சிம்பு படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி படத்தலைப்பும் மாற்றம்

சிம்பு படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி படத்தலைப்பும் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ’அனபெல் சுப்பிரமணியம்.

இப்படத்தை தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் நீளம் கருதி மூன்று பாகங்களாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்றவிருப்கிறார்களாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்பலாம்.

அண்மையில் சிம்பு நடித்து வரும் படத்தின் பெயரை ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றியுள்ளனர் (பழைய பெயர் : நதிகளிலே நீராடும் சூரியன்) என்பது குறிப்பிடத்தக்கது.

After simbu now Vijay Sethupathi changes his movie title

சுதந்திர தினத்தில் ஷாரூக்கான் & நயன்தாரா பட ட்ரீட் தர ரெடியாகும் அட்லி

சுதந்திர தினத்தில் ஷாரூக்கான் & நயன்தாரா பட ட்ரீட் தர ரெடியாகும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி முதல் பிகில் வரை விஜய்க்கு மாஸான படங்களை கொடுத்தவர் டைரக்டர் அட்லி.

விஜய்யை இயக்கிய பின்னர் தமிழில் வேறு எந்த ஹீரோக்களையும் இயக்க விரும்பாமல் நேரடியாக பாலிவுட் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து பிரம்மாண்டமான ஒரு படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் அதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘சங்கி’ என பெயரிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் இப்பட அறிவிப்புக்காக ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டதாம்.

இதில் ஷாரூக்கான் டபுள் ரோலில் நடிப்பதாகவும் இப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை தழுவல் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகஸ்ட் இறுதியில் மும்பையில் சூட்டிங்கை தொடங்கி செப்டம்பரில் துபாயில் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு டீசரை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

SRK – Atlee new project announcent out on Aug 15?

Once a lion always a lion.: சினிமாவில் 62 வருட பயணத்தில் கமல்.; மரண மாஸ் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ்

Once a lion always a lion.: சினிமாவில் 62 வருட பயணத்தில் கமல்.; மரண மாஸ் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

இது கமல்ஹாசனின் 62 வருட சினிமா வாழ்க்கையில் 232வது படமாகும்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ‘Code Red’ என குறிப்பிட்டு இருந்தார்.

‘விக்ரம்’ படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் இதே வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக இணைகிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்திலும் லோகேஷுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் ஆண்ட்ரியா பணிபுரிந்துள்ளார்.

விக்ரம் படக்குழுவினர் இதுவரை நாயகி யார்? என்பதை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சினிமாவில் #62YearsOfKamalism முன்னிட்டு COMMON DP போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்துடன் விக்ரம் பட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் லோகேஷ்.

இதில் கையில் அருவாளுடன் உள்ளார் கமல். அதில் ரத்தக்கறை உள்ளது.

இத்துடன் Once a lion always a lion என்ற வார்த்தையும் அதில் இடம்பெற்றுள்ளது.

Lokesh released 62YearsOfKamalism new poster

ஓடிடியில் காமெடி சரவெடி போட தயாராகி வரும் சந்தானம் படங்கள்

ஓடிடியில் காமெடி சரவெடி போட தயாராகி வரும் சந்தானம் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஓரிரு படங்கள் சூப்பர் ஹிட்டும் ஓரிரு படங்கள் தோல்வியை தழுவியும் வருகின்றன.

ஹீரோவானாலும் தன்னுடைய படங்களில் நடிப்பவர்களை கலாய்த்து ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார் சந்தானம்.

இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் உள்ளன.

கொரோனா சூழ்நிலையால் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக இவை கிடப்பில் உள்ளன.

இந்நிலையில் ‘டிக்கிலோனா’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

‘சர்வர் சுந்தரம்’ படத்தை 2017ல் வெளியிட திட்டமிட்டனர்.

பல முறை இப்படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் படம் வெளியாகவில்லை. இப்போது ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான ‘டிக்கிலோனா’ படத்திற்கும் இதே நிலைதான்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.

டைம் டிராவலை மையப்படுத்தி ‘டிக்கிலோனா’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டிக்கிலோனா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Santhanam next films to have direct OTT release

லிங்குசாமியின் ‘RAPO19’ பட ஹிந்தி சாட்டிலைட் உரிமை மட்டும் இத்தனை கோடி.??

லிங்குசாமியின் ‘RAPO19’ பட ஹிந்தி சாட்டிலைட் உரிமை மட்டும் இத்தனை கோடி.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை N.லிங்குசாமி இயக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஆதி வில்லனாக நடிக்கின்றார்.

நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகனான ராம் பொத்தினேனி சென்னையில் படித்தவர். பல வெற்றி படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart Shankar, ரெட் என தொடர் வெற்றிகளை தெலுங்கில் கொடுத்துள்ளார்.

இவர் மிகவும் சரளமாக தமிழ் பேசுபவர்.

இயக்குனர் லிங்குசாமி – ராம் பொத்தினேனி – ஆதி என்ற காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு ஹிந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை “RAPO19” திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் அதன் விவரம் வெளியிடப்படும்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது.

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

RAPO19 hindi satelite rights sold for a huge price

ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

3 நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி டீசர்.

‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார்.

இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது…‘

‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்..

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன்.

அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்,என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்: அரவிந்தசாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி, தம்பிராமையா, ஜெயபிரகாஷ்..

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: செல்வா

இசை: இமான்

ஒளிப்பதிவு:கோகுல் பினாய்

எடிட்டிங்: ஆண்டனி

பாடல்கள்:விவேகா, அருண்ராஜா காமராஜ்

நடனம்:ஸ்ரீதர், தினேஷ்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன்
கணேஷ் ரவிச்சந்திரன்

Actor Arvindswami in 6 different avatars in Vanangamudi

More Articles
Follows