அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aadai director slams Modis Lights off speech in Corono Warகொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனால் இந்திய மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு 10 நாட்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் உரையாற்றினார்.

அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய மக்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர் செய்ய சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Rathna kumar
@MrRathna

வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது

Aadai director slams Modis Lights off speech in Corono War

பொய்யாக ஒரு நிஜத்தை காட்டி மாட்டிக் கொண்ட ‘மாஃபியா’ டீம்

பொய்யாக ஒரு நிஜத்தை காட்டி மாட்டிக் கொண்ட ‘மாஃபியா’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mafia movie in trouble by showing photos of Real incident கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்த மாஃபியா படம் கடந்த 2020 பிப்ரவரி மாதம் வெளியானது.

இப்படத்தின் மேக்கிங் பாராட்டும்படி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் போதை மருந்து கடத்தல் செய்பவருடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறி சிலரின் போட்டோக்களை காட்டியிருப்பார்கள்.

இந்த காட்சியே இப்போது இவர்களை ஒரு பிரச்சினையில் மாட்ட வைத்துள்ளது.

உண்மையில் கனடா நாட்டில் நடந்த புரூஸ் ஆர்தர் என்ற தொடர் கொலையாளியால் கொல்லப்பட்டவர்களின் போட்டோக்கள் அவை என தெரிய வந்துள்ளது.

5 பேரின் புகைப்படங்கள் காட்டப்பட்டது.

அதில் ஒருவரின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் போட்டோவை பயன்படுத்தியுள்ளனர். இது பொறுப்பற்ற செயல் என்று கூறி கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அந்தக் காட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அந்த காட்சியில் உள்ள போட்டோக்கள் மறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த போட்டோ உள்நோக்கமில்லாமல் ஏதேச்சையாக பயன்படுத்தப்பட்டதாக லைகா தெரிவித்துள்ளது.

Mafia movie in trouble by showing photos of Real incident

கொரோனா எதிரொலி: நடிகர்களின் சம்பளத்தை குறைக்க JSK யோசனை

கொரோனா எதிரொலி: நடிகர்களின் சம்பளத்தை குறைக்க JSK யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது தயாரிப்பாளர்களுக்காக மூன்று முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

1, படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து 30 சதவீதம் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

02. இந்த காலக்கட்டத்தில் 3 மாதங்கள் வட்டியோ, இஎம்ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சினிமாவில் உள்ள பைனான்சியர்களும் இதை ஏற்று 3 மாதத்திற்கு வட்டி தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

இயல்பு நிலை திரும்பியதும் நல்ல முறையில் படத்தினை முடித்து வெளியிட உதவியாக இருக்கும்.

03. ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.

அதோடு வெளியீட்டுக்கு தயாராக உள்ள சிறிய படங்கள் வெளியிட முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் மற்ற தயாரிப்பாளர்களின் மனநிலையை உணர்ந்து சொல்கிறேன்.

என தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தெரிவித்துள்ளார்.

தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் பிரசன்னா

தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor prasannaஇளம் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.

நடிகர்கள் தனுஷ், விஷால், விஷ்ணு, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்காத நடிக்காத படத்தையும் தயாரித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படத்தை அப்பட நாயகன் அசோக் செல்வன் அவரின் அக்காவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

விரைவில் நடிகர் பிரசன்னாவும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதை ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.

அந்த படம் ‘கண்ட நாள் முதல் 2’ படமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

100 ரூபா கொடுங்க பாடுறேன்.. ரசிகர்களிடம் SPB கேட்க என்ன காரணம்..?

100 ரூபா கொடுங்க பாடுறேன்.. ரசிகர்களிடம் SPB கேட்க என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நம் அரசு.

இதற்கு கோடிகணக்கில் பணம் தேவைப்படுவதால் மக்களும் நிவாரண நிதியை அளிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் கேட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியை திரட்டுவதற்கு புதிய பாடல் முயற்சியை துவக்கியுள்ளார் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்.

ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை கேட்க விரும்பினால் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தர வேண்டும்.

அதை தன் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்கிறாராம்.

இதுவரை சுமார் 5 லட்சம் வரை அவர் நிதி திரட்டியுள்ளாராம்.

100 ரூபாய் மிகவும் குறைவான தொகை என்பதால் பலரும் கேட்பார்கள். இதனால் நிறைய நிதி திரளும் என்பதே எஸ்பி.பியின் திட்டமாகும்.

100 ரூபாய்க்கு அதிகமாக கொடுப்பவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் எனவும் எஸ்பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கொரோனா போர்: ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு லைட்டை ஆஃப் செய்ய மோடி வேண்டுகோள்

கொரோனா போர்: ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு லைட்டை ஆஃப் செய்ய மோடி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modi asks people to light lamps on 5th April at 9 pm this Sundayகடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் மோடி,

இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ளது.

நாம், எடுக்கும் நடவடிக்கைகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் உருவம்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.

யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

PM Modi asks people to light lamps on 5th April at 9 pm this Sunday

More Articles
Follows