தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் சென்னை 28 படத்தின் மூலம் படு பாப்புலர் ஆனார் டைரக்டர் வெங்கட் பிரபு.
இதனையடுத்து அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, கார்த்தி நடித்த பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தற்போது ஆர். கே. நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும், விரைவில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.