தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
,
கொரோனா காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள் புதுச்சேரி மக்கள்.
மாநில வாக்குப்பதிவும் 80% நெருங்கியது.
தேர்தல் முடிவின் படி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது.
மே 7ஆம் தேதி என் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இதனால் சட்டசபை எப்போது கூடும்? எனத் தெரியவில்லை.
இந்த கேப்பில் துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை கேட்டது பாஜக.
துணை முதல்வர் பதவி என்பது இதுவரை புதுச்சேரியில் கிடையாது என பேட்டியளித்தார் முதல்வர் ரங்கசாமி.
அடுத்த நாளே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். (ஒரு மாநில முதல்வர் தன் மாநில அரசு & தனியார் மருத்துவமனைகளை நம்பவில்லை என்பது வேறுகதை. அப்படி என்றால் மக்கள் நிலை?)
இந்த சந்தடி சாக்கில்தான் பாஜக தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
திடீரென தன் கட்சி சார்பில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இப்போது 6+3=9 எம்எல்ஏக்கள் என பலம் கூடியது.
இவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்களில் 2-3 பேரை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.
இதனால் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறது.
அப்போது தான் மே 17ஆம் தேதி குணமாகி சென்னையில் இருந்து புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி.
ஆனாலும் பாஜகவின் சதிகளால் ரங்கசாமி தலைமையிலான அமைச்சர்கள் இன்னமும் பதவியேற்கவில்லை.
தேர்தல் முடிவு வந்து 3 வாரங்கள் ஆகியும் புதுச்சேரி மாநில நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றும் புதுச்சேரி & காரைக்காலில் வேகமாக பரவி வருவதால் பலர் உயிரிழக்கின்றனர்.
இதனை கட்டுப்படுத்த அரசும் இல்லை.. அமைச்சரும் இல்லை.. எந்த முயற்சியும் இல்லை.
கொரோனா ஊரடங்கால் மஞ்சள் ரேசன் கார்டு மக்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட எந்த நிவாரணமோ வந்து சேரவில்லை.
திமுக காங்கிரஸ் கட்சிகளும் மற்ற அரசியல்வாதிகளும் மக்கள் நலனில் அலட்சியமாகவே உள்ளனர்.
வாக்களித்தவர்கள் இளிச்சவாயர்கள்.? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது..
Worst Politicians and Ruling Party in Puducherry