தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் பல உயிர்களை தினம் தினம் இழந்து வருகிறோம்.
திரையுலகிலும் அடுத்தடுத்து மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் சினிமா டப்பிங் யூனியன் முன்னாள் தலைவர் வீரமணி காலமானார்.
இது தொடர்பாக டப்பிங் யூனியன் வெளியிட்ட அறிக்கையில்…
ஆர்.வீரமணி அவர்கள் பல வருடங்களாக டப்பிங் யூனியனில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தவர்.
2004-2006 வரை டப்பிங் யூனியனின் தலைவராகவும் இருந்தவர்.
அமரர் எம்.ஆர்.ராதா அவர்களின் நாடக கம்பெனியில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கிய போது தன்னை மும்முரமாக அதில் ஈடுப்படுத்திக் கொண்டவர்.
பல டப்பிங் கலைஞர்களை அறிமுகம் செய்தவர். அனைவராலும் பெரும் மதிக்கப்பட்டவர்.
கொரோனா பாதிப்பினால்
உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவர் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை அனைத்து டப்பிங் கலைஞர்கள் சார்பாகவும் டப்பிங் யூனியன் மற்றும் அதன் தலைவர் டத்தோ”ராதாரவி அவர்கள் சார்பாகவும் மிக வருத்தத்தோடு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
S.I.C.T.A.D.A.U.
SOUTH INDIAN CINE TV ARTITES AND DUBBING ARTISTES UNION
EX dubbing union head passed away due to corona