‘வாட்ஸ் அப்’ அவ்ளோதானா..; இனிமே ‘அரட்டை’ அடிக்கலாம்.. Install பண்ணீட்டீங்களா..?

Arattai Appவாட்ஸ் அப் என்ற செயலி பலரது வாழ்க்கையை மாற்றிவிட்டது எனலாம்.

காலையில் எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் வாட்ஸ் அப் ஆன் செய்து பார்ப்பதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.. (நான் உட்பட)

கடந்த 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது.

மேலும் புதிய ப்ரைவசி பாலிசியால் பயனாளர்கள் பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற பிற செயலிகளை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் தமிழக பன்னாட்டு நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ செயலி புதிதாக களமிறங்கியுள்ளது.

‘அ’ என்ற தமிழ் மொழியின் முதல் எழுத்தை லோகோவாக வைத்துள்ளனர்.

இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்திருக்கிறார்களாம்.

இன்னும் சில வாரங்களில் இந்த செயலி முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zoho develops WhatsApp alternative ‘Arattai’

Overall Rating : Not available

Latest Post