தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரே படத்தில் இரட்டை வேடங்கள், மூன்று வேடங்கள் என நம் அபிமான நடிகர்களை பார்த்திக்கிறோம்.
ஆனால் 5க்கும் மேற்பட்ட வேடங்களில் சிவாஜி மற்றும் கமல் இருவரும் மட்டுமே நடித்துள்ளனர்.
நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருத்தார். தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல்.
தற்போது இவர்களை மிஞ்சும் வகையில் 11 வேடங்களில் நடிக்கவுள்ளாராம் யோகிபாபு.
புகழ்மணி இயக்கும், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், ராம்சுந்தர் – பிரியங்கா ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தை கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார்.
இதில் ”காதலர்களை சேர்த்து வைப்பதற்காக, யோகிபாபு, 11 விதமான, ‘கெட் அப்’களில் தோன்றுகிறாராம்.