தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்

தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்

New Project (2)தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘உல்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன, ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து இன்னொரு மலையாள திரைப்படமான “பிரதர்ஸ் டே” படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் முன்னணி ஹீரோ பிரித்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் ஜூன் மாதத்தில் தன் பகுதிகளை முடித்துக் கொடுக்கிறார் பிரயாகா.

மறுபுறம் சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவில், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் குமார் ஜோடியாக “கீதா” என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. கொல்கத்தா, சிம்லா, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகியவற்றின் ரம்மியமான இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி இருக்கும் படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்து செப்டம்பர் மாதம் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றி கேட்டால், புன்னகையோடு அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல், ஒன்றை மட்டும் பிரித்து சொல்வது கடினம். மிகச்சிறந்த கதைகளை சொல்வதில் இருந்து தங்களின் தனித்தன்மையை இழக்காமல், நேட்டிவிட்டியை இழக்காமல் சர்வதேச தரத்தில் சிறந்த படங்களை சிறப்பாக வழங்குவது வரை எல்லாமே சிறப்பு. இங்கே பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்ய மிகவும் ஆவலாக உள்ளேன்” என்றார்.

Breaking ரஜினி-சிவா திடீர் சந்திப்பு.; ‘பேட்ட’ ஏரியாவில் ‘விஸ்வாசம்’ ஏன்.?

Breaking ரஜினி-சிவா திடீர் சந்திப்பு.; ‘பேட்ட’ ஏரியாவில் ‘விஸ்வாசம்’ ஏன்.?

Viswasam Siva met Rajinikanth today at Poes Gardenஅஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்னுமளவுக்கு அவரின் அடுத்தடுத்து படங்களை இயக்கி வந்தார் சிவா.

இந்தாண்டு வெளியான விஸ்வாசம் படம் இவர்களது கூட்டணிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

இருந்தபோதிலும் ரஜினியின் பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதியது அந்த சமயத்தில் ரசிகர்களிடையே பெரும் மோதலை உண்டாக்கியது.

நெட்டிசன்கள் பலரும் பணத்தை பெற்றுக் கொண்டு விஸ்வாசமாக இருந்தனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா வகையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்துள்ளார் சிவா. இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

அவர் ரஜினியை சந்தித்து ஒன்லைன் கதை சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் விஸ்வாசம் படத்தையும் ரஜினி பாராட்டியதாக சொல்லப்படுகிறது.

தற்போது ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்படும் நிலையில் ஒரு இயக்குனரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viswasam Siva met Rajinikanth today at Poes Garden

Breaking மோடி கெத்து; ராகுல் ராஜினாமா; கமல் கணிசம்… ரஜினி கருத்து

Breaking மோடி கெத்து; ராகுல் ராஜினாமா; கமல் கணிசம்… ரஜினி கருத்து

Rajini talks about Modi Rahul and Kamals election resultவரும் மே 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கவுள்ளார்.

இந்த விழாவில் பல நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து ரஜினி இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது… “நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய்க்கு பின் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார். மோடி என்ற தனிமனிதனின் தலைமைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை உருவானதால் அவருக்கு இங்கு வெற்றி கிட்டவில்லை.

தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள்.

தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி – கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது” என பேசினார்.

Rajini talks about Modi Rahul and Kamals election result

பாக்ஸர் படத்துக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட அருண் விஜய்

பாக்ஸர் படத்துக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட அருண் விஜய்

New Project (1)இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், கடுமையாக உழைப்பதில் தவிர்க்க முடியாத ஆர்வம் உடையவர் நடிகர் அருண் விஜய். “பாக்ஸர்” படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக அவர் செய்யும் தீவிர பயிற்சிகளின் வீடியோ ஏதாவது வெளியாகுமா என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். குறிப்பாக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான லின் பாங்கில் பயிற்சி பெறுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டி இருக்கிறது.

படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, “அருண் விஜய் சார் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் சார் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும். நம் “பாக்ஸர்” படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பீட்டர் ஹெயின் மாஸ்டர் பரிந்துரைக்கு இணங்க, அவர் வியட்நாமில் உள்ள லின் ஃபாங்கில் பயிற்சி பெற்றார். அருண் விஜய் சார் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் மிகவும் கூலாக இருந்தார். இந்த படத்தை தங்கள் குழந்தையாக நினைத்து உழைக்கும் இந்த இருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தொழில்முறை ஈடுபாட்டை தாண்டி, அவர்கள் உணர்வுபூர்வமாக இந்த படத்தில் பணிபுரிவது நிச்சயம் படத்தை அடுத்த கட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். இந்த பயிற்சியில் முழு ஆதரவுடன் செயல்பட்ட உள்ளூர் பயிற்சியாளர் சந்தீப்பிற்கு நன்றி. அருண் விஜய் சார் கடினமான முயற்சிகள் எடுக்கும் இந்த வீடியோ, இதுவரை நாங்கள் செய்ததைப் பற்றிய ஒரு பார்வை மட்டுமே. இன்னும் கடுமையான பயிற்சிகளின் வீடியோக்கள் நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வீடியோவை ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்காக வழங்க விரும்பினோம். நான் ரசிகர்கள் என்று சொல்வது அவரது படங்களை மட்டும் பார்ப்பவர்களை அல்ல, அவரை போலவே உடற்பயிற்சி செய்து அவரை தொடர்ந்து பின்பற்றுபவர்களையும் தான்” என்றார்.

ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்து கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது அவரது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார். திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையை பற்றியது. ரித்திகா சிங் இந்த படத்தில் ஒரு விளையாட்டு பத்திரிகையாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள். டி. இமான் இசையமைக்கிறார். சி.எஸ். பாலசந்தர் (கலை), நாடன் (படத்தொகுப்பு), பீட்டர் ஹெய்ன் (சண்டைப்பயிற்சி), ஹினா (ஸ்டைலிஸ்ட்), அருண் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். விவேக் எழுதி இயக்கும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR

New Projectமுன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், STR உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. படப்பிடிப்பு மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, STR உடனான தருணங்களே என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, STR ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, “சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம். நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தபோது, அவர் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, படப்பிடிப்புக்கு தயார் செய்யும் வரை இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். மேலும், அவராகவே வெளியே வந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டு விட்டு போவார். ஒரு காட்சி முடிந்தவுடன் ஒரு நன்றாக வந்திருக்கிறதா என ஒரு குழந்தையை போல ஆர்வமாக விசாரிப்பதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள், படப்பிடிப்பில் அவருடன் இருந்து பாருங்கள். எல்லா நேரத்திலும் அவருடன் இருக்க வேண்டுமென உங்களிடம் அவர் கேட்கவில்லை, ஆனால் அவருடைய தேவைகளை புரிந்துகொள்ளுங்கள். அவர் உங்களுடையவர். தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக எல்லா இடங்களிலும் பயணம் செய்கிறார். ஹன்சிகா மோத்வானி முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது” என்றார்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்து வரும் இந்த மஹா படத்தின் கோவா படப்பிடிப்பை முடித்து விட்டு மொத்த குழுவும் சென்னை திரும்ப இருக்கிறது. ஜிப்ரான் (இசை), ஜே லக்‌ஷ்மண் (ஒளிப்பதிவு), ஜேஆர் ஜான் ஆபிரஹாம் (படத்தொகுப்பு), மணிமொழியன் ராமதுரை (கலை), கார்க்கி (வசனம்), ஷெரிஃப், பாப்பி (நடனம்), ரேஷ்மா சஞ்செட்டி, அர்ச்சனா மேத்தா (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி

எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி

New Project (5)எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் – மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி

‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசியதாவது :-

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது

படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.

பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள் காட்சியை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது.

இந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பணிகளை தாண்டி பணியாற்றினார்கள் என்றார். இதேபோல் தரமான படங்களை இயக்குவேன் என்றார்.

புகைப்பட கலைஞர் கோகுல் பினாய் பேசும்போது,

இப்படத்தை ஆதரித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. நெல்சனின் எழுத்துக்கள், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன், மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

பிரவின் ஆடை வடிவமைப்பாளர் பேசும்போது,

இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. இயக்குநரை திருப்திபடுத்துவது மிகவும் கடினம். ப்ரியாவுக்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரியும் இருக்க வேண்டும் அதேபோல், அழகாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார் இயக்குநர் நெல்சன். அதுபோல் தான் உடைகளைத் தேர்ந்தெடுத்தேன் என்றார்.

படத்தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,

தரமான படங்களை வெற்றி படமாக்குவதில் பத்திரிகையாளர்கள் தவறுவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஆண்டனியிடம் உதவியாளராக பணியாற்றும்போதே எஸ்.ஜே.சூர்யாவை தெரியும். ஆனால், இப்படத்தில் என் பணியில் எந்த குறையும் கூறவில்லை. ‘காஸ்மோரா‘ படத்தில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இப்படத்தில் எதிர்ப்பார்த்தையும் மீறி வெற்றி கிடைத்திருக்கிறது. ஜஸ்டினின் இசை இப்படத்திற்கு உதவியாக இருந்தது என்றார்.

வசனகர்த்தா சங்கர் பேசும்போது,

மே மாதம் வெற்றி மாதமாக இருக்கிறது. அரசியலில் எல்லோரும் நான் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார்கள். நாங்களும் இப்படம் மூலம் வெற்றியடைந்திருக்கிறோம். டிரிம் வாரியஸ் பிக்சர்ஸ்-ன் நோக்கம் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. ஏவிஎம்-ற்கு பிறகு இவர்களுக்கு தான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். வேறு நிறுவனமும் இருக்கலாம், ஆனாலும் இவர்களை நான் நேரிடையாக பார்க்கிறேன். பெரிய மாதிரி பத்திரிகைகளில் எனது பெயர் வந்ததில் மகிழ்ச்சி.

கதை என்பது ஆத்மா. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பிரம்மாக்கள் தான். ஒரு திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது வசனம் என்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரைப்படம் தான் சரியான தேர்வு.

நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்திற்கு இந்தளவு பொருத்தமாக இருப்பார் என்ற நினைக்கவில்லை. ‘ஒரு நாள் கூத்து‘ குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

கருணாகரன் பேசும்போது,

ஒரு எளிமையான படத்தை மிகப்பெரிய வெற்றிபடமாக்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதுபோல தரமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. எஸ்.ஜே.சூர்யா அவர்களுடன் நடிப்பவர்களை கதாபாத்திரத்திற்கேற்றவாறு இயல்பாக வைத்துக் கொள்வார். பிரியாவும் நன்றாக பழகுவார் என்றார்.

கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,

முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதை தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம் தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள் தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

ஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

More Articles
Follows