விஜய்யின் உறவினர் இயக்கிய அக்னிதேவ் படத்தில் ஜெயா-சசி சர்ச்சை

விஜய்யின் உறவினர் இயக்கிய அக்னிதேவ் படத்தில் ஜெயா-சசி சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agni Dev movie trailer slams TN Political leadersசர்கார் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் அதிமுக கட்சியினரை கொதிப்படைய வைத்தது.

தற்போது நடிகர் விஜய்யின் உறவினர் ஜான் பால்ராஜ் இயக்கியுள்ள அக்னி தேவ் படமும் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்துள்ள அக்னிதேவ் படத்தை ஜான் பால்ராஜ், மற்றும் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

சியாண்டோ ஸ்டூடியோ மற்றம் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இதில் சகுந்தலாதேவி என்ற மிரட்டலான கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் மதுபாலா.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுபாலா தமிழில் நடிக்கும் படம் இது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குனிஞ்சி குனிஞ்சி நடிச்சா? நம்பிடுவேன் என நினைச்சீங்களா? என்றும் மதுபாலா மிரட்டும் தோனியில் கேட்கிறார் மதுபாலா.

அவருக்கு பின்னணியில் ஜெயலலிதாவிடன் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

எனவே இது ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேரக்டரை குறிக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதில் ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Agni Dev movie trailer slams TN Political leaders

 

ரஜினி-அஜித்-தனுஷ்-சிம்பு பட ரிலீஸால் சிவகார்த்திகேயன் கன்ப்யூஷன்

ரஜினி-அஜித்-தனுஷ்-சிம்பு பட ரிலீஸால் சிவகார்த்திகேயன் கன்ப்யூஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer cum Actor Sivakarthikeyan in confusion of Kanaa releaseதன்னுடைய நெருங்கிய நண்பரும், பாடலாசிரியரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்துள்ள படம் கனா.

அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க சத்யராஜ், முனீஸ்காந்த், ரமா, அந்தோணி பாக்யராஜ், நமோ நாராயணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்ய, நிபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இப்பட டீசர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 21 தேதியில் வெளியிட முடிவு செய்திருந்தாராம் சிவகார்த்திகேயன்.

ஆனால் அன்றைய தினத்தில் தனுஷின் மாரி2, விஜய்சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்கமறு உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது.

எனவே அப்போது கனாவை ரிலீஸ் செய்தால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாமா? என யோசிக்கிறாராம்.

ஜனவரி மாதத்தில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் அப்போதும் ரிலீஸ் செய்ய முடியாதே என்ற யோசனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

Producer cum Actor Sivakarthikeyan in confusion of Kanaa release

அஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி

அஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Rajinikanth broke V and Thursday sentiment of Ajithவியாழன் கிழமையும் V என்ற எழுத்தும் நடிகர் அஜித்தின் சென்டிமெண்ட் விஷயங்களாகும்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் வி என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கி எம் எழுத்தில் முடிந்துள்ளது.

மேலும் இந்த படங்களின் பாடல்கள், டீசர்கள், போஸ்டர்கள் என அனைத்தையும் வியாழக்கிழமைகளில் வெளியிட்டு வந்தனர். இதை நள்ளிரவு சமயத்திலும் வெளியிட்டனர். (இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு கூட வெளியிட்ட கொடுமை கூட உண்டு)

இதை பலரும் விமர்சித்தாலும் படக்குழுவினர் கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் முன்னறிவிப்பு இல்லாமல் விஸ்வாசம் பட மோசன் போஸ்டரை திடீரென நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வெளியிட்டனர்.

வியாழக்கிழமை சென்டிமெண்ட்டை அஜித் டீம் ஏன் உடைத்தார்கள்? என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி பட செய்திகள் என்பதுதான் என தெரிய வந்துள்ளது.

பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைக்காலமாக ரஜினியின் பேட்ட படம் போஸ்டர்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.

சரி வியாழன் சென்டிமெண்ட் படி மோசன் போஸ்டரை வெளியிட்டாலும் நவம்பர் 29 வியாழன் அன்று 2.0 படம் ரிலீஸாகிறது.

அன்று மோசன் போஸ்டர் வந்தால் ரஜினி அலையால் அது வந்த சுவடே தெரியாமல் போய்விடும்.

மேலும் அதற்கு அடுத்த வாரம் முதல் பேட்ட பட சிங்கிள் & செகண்ட் பாடல்கள் வெளியீடு நடைபெறுகிறது.

அதற்கு அடுத்த வாரம் ரஜினி பிறந்தநாள் விழா வருகிறது.

எனவே விஸ்வாசம் மோசன் போஸ்டர் வெளியீடு தள்ளிக் கொண்டே போகும் என்பதால் இந்த திடீர் முடிவை விஸ்வாசம் படக்குழு எடுக்க வேண்டி இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

How Rajinikanth broke V and Thursday sentiment of Ajith

நயன்தாராவை நடிக்க வைக்க விஜய்யை சமாதானம் செய்த அட்லி?

நயன்தாராவை நடிக்க வைக்க விஜய்யை சமாதானம் செய்த அட்லி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Nayanthara became part of Vijay 63 movieஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் விஜய் நடிக்க, அட்லி இயக்கவுள்ளார்.

இதில் விவேக், யோகி பாபு காமெடியன்களாக நடிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

2009ல் வெளியான ‘வில்லு’ படத்தில்தான நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின்னர் விஜய்யும் நயன்தாராவும் நிறைய படங்களிலும் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

பாங்காங்கில் நடைபெற்ற வில்லு பட சூட்டிங்கில் நயன்தாராவுக்கு விஜய்க்கும் ஒரு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

அதனால்தான் இருவரும் இதுநாள் வரை இணைந்து நடிக்கவில்லையாம்.

தற்போது அட்லிதான் விஜய்யிடம் பேசி அவருடைய ஒப்புதலை பெற்று நயன்தாராவை நடிக்க வைக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது.

How Nayanthara became part of Vijay 63 movie

*பேட்ட* பட உரிமையை கலைப்புலி தாணு வாங்கியது உண்மையா.?

*பேட்ட* பட உரிமையை கலைப்புலி தாணு வாங்கியது உண்மையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli Thanu refused that he have bought theatrical rights of Pettaகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ட’.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும் கிட்டதட்ட ரூ. 120 கோடிக்கும் மேல் இந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. (நம் தளத்தில் வெளியாகவில்லை.)

ஆனால் இதை தாணு தரப்பு மறுத்துள்ளது. பேட்ட படம் வியாபாரம் தொடர்பாக எதுவும் தொடங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalaipuli Thanu refused that he have bought theatrical rights of Petta

மீண்டும் இம்சை அரசன்.; ஷங்கர்-வடிவேலுவை சமாதானம் செய்த லைகா.?

மீண்டும் இம்சை அரசன்.; ஷங்கர்-வடிவேலுவை சமாதானம் செய்த லைகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imsai Arasan 24th Pulikecei will commence again soonசிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’.

டைரக்டர் ஷங்கர் தயாரித்த இப்படத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்தார்.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தை இந்த கூட்டணியே பணியாற்ற முடிவு செய்தது.

இதன் சூட்டிங்குங்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகளும் உருவாக்கப்பட்டன.

ஆனால் சில நாட்களிலேயே வடிவேலு பிரச்சினை செய்ய சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷங்கர்.

சங்க நிர்வாகிகள் சமாதானம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தான் இந்த சமாதானத்தை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

Imsai Arasan 24th Pulikecei will commence again soon

More Articles
Follows