2 வாரம் எல்லா கடையும் மூடுறோம்..; டாஸ்மாக்ல மட்டும் கொரோனா வராதா..? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேள்வி

கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

எனவே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வார நாட்களில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து பெரிய கடைகளும் அடைக்கப்பட வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 15 நாட்கள் முழு ஊரடங்கு என்று அரசாங்கம் முடிவெடுத்தால் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அதே சமயம்.. எந்த அடிப்படையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை என கேட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலில் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கொரோனா தொற்று, அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போது ஏற்படுகிறது என்பது ஏற்படையது அல்ல.

அரசின் இச்செயல் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.

Will TN Govt close Tasmac shops for 2 weeks

Overall Rating : Not available

Latest Post