ஜிவி. பிரகாஷ் குரலுடன் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆரம்பமானது

ஜிவி. பிரகாஷ் குரலுடன் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆரம்பமானது

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் முதல் 5 தொடர்கள் ஆக-23 முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம், தாங்கள் தயாரித்து பெரும்பான்மையான பெண் பார்வையாளர்களை கவர்ந்த ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, முற்றிலும் புதிய கதையம்சத்துடன் குறிப்பாக 2K கிட்ஸ் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அம்சங்களை குறிவைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

ஆறு பிளாட்டுகளில் அருகருகே வசிக்கும் நண்பர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள், பெற்றோருடான நிலைப்பாடு, நட்பு, காதல் சிக்கல்கள் மற்றும் தங்களது பலநாள் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையான வெப் சீரிஸாக இது உருவாகியுள்ளது.

ராஜீவ் கே.பிரசாத் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸின் திரைக்கதையை வே.கி.அமிர்தராஜ் மற்றும் ஜோ ஜார்ஜ் இருவரும் எழுதியுள்ளனர்.

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Aadhalal Kadhal Seiveer web series title song sung by GV Prakash

நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்..; ‘கதிர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் ரஜினி

நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்..; ‘கதிர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் ரஜினி

கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்க்கிறான்.

அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை.

“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

துவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குனர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான படம் ‘கதிர்’.

வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கையாண்டுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ்
இயக்கம் – தினேஷ் பழனிவேல்
இசை – பிரஷாந்த் பிள்ளை
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்
படத்தொகுப்பு – தீபக் த்வாரகநாத்
பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்
சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Rajini plays important role in Kathir movie

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது

பெங்களூரு மாநகரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்து வந்தனர்.

அதன்படி கன்னட நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் நைட் பார்ட்டிக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தாராம்.

சிறையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் மன்னன் தாமஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் தொழில் அதிபர் பரத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிலும் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Actress Sonia Aggarwal arrested in drug case

தமிழக முதல்வருக்கு ‘அடங்காமை’ படக்குழு நன்றி தெரிவிக்க இதான் காரணமா.?

தமிழக முதல்வருக்கு ‘அடங்காமை’ படக்குழு நன்றி தெரிவிக்க இதான் காரணமா.?

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்
இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’.

திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும் விளைவுகளைக் கூறும் கதையாக இது உருவாகியுள்ளது.

ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் கொண்ட இத்திரைப்படத்தில்
ஈழத் தமிழரான ஷெரோன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் .

இத்திரைப்படத்தில்“ உள்நாட்டில நடந்த சண்டையிலே சிக்கி சீரழிஞ்ச பரதேசிகள் நாங்கள்” என்ற வசனங்களோடு அகதி முகாம் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இன்றும் கடந்தகால போரின் வடுக்களோடு தமிழ்நாட்டில் ஈழமக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் “ஈழத்தமிழர்களின் ‘அகதி முகாம்கள்’ இனி ‘மறுவாழ்வு முகாம்கள் ” என அறிவித்தமைக்காக ‘அடங்காமை’ திரைப்படக் குழுவினர் உலகத் தமிழர்களின் சார்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அகதிகள் என்றால் கதியற்றவர்கள் , ஏதிலிகள், ஆதரவற்றவர்கள் நிராதரவானவர்கள் என்று கருதப்பட்டதை மாற்றி இந்த அவலத்தைத் துடைக்கும் வகையில் மறுவாழ்வு முகாம்கள் என்று பெயரிட்டு ஈழத்தமிழர்களை அங்கீகரித்துள்ளார் என்று கூறித் தமிழக முதல்வரை நன்றியுடன் பாராட்டுகிறது ‘அடங்காமை’ படக்குழு.

Adangamai movie team thanked TN government

சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

1990-களில் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தவர் பூனைக் கண்ணழகி சிவரஞ்சனி.

தமிழில் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

‘சின்ன மாப்ள’ படத்தில் சுகன்யாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஊஹா எஎன்ற பெயரில் 1994-ல் “ஆமி” என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான “நந்தி” விருதை பெற்றார்.

தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் மேகா என்பவரை சினிமாவில் நாயகியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவரஞ்சனி.

எனவே சூப்பரான கதை & இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்களாம் இந்த நட்சத்திர தம்பதிகள்.

ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sivaranjani’s daughter to debut as heroine

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

நடிகர் ரஜினிகாந்தை பாராட்டுபவர் யாராக இருந்தாலும் அவரை ஆன்மிகவாதி என குறிப்பிட தவறுவதில்லை.

எவருமே எதிர்பாராத வகையில் 2017 இறுதியில் “ஆன்மிக அரசியலை இந்த தமிழகம் விரைவில் பார்க்கும்” என தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

அதன் பிறகு 2020 இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்தார் ரஜினி.

எனவே எப்போதும் போல ஆன்மிகத்தை மட்டுமே பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில் இனி ரஜினியையும், ஆன்மிகத்தையும் இனி எப்போதுமே பிரிக்க முடியாது.

மன அமைதிக்காக அடிக்கடி இமயமலை செல்வதும் இவரது வாடிக்கைகளில் ஒன்று.

அவ்வப்போது ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசிப்பெறுவதும் ரஜினியின் வழக்கம்.

இந்த நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

Rajinikanth Aishwarya Soundarya met Gurudev Sri Sri Ravi Shankar

Renowned actor @rajinikanth, @soundaryaarajni, @ash_r_dhanush met Gurudev @SriSri Ravi Shankar.

With the one who has dedicated his life towards service to humanity , with his holiness @SriSri Gurudev … an evening to remember forever #divinity #spirituality #peace https://t.co/qF4eDr3TEO

More Articles
Follows