இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’.

இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

4 top heroines join for Director Deekay’s next film

செய்திகளுக்கு தலைப்பிடுவதில் மன்னன் என பெயரெடுத்த வி. ராமசாமி காலமானார்

செய்திகளுக்கு தலைப்பிடுவதில் மன்னன் என பெயரெடுத்த வி. ராமசாமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலைமுரசு (சென்னை பதிப்பு ) ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, ஓய்வு பெற்றிருந்த வி. ராமசாமி அவர்கள் (வயது 87) இன்று (17.07.21) பிற்பகல் 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

வயது மூப்பின் விளைவாக, நோயுற்று கடந்த சில தினங்களாக
உடல் நலம் குன்றியிருந்தார்.

“தலைப்பு போடுவதில் மன்னன்” என்று பெயர் பெற்றவர்.

காலம் தவறாமை, குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு குறித்த நேரத்தில் பத்திரிக்கையை வெளிக்கொண்டுவரும் ஆளுமைத்திறன் கொண்டிருந்தவர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், அவரைத் தொடர்ந்து பா. ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக திகழ்ந்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். அவருடைய பாராட்டுதல்களை நிரம்ப பெற்றவர்.

இப்போது உள்ள வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொலைபேசியில் கொடுக்கும் செய்தியாளர்களின் தகவல்களை மின்னல் வேகத்தில்
எழுதி டைப்பிங் பிரிவுக்கு அனுப்புவதில்
அசகாய சூரராகத் திகழ்ந்தார்.

தமிழ் பத்திரிக்கை உலகம் ஒரு மாபெரும் ஜாம்பவானை இழந்துவிட்டது.

(Contact person son
Balamurughan.R
988463299910,

Bharathi Nagar 1st street, madurevoyal, behind meenakshi dental College)

Malai Murasuu reporter V Ramasamy passes away

லைகா தயாரிப்பில் அதர்வா ராஜ்கிரண் சுரேஷ் துரைசுதாகர் கூட்டணி.; இயக்குனர் இவரா?

லைகா தயாரிப்பில் அதர்வா ராஜ்கிரண் சுரேஷ் துரைசுதாகர் கூட்டணி.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார்.

அதர்வா, ராஜ் கிரண் நடிக்கிறார்கள்.

நாயகியாக முன்னனி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார்.

ராதிகா சரத்குமார், R.K.சுரேஷ், ஜெய பிரகாஷ், துரை சுதாகர் (களவாணி 2 வில்லன்), சிங்கம் புலி, ரவி காலே (கன்னடம்).சத்ரு (கடைக்குட்டி சிங்கம் வில்லன்), பால சரவணன், ராஜ்ஐயப்பா , G.M.குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

லைகா புரடக்ஷன்ஸ் தலைமை செயல் அலுவலர் திரு. G.K.M.தமிழ்குமரன் கட்டமைக்க, நிர்வாக தயாரிப்பை சுப்பு நாராயன்மேற்கொள்கிறார்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான உஸ்தாத் ஓட்டல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிட் -ராஜா முகமது, ஆர்ட் – J.K.ஆண்டனி, காஸ்ட்யூமர்-நட்ராஜ், மேக்கப் மேன்-K.P.சசிகுமாரும், Stills-மூர்த்தி மௌலியும்.

பாடல்கள்-கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடனம்-பாபி ஆண்டனி, தயாரிப்புமேற்பார்வை – M.காந்தன், PRO – சுரேஷ்சந்திரா, ரேகா D’One. காவிரி ஆற்றுப்படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாகஇருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட இருக்கிறது.

யதார்த்தமான குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் விரைவில் ஒரே ஷெட்யூலில் பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

Lyca productions Subaskaran presents Atharvaa Murali starrer a Sarkurnam directorial family entertainer launched

Attachments area

‘காசேதான் கடவுளடா’ படம் ரீமேக்காகிறது..; இந்த படத்தையாவது ‘தில்லு முல்லு’ இல்லாமல் காப்பாற்றுவாரா சிவா.?

‘காசேதான் கடவுளடா’ படம் ரீமேக்காகிறது..; இந்த படத்தையாவது ‘தில்லு முல்லு’ இல்லாமல் காப்பாற்றுவாரா சிவா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காசே தான் கடவுளடா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

கோபு இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

(ஏற்கெனவே ரஜினியின் ‘தில்லு முல்லு’ படத்தின் தரத்தை ரீமேக் என்ற பெயரில் சிதைத்தவர் மிர்ச்சி சிவா. இந்த படத்தையாவது காப்பாற்றுவார் என நம்புவோம்.)

தற்போது இந்த படம் ரீமேக் ஆகிறது. அதன் விவரம்..

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Masala Pix நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் கூறியதாவது…

மிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம்.

நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் “காசே தான் கடவுளடா” படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.

தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது.

குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும் என்றார்.

Mirchi Shiva Priya Anand starrer Director Kannan’s remake of Kasethan Kadavulada shooting commenced

விதார்த் – லக்ஷ்மி பிரியா ஜோடியுடன் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘உறுமீன்’ இயக்குனர்

விதார்த் – லக்ஷ்மி பிரியா ஜோடியுடன் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘உறுமீன்’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பில், All in Pictures சார்பில் T. விஜய ராகவேந்திரா தயாரிக்கும் “Production No.6″ படம் இன்று துவங்கியது.

All in Pictures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T. விஜய ராகவேந்திரா அவர்கள் கொரில்லா, மசாலா படம் மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள பார்டர் என மிகச்சிறந்த படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது அந்த வரிசையில் விதார்த் , கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் தனது அடுத்த தயாரிப்பாக “Production No.6″ தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை “உறுமீன்” படப்புகழ் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி எழுதி இயக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 16 , 2021 இன்று காலை எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இயக்குனர் சக்திவேல் பெரியசாமி இப்படம் குறித்து கூறியதாவது…

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு.

தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்களின் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.

இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த போது, மக்களை கவரும் ஒரு பிரபல நடிகர் இக்கதைக்கு தேவைப்பட்டார்.

கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது, முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும் தான்.

எனக்கு நிச்சயமாக தெரியும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும். லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை.

இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும்.

கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். அவரது நடிப்பு திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக அமைந்துள்ளது.

“டெடி மற்றும் 90 எம் எல்” படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை வீடுகளில் ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர்.

ரேடியோ, தொலைகாட்சி மற்றும் இணைய தளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர் , அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

All in Pictures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T . விஜய ராகவேந்திரா கூறியது…

எங்களது தயாரிப்பில் அருண் விஜய் அவர்களது நடிப்பில் உருவாகிவரும் “ பார்டர் “ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.

இந்த காலகட்டதில், இந்த படத்தின் கதையை கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது, உடனடியாக இப்படத்தை தயாரிப்பதென்று முடிவெடுத்து விட்டேன், அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதை தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன்.

இந்த படத்திற்காக ஒரு சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. . இந்த படம் அமைவதற்கு காரணமாகவும், எந்த வித தடையுமில்லாமல் இந்த படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்தில் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

All in Pictures-க்கு இது ஒரு பிரத்யேகமான படம். படபிடிப்பு இன்று துவங்கியுள்ளது, குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022-ம் ஆண்டின் துவக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

படத்தை எழுதி, இயக்குகிறார், இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி. All in Pictures T விஜய ராகவேந்திரா இப்படத்தை தயாரிக்கிறார்.

அச்சு ராஜமணி -இசை, பாண்டி குமார் S- ஒளிப்பதிவு, சதீஷ்- படதொகுப்பு, ராகுல்- கலை இயக்கம் ஆகியோர் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரியவுள்ளனர்.

விதார்த், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி மற்றும் கருணாகரன் உடன் காமெடி நடிகர் சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Vidharth Lakshmi Priyaa Chandramouli starrer new movie launched

மாலை கண் நோய் போலீஸ்காரராக கிரண் அப்பாவரம்

மாலை கண் நோய் போலீஸ்காரராக கிரண் அப்பாவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரண் அப்பாவரம் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள ‘செபாஸ்டியன் பி.சி. 524’ சிறப்பு பிறந்தநாள் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் கிரண் அப்பாவரம் தெலுங்கு சினிமாவில் தன் மீது கவனம் ஈர்த்தார்.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இளம் நடிகரான கிரண் அப்பாவரம் பல புதிய சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அந்த வரிசையில் அவர் நடித்துள்ள ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அதன் பின்னர் சிறு இடைவெளியில் கிரண் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனை பாலாஜி சாயாபூரெட்டி எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தை பிரமோத் மற்றும் ராஜூ தயாரிக்கின்றனர். நம்ரதா தாரேகர் மற்றும் கோமலி பிரசாத் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்தப் படம் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிரணுக்கு இது முதல் தமிழ் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரின் பிறந்தநாளை (ஜூலை 15) ஒட்டி படத்தின் சிறப்பு லுக் வெளியாகி இருக்கிறது.

சிறப்பு லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் பிரமோத், ராஜூ இணைந்து வெளியிட்டனர். இந்த பிறந்தநாள் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்கள் பிரமோத் மற்றும் ராஜூ,…

“பிறந்தநாள் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஊக்கமளிக்கிறது.

கடந்த கிறிஸ்துமஸின் போதுதான் நாங்கள் முதன்முதலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். அப்போதிருந்தே இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

. ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ரிலீஸ் ஆன பின்னர் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ திரைப்படம் ரிலீஸ் ஆகும். இது முழுக்க முழுக்க ஒரு வணிக சினிமா” என்றனர்.

இயக்குநர் கூறும்போது….

“கிரண் இந்தப் படத்தில் போலீஸ்காரராக நடிக்கிறார். செபா என்ற பெயரில் ஏற்று நடித்துள்ள இந்தப் பாத்திரம் அற்புதமானது.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. கிரண் பலவிதமான பாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை நிரூபித்து வருகிறார்.

இப்படத்தில் ஜிப்ரானின் இசை தனிச்சிறப்பானது. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அவர் சிறப்பித்துள்ளார். இந்தப் படம் பரவலாக ரசிகர்களைப் பெறும் என்றார்.

கிரணின் பிறந்தநாளான ஜூலை 15ல் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ சிறப்பு பிறந்தநாள் லுக், ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ படத்தின் டீஸர், சம்மதமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

இதுதவிர கோடி ராமகிருஷ்ணனின் மகள் கோடி திவ்யதீப்தி தயாரிக்கும் படம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. மணி சர்மா அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதை கார்த்திக் ஷங்கர் தயாரிக்கிறார். இந்தப் படம் கிரணின் ஐந்தாவது படமாக இருக்கும்.

‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்திற்கு டிக்கெட் ஃபேக்டரி டிஜிட்டல் பார்ட்னராக ஒப்பந்தமாகியுள்ளது.

ராஜ் கே நல்லி படப்பிடிப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக கிரண் பணியாற்றியுள்ளார்.

விப்லவ் நியாஷதம் எடிட்டிங் வேலை செய்துள்ளார். பிரமோத், ராஜூ தயாரிக்க சித்தா ரெட்டி பி இணை தயாரிப்பாளராக உள்ளார்.

படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி சய்யாபூரெட்டி.

Birthday look of Kiran Abbavaram’s ‘Sebastian P.C. 524’ receives a huge response.

More Articles
Follows