மும்பை தொழிலதிபரை 2வது திருமணம் செய்த நடிகை தியா

மும்பை தொழிலதிபரை 2வது திருமணம் செய்த நடிகை தியா

Dia Mirzaபாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தியா மிர்சா.

தமிழில் ‘என் சுவாச காற்றே’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

பாலிவுட்டில் சில படங்களையும. தயாரித்துள்ளார்.

தற்போது நாகர்ஜுனா உடன் வைல்டு டாக் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் தியா.

இவர் 2014ல் சாஹில் சங்கா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். 5 ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்தார்.

தற்போது மும்பை தொழிலதிபர் வைபவ் ரேகி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Actress Dia Mirza married at 40

சூர்யா – சத்யராஜ் இணையும் படத்தில் வடிவேலு..; 12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

சூர்யா – சத்யராஜ் இணையும் படத்தில் வடிவேலு..; 12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 40’ என் அழைக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க சத்யராஜ் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்.

கிராமப்புற கதையை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இதில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார் வடிவேலு.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் இதுவாக அமைய வாய்ப்புள்ளது.

Vagai Puyal Vadivelu to join Suriya 40 ?

suriya 40

இளையராஜா ஸ்டூடியோவை ரசித்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)

இளையராஜா ஸ்டூடியோவை ரசித்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)

சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ (பழைய எம்எம் தியேட்டர்) கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார்.

பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Rajinikanth At Isaignani ilayaraja new studio

அமிதாப்பச்சனுடன் இணைந்த ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பை நிறைவு செய்த நாகார்ஜூனா

அமிதாப்பச்சனுடன் இணைந்த ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பை நிறைவு செய்த நாகார்ஜூனா

Brahmāstra (1)நடிகர் நாகார்ஜூனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Nagarjuna wraps up his portions in Brahmāstra.

4 காங்கிரஸ் MLAக்கள் ராஜினாமா..; புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

4 காங்கிரஸ் MLAக்கள் ராஜினாமா..; புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

Narayanasamy (2)புதுச்சேரி காரைக்கால் மாஹி ஏனாம் ஆகியவற்றை சேர்த்தே புதுச்சேரி மாநிலம்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் உள்ளனர்.

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 உள்ளனர். ஆக மொத்தம் 33 பேர் உள்ளனர்.

இதில் கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது.

மேலும் பா.ஜ.கவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் என்பவரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுச்சேரி அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதர புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Pondy CM has called for an urgent Cabinet meeting following the resignations

வெங்கட் பிரபு மீது கதை திருட்டு வழக்கு..; கமலுக்காக காத்திருக்கும் இயக்குனர் சசிதரன்

வெங்கட் பிரபு மீது கதை திருட்டு வழக்கு..; கமலுக்காக காத்திருக்கும் இயக்குனர் சசிதரன்

Live Telecastநேரடி ஒளிபரப்பு கதையை வாராயோ வெண்ணிலாவே இயக்குனர் சசிதரனிடமிருந்து இயக்குனர் வெங்கட் பிரபு திருடியதாக கூறி சசிதரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

நேரடி ஒளிபரப்பு வெப்சீரிஸ் கதை திருட்டு சம்மந்தமாக குமுதம் யு டியூப் சேனலில் கதையின் ஆதாரத்துடன் இயக்குனர் சசிதரன் பேட்டியளித்துள்ளார். பேட்டியின் நடுவே ஆதாரங்கள் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்த திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் இயக்குனர் சசிதரன் நும் சென்னை 28 க்கு முன் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அந்த கால கட்டத்தில் வெங்கட் பிரபு இயக்க சசிதரன் திரைப்படம் இயக்க இருவரும் முயற்சி செய்துக்கொண்டிருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இயக்குனர் சசிதரன் வெங்கட் பிரபு கதை திருட்டு பிரச்னையில் இருவருக்கும் நண்பர்களாக பழகியவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்

இயக்குனர் சங்கத்தில் புகாரிட்ட சசிதரனுக்கு எதிராக மூன்று இயக்குனர்களை வெங்கட் பிரபு தயார் செய்திருக்கிறாராம்.

அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸ் பார்த்தவர்கள் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த சசிதரன் கொடுத்த 2007 இல் எழுதிய கதை சுருக்கத்தின் அப்பட்டமான காப்பியாக இருந்ததாக கூறுகின்றனர். இதனால் வெங்கட் பிரபுவுக்கு பின்னடைவு அடைந்திருக்கிறது.

மாநாடு படம் வெளியாகும் முன் வெங்கட் பிரபு மேல் இருக்கும் கதை திருட்டு புகாருக்கு சுமூக முடிவு எடுக்க சொல்லி இருக்கிறார் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி .

