிரெஸ் வாங்கி கொடுங்க. அதை படம் எடுத்து இணையத்தில் பதிவிடுங்கள் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை சிலர் கிண்டல் செய்து, சிம்புவுக்கு இருப்பதே சில ரசிகர்கள் தான்’, இதற்கு ஏன் இந்த பில்டப்? என விமர்சித்தனர்.

இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என்னோட படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள்.

‘கட்-அவுட்’, ‘பேனர்’ எல்லாம் வைத்து ‘பால் அபிஷேகம்’ எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன்.

இவர் இதை விளம்பரத்துக்காக சொல்கிறார். எனக்கு இருக்கிறதே 2-3 ரசிகர்கள் தான் என்கிறார்கள்.

நம்ம ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். 2-3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும்.

ஆகையால் அந்த 2- 3 ரசிகர்களுக்கு மட்டும் நான் ஒன்றை சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை.
இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு ப்ளக்ஸ் வைக்கிறீங்க, பேனர் வைங்க. கட்-அவுட் வைக்கிறீங்க.

பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள். இதைத் தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அதனால் இதைச் செய்வது தப்பு கிடையாது. அந்தளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப் போறது கிடையாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீஸுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

Vera level Flex banners is must for my VRV release Simbu request to his fans

More Articles
Follows