ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jeevan in paambattam6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது
வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் ”

காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார்.

இது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள்.
வசனம் – பா.ராகவன்
ஒளிப்பதிவு – இனியன் J. ஹரீஸ்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
இணை தயாரிப்பு – A.பன்ணை இளங்கோவன்
தயாரிப்பு – V.பழனிவேல்
மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் V.C.வடிவுடையான்.

மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கல்தா

மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கல்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaltha movieமலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது…
“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வச்சு இந்தப்படம் பண்ணியிருக்கோம். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை சொன்னபிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார். புதுமுக நாயகன் சிவ நிஷாந்த் ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அப்பாவை பற்றி ஒரு அற்புதமான பாடல் வைரமுத்து பண்ணியிருக்கார். இந்தப்படம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது அரசியல் கலந்து இருந்தாலும் ரொம்ப தைரியமா இந்தப்படத்த தயாரிச்சிருக்கார் ரகுபதி சார். ஒரு தரமான கமர்ஷியல் படமா இத உருவாக்கியிருக்கோம். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்திட்டு இருக்கு பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கோம் என்றார்.

தயாரிப்பாளர் ரகுபதி கூறியதாவது..
இது எங்களுக்கு முதல் தயாரிப்பு. இயக்குநர் கதை சொன்ன போது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது மகன் இதில் நாயகனா நடிச்சிருக்கார். படம் நல்லா வந்திருக்கு. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன் என்றார்.

நாயகன் சிவ நிஷாந்த் கூறியதாவது….

ஒரு கமர்ஷியல் படமா மட்டுமில்லாம ஒரு நல்ல தரமான படமாகவும் இந்தப்படம் இருக்கும். இந்தப்படத்தில் நான் அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. எல்ல்லோரும் சேர்ந்து நல்ல படம் பண்ணியிருக்கோம். இதுவரை பார்த்தவங்க எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லியிருக்காங்க. என்னோட நடிப்பு பத்தி மக்கள் என்ன சொல்வாங்கனு பயங்கர எதிர்பார்ப்போட இருக்கேன். படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர்கள் – மலர்க்கொடி ரகுபதி, செ.ஹரி உத்ரா,
ரா.உஷா

இயக்குநர் – செ.ஹரி உத்ரா,

ஒளிப்பதிவு – B. வாசு

படத்தொகுப்பு – முத்து முனியசாமி

இசை – K. ஜெய் கிரிஷ்

பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் வித்யாசாகர்

பாடியவர்கள் – தேனிசை தென்றல் தேவா, செந்தில் கணேஷ் – ராஜலக்‌ஷ்மி, கார்த்திக், வந்தனா ஶ்ரீநிவாஸ், மது பாலகிருஷ்ணன், கானா இசைவாணி, கானா முத்து.

கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ்

சண்டைப்பயிற்சி – கோட்டி

நடனம் – சுரேஷ் S

புகைப்படம் – பா. லக்‌ஷ்மண்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one

டிசைன்ஸ் – பிளசான்.

“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jhanvi kapoorநட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூர், ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும். ஆனால் சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார். தனது கதாப்பாத்திரங்களுக்கு அவர் மிகுந்த பிரயத்தனத்துடன் திரையில் உயிர் தருவதில் வல்லவராக இருக்கிறார். தனது சிறப்பிலும் சிறப்பான நடிப்பை அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து தந்து வருகிறார்.

இந்த 2020 புதிய வருட தொடக்கத்தின் ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பான ஆந்தாலஜி படம் “கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்தில் ஒரு பகுதியில் நடித்துள்ளார். அவரது பிரமிப்பு தரும் நடிப்பு ரசிகர்கள் விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கும் அதே நேரம் மற்ற நடிகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கியுள்ள பகுதியில் இளம் செவிலியராக நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். தனது காதலன் மீது அதிக அன்பு கொண்டவராகவும் ஒரு அபார்ட்மெண்டில் மாட்டிக்கொண்ட பெண்ணின் தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஹாரர் படத்தின் மையமே பயமும் திகிலும் தான். ஜான்வி கபூர் அந்த கதாப்பாத்திரத்தில் ஒன்றி பயத்தையும், திரில் உணர்வையும் நமக்குள் அட்டகாசமாக கடத்தியிருக்கிறார். நடிக்க ஆரம்பித்திருக்கும் இந்த இளம் வயதில், வெகு சில படத்திலேயே ஒரு நல்ல நடிகை எனும் பெயரை பெற்றிருக்கிறார் ஜான்வி கபூர்.

இணையவாசிகள் தொடங்கி டிவிட்டர் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் இருந்து ஜான்வி கபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த வருடத்தின் ஆரம்பமே அவருக்கு அருமையான ஒன்றாக அமைந்திருக்கிறது.

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.

ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.

இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini AR Murugadossரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையாக உருவாகியுள்ளது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் பின்னர் யாரை இயக்குவார் முருகதாஸ்? என கேள்வி தற்போதை கோலிவுட்டில் எழுந்துள்ளது.

நாயகன் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் அவர் அடுத்து இயக்கவுள்ள கதை கிராமத்து கதையாம்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பலாம்.

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu in maanaduதயாரிப்பாளராக இருந்த சுரேஷ் காமாட்சி அண்மையில் வெளியான மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.

தற்போது பாரதிராஜாவின் குற்றப் பரம்பரை படத்தை வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளார்.

இதே சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த நிலையில், மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

More Articles
Follows