தெருவோர கிரிக்கட் விளையாடுபவர்களின் வாழ்க்கை என்று மூலக்கதையை கூறிய வெங்கட் பிரபு அதற்க்கு கதையை சசிதரன் என்ற தனது நண்பரை எழுத கூறியுள்ளார். அதுவே பின்னர் சென்னை இருபத்தியெட்டு . சென்னை 28 படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய சசிதரனின் பெயரை டைட்டிலில் திரைக்கதை வசன உதவி என போட்டு இருட்டடிப்பு செய்துவிட்டதாக வெங்கட் பிரபு மேல் புகார் எழுந்துள்ளது. 2007 இல் நடந்த இந்த சம்பவம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. அதே இயக்குனரின் நேரடி ஒளிபரப்பு என்ற பதிவு செய்த கதையை தான் மீண்டும் வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் ஹாட் ஸ்டார் வெப்சீரிஸாக தயாரித்து இயக்கி விட்டார் என்பதே சமீபத்திய புகார்.

சசிதரனின் கதையை படமாகிவிட்ட வெங்கட் பிரபு புகாரளித்த சசிதரன் மேல் உள்ள கோபத்தில் சசிதரன் இயக்கி ஆறி அர்ஜுனா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத இரண்டாவது படத்தை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். ஏனென்றால் சசிதரனின் இரண்டாவது படத்தை தயாரிப்பவர் இந்த வெங்கட் பிரபுவின் நீண்ட கால குடும்ப நண்பர் கமல் ஏகாம்பரம் என்பவராம்.

வெங்கட் பிரபு மேல் புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படம் வாராயோ வெண்ணிலாவே படத்தை பார்த்த ஒரு பெரிய நிறுவனம் அவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டியது மட்டுமில்லாமல் அந்த படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.

வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படமான வாராயோ வெண்ணிலாவே வை பார்த்த பிக்பாஸ் வெற்றியாளர் நடிகர் ஆரி அர்ஜுனன் இயக்குனர் சசிதரனுடன் சேர்ந்து பணி புரிய விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு வின் லைவ் டெலிகாஸ்ட் வெப்செரிஸ் இயக்குனர் சசிதரன் பதிவு செய்து வைத்திருந்த நேரடி ஓளிபரப்பு கதையின் அப்பட்டமான காப்பியாம்.வெப் சீரிஸ் வெளியான பிறகு இதை பார்த்த திரையுலகினர் சசிதரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

மங்காத்தாவிற்கு பிறகு தொடர்ந்து சரிவில் இருந்த வெங்கட் பிரபு அதிலிருந்து மீளவே இயக்குனர் சசிதரனின் கதையில் கை வைத்திருக்கிறாராம். இது ஆதாரபூர்வமாக விரைவில் நிரூபணமாகும் என தெரிவிக்கின்றனர்.

சங்கத்தின் ஒத்துழைப்பு ஆமை வேகத்தில் எடுத்ததாலேயே நேரடி ஒளிபரப்பு வெப்செரிஸ் கதை எழுதிய உண்மையான கதாசிரியர் சசிதரனுக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனிடம் பதிவு செய்யப்பட பல கதைகள் உள்ளதாம். அஜித் விஜய்க்கும் பொருத்தமான கதைகள் உள்ளதென அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் அதை முறைப்படி அவரிடம் வாங்கி இயக்கலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம்.

பிக்பாஸ் புகழ் ஆறி அர்ஜுனும் வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதறணும் நெருங்கிய குடும்ப நண்பர்களாம்.

ஹாட் ஸ்டார் நிறுவனம் இயக்குனர் சசிதரனிடம் வெப்சீரிஸ் இயக்கி கொடுக்க கதை கேட்டுள்ளார்களாம். பிரச்னையை சுமுகமாக முடிக்கும் முயற்சியோ ?

மக்கள் நீதி மைய உறுப்பினரான இயக்குனர் சசிதரன் சமீபத்தில் வெங்கட் பிரபு மேல் அளித்த கதை திருட்டு புகாரை தனது கடசியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம் இந்த பிரச்னை குறித்து தீர்வு காண பேசவிருக்கிறாராம்.

ppநேரடி ஒளிபரப்பு கதை விஜய் ஹாட் ஸ்டாரில் வெளியானதால் அதை தனது கடசி தலைவர் கமல்ஹாசன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் இயக்குனர் சசிதரன்.

Director Sasi Dharan waiting for Kamal Haasan reply

More Articles
Follows