புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு..; ஸ்டாலின் நன்றி

edappadi palanisamyதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்… புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்தை சேர்த்திருப்பது வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!

இவ்வாறு முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post