தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருண்.சி இயக்கத்தில் விஜய் டிவி வைஷாலினி, மொட்ட ராஜேந்திரன். ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ள படம் ஆறாம் திணை.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஆரி பேசியதாவது…
“இந்தப்படக்குழுவினர் யாரையும் எனக்கு தெரியாது. சிறிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்காக வந்துள்ளேன். அண்ணன் மொட்ட ராஜேந்திரன் இங்கே வரவில்லை.
அவரது பி.ஆர்.,ஓவாக வந்துள்ளேன் என சொல்லலாம்.
சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன். அங்கே பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் பலரும் காணமால் போய், இறந்துபோய் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
பலருக்கு சின்னதாக உதவி செய்வதை விட பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்தமான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இங்கே உங்கள் முன் வாக்குறுதி அளிக்கிறேன். இதேபோல ஒவ்வொருவரும் முன்வந்தால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும்.
கடலுக்குள் செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடுவதற்கு என இன்றைக்கு வெளிநாடுகளில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை இங்கேயும் விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மேலும் படக்குழுவினர வாழ்த்திய ஆரி, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும்.. அதற்காக ஆர்.கே.நகர் வெற்றி மாதிரியா என கேட்காதீர்கள். அது மாயாஜால வெற்றி. ஆர்.கே. நகருக்குள் 2௦ ரூபாய் நோட்டை கொடுத்தாலே கடைக்காரர்கள் மிரளுகிறார்கள். எனக்குத்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுப்போடும் பாக்கியம் கிடைக்கவில்லை” என அரசியலையும் லைட்டாக டச் பண்ணினார்.
இயக்குனர் பேரரசு பேசும்போது,..
பேய் உண்மையிலேயே இருக்கு.. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது. ஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப்படத்தின் தயாரிப்பாளரையும் இந்த பேய் நிச்சயமாக காப்பாற்றும்” என்றார்.
அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது, “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.
அப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்துவந்து மறைந்ததை பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள் சிலரும் அதை பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, அதைப்பற்றி பலபேரிடம் சொல்லி என்னை கிண்டல் செய்துவந்தார்.
இங்கே சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்யவேண்டும்.
பின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டுவரவேண்டும்.. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள்.
இன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.