மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்த நட்ராஜ்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்த நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘திரௌபதி’ ,’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கியவர் மோகன்ஜி.

இந்த படங்களை தொடர்ந்து 3வது படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.

டைரக்டர் செல்வராகவனை நாயகனாக வைத்து புதிய படம் இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இதே படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.

நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுபிறது.

‘கர்ணன்’ படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Natty joins Mohan Gs film with Selvaraghavan

டாக்டர் ஆன நடிகர்கள் யோகிபாபு மற்றும் எம்எஸ் பாஸ்கர்

டாக்டர் ஆன நடிகர்கள் யோகிபாபு மற்றும் எம்எஸ் பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் அறிமுகமாகி அவ்வப்போது பெரிய திரையில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் பாபு.

இவர் யோகி படத்தில் நடித்ததன் மூலம் தன் பெயருடன் யோகியை இணைத்து கொண்டு யோகிபாபு ஆனார்.

காமெடியனாக நடித்த போதிலும் ஓரிரு படங்களில் நாயகனாக நடித்தும் வருகிறார்.

கூர்கா, மண்டேலா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

ரஜினியுடன் தர்பார் படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.

விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‛பீஸ்ட்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் யோகிபாபு.

இதே மேடையில் பிரபல நடிகர் எம்எஸ் பாஸ்கரும் டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actors Yogibabu and Ms Baskar honoured with an honorary doctorate

லிங்குசாமி – தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் இணைந்த சிம்பு

லிங்குசாமி – தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் இணைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி தற்போது தெலுங்கு சினிமாவில் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

‘தி வாரியர்’ என்ற இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி , அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு பின்னணி பாடல் பாடி இருக்கிறாராம் சிம்பு.

முதன் முறையாக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் சிம்பு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

STR joins director Lingusamy – DSP movie project

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ்.; தேசிய விருதை பெற்று தந்த படத்தின் 2ஆம் பாகமா.?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ்.; தேசிய விருதை பெற்று தந்த படத்தின் 2ஆம் பாகமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்த படம் ’ஜிகர்தண்டா’.

இந்த படம் 2014ல் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.

இதான் தலைவர்.. பாசிட்டிவ் எண்ணம்.. லவ் யூ தலைவா… – லாரன்ஸ்

இந்த ‘ஜிகர்தண்டா’ இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபைவ்ஸ்டார் கதிரேசன் உடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்த போதும் அந்த வருடத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றார் பாபி சிம்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜிகர்தண்டா’ இரண்டாம் பாக படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Karthik Subbaraj and Lawrence joins for this blockbuster sequel?

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

எனவே படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் சமீபத்தில் ஓர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்..

மக்கள் நடமாட்டம் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை புதிது இல்லை.

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

கதை சொல்லும் விதத்தில், காட்சிகள் வேறுபடும். நானும் ‘கூர்கா’ படத்தை பார்த்து விட்டேன்.

அந்த படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ’மணி ஹெய்ஸ்ட்’ தொடருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

டிரெய்லர் ஒரு மாதிரியாகவும் படம் வேறு மாதிரியாகவும் இருக்கும். நிச்சயமாக ரசிகர்களை முழு அளவில் திருப்தி செய்யும் படமாகவும் ‘பீஸ்ட்’ இருக்கும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

Nelson talks about Thalapathy Vijay’s Beast

சண்டை தீர்வாகாது.. பாராட்டை தலையில் ஏற்றக்கூடாது..; ‘கம்பெனி’ பட விழாவில் பாரதிராஜா பேச்சு

சண்டை தீர்வாகாது.. பாராட்டை தலையில் ஏற்றக்கூடாது..; ‘கம்பெனி’ பட விழாவில் பாரதிராஜா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்….

, “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும்.

இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும்.

ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். பாடல் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும் போது தன்னடக்கத்தோடு பேசினார். அது தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும்.

ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள் ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும்.

நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன். பாராட்டுக்கள் முள்கிரீடம் போன்றது. தலையில் ஏற்றி கொள்ளக்கூடாது.

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லாமே  நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது.

நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம். நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள்.

எனவே அவர்களை மறக்க கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Director Bharathi Raja speech at company audio launch

More Articles
Follows