தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மனிதனின் கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? சொல்ல வரும் யோகிபாபு & லக்ஷ்மி
புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ் மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை.
யோகிபாபு, லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி
நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.
மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.
அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.
மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான்.
இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.
யோகிபாபு லக்ஷ்மி மேனன் காளிவெங்கட் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்திருக்கிறார்.
செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.
Yogibabu and Lakshmi menon starring Malai release