பிகில் விழாவில் நடக்காத விஷயம் தர்பார் விழாவில் நடக்குமா?

பிகில் விழாவில் நடக்காத விஷயம் தர்பார் விழாவில் நடக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Nayanthara participate in Rajinis Darbar Audio launchசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டைரக்டர் ஏஆர். முருகதாஸ் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள படம் தர்பார்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 7ஆம் தேதி த நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

அப்போது தான் இசையமைத்த பாடல்களை மேடையில் லைவ் பெர்மான்ஸ் செய்யப் போகிறாராம் அனிருத்.

இந்த நிலையில் இதுவரை எந்தவொரு நிகழ்வுக்கும் வராத நயன்தாராவை தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம்.

அண்மையில் நடைபெற்ற பிகில், சைரா உள்ளிட்ட எந்த பட இசை விழாவுக்கும் செல்லாத நயன்தாரா இந்த முறை ரஜினிக்காக வருவாரா? என்பதை பார்ப்போம்.

Will Nayanthara participate in Rajinis Darbar Audio launch

கட்அவுட் வேணாம்.; ஆனா கம்முன்னு இருக்காதீங்க.. – விஷால் வேண்டுகோள்

கட்அவுட் வேணாம்.; ஆனா கம்முன்னு இருக்காதீங்க.. – விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal request his fans do not keep any banners on Action releaseசில நாட்களுக்கு முன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் மரணமடைந்தார்.

இதனையடுத்து சினிமா ரசிகர்கள் பலரும் தங்கள் நடிகரின் படம் ரிலீசின் போது பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

யாருக்கு என்ன நடந்தால் என்ன? என்று அரசியல்வாதிகள் பேனர்களை வைத்துக் கொண்டு இருப்பது வேறு கதை.

இந்த நிலையில் வருகிற நவ. 15ஆம் தேதி சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் தமன்னா இணைந்துள்ள ஆக்சன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தன் ரசிகர்களுக்கு விஷால் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அதில் … ஆக்சன் படம் வெளியாகும்போது பேனர்கள், கட் அவுட்கள், தோரணங்கள் வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். அதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Vishal request his fans do not keep any banners on Action release

புது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1” படக்குழு

புது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1” படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V1 movie posterஒவ்வொரு படத்திற்க்கும் புதுப்புது விளம்பர யுக்தியை வெளிபடுத்தி அதில் வெற்றி பெறுவது என்பது சுலபமான விஷயமில்லை. அதிலும் முற்றிலும் புதுமுகங்கள் உள்ள படமென்றால் விளம்பர யுக்திகான மெனக்கெடல் அதிகமாகவே இருக்க வேண்டும். அந்த சவாலான பரிட்சையில் “வி 1” படக்குழு சாதுர்யமாக வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் கதை இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் என்பதால் அதையே கருவாக எடுத்துகொண்டு தங்கள் “வி 1” போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தனர். குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் 8 எழுத்துக்கள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் என்றும் கூறியிருந்தனர்.

சரியான விடையை தங்கள் டிவிட்டர் அக்கௌண்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அளிக்க படும் என்று கூறியிருந்தனர். விடையை கண்டறிந்த பலர் அந்த சரியான பதிலை அனுப்பிவைத்தனர். “Bad Touch” என்ற பதிலை அனைவரும் டிவிட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிகழ்வு “வி 1” படக்குழுவிற்கு பெறும் மகிழ்ச்சியை அளித்தது மட்டுமன்றி தங்களின் விளம்பர யுக்தி வெற்றி பெற்றதை எண்ணி அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் தங்களது முதல் போஸ்டரிலும் இது போன்ற புதிர் வைத்து குலுக்கல் முறையில் வென்றவருக்கு “வி 1” படக்குழுவினர் ஏ.சி பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள படக்குழுவினர் “வி 1” டிசம்பர் 6 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகவுள்ளது.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
இசை – ரோனி ரப்ஹெல்
படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
கலை – VRK ரமேஷ்
SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

test

test

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

test 123

முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranveer as kapil devநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்.

’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.

அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.

ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே தெரியாத வகையில் அமைந்திருந்தது.

1983 ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்று முதன்முதலாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்த தருணங்களை

ரன்வீர் சிங்க் கபில் தேவாக நடிக்க, தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக ஒரு பிரம்மாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் ஒரு விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்க, இதனை வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

psyco posterஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது…

நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் தற்காலத்தில் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்தோம்.

இப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக்கொள்ளும் தருணங்கள் படமுழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இசை இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகிய முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More Articles
Follows