தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரேனிகுண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.
இவர் சமீபத்தில் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் நடிகர் அஜித் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய ஒரிஜினல் பெயரான கார்த்திக் என்ற பெயரை இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் அஜித் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள்.
அஜித் அவர்களிடம் உதவி கேட்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.
ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும்.
அஜித்திடம் இந்த வீடியோ செய்தியை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். என கண்ணீருடன் கூறியிருந்தார் தீப்பெட்டி கணேசன்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில்…
‘நண்பா இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன். அது அஜித்திடம் கிடைத்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார்.
உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உங்கள் விபரங்களை அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார்.
Ajith will help you Lawrence promises to Theepetti Ganesan