சிம்புவால் வந்த வம்பு.. தயாரிப்பாளர்கள் சங்கம் & பெப்சி மோதல்.; நடந்தது என்ன.? முழு விவரம் இதோ..

சிம்புவால் வந்த வம்பு.. தயாரிப்பாளர்கள் சங்கம் & பெப்சி மோதல்.; நடந்தது என்ன.? முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது பல்வேறு புகார்கள் கொடுத்துள்ளனர்.

ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காவதன் அசராதவன்’ படத்திற்காக சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இவையில்லாமல் 6 வருடங்களுக்கு முன் கொடுத்த 1 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

இது நம்ம ஆளு படத்தின் வெளியிட்டீன்போது பண உதவி செய்த வகையில் 3.50 கோடி ரூபாயை தனக்குத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளியே கேட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த பிரச்சினைகளையும் தாண்டி சிம்பு தனது படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வேறு தயாரிப்பாளர்களும் வாய்ப்புகள் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

தற்போது எப்படியாவது பணத்தைத் திரும்பப் பெற்று விடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சிம்புவின் புதிய படத்திற்கு பெப்சி தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என கடிதம் அனுப்பியது.

இதையொட்டி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதில கலந்து கொண்ட இயக்குநர் செல்வமணி தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்.

ஆனால் இரண்டே நாட்களில் கௌதம் மேனன் இயக்கும் சிம்புவின் புதிய படம் வெந்து தணிந்தது காடு’ பட ஷூட்டிங்கிற்கு பெப்சி சங்கத்தினர் ஆதரவு கொடுத்தனர்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சங்கத்தினர் பெப்சி தலைவர் செல்வமணியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

“இப்போ நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு ஷெட்யூல் போகட்டும். அதன் பின்பு பேசித் தீர்ப்போம்..” என்று சொன்னாராம் செல்வமணி.

இதனால் மீண்டும் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் “செல்வமணி பெப்சியின் தலைவர் பதவியில் இருக்கும்வரையிலும் அதற்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தனர்.

படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் பணியில் அமர்த்தலாம் என முடிவெடுத்தனர்.

இதனால் பெப்சி சங்கத்தினர் கலக்கமடைந்தனர்.

உடனே பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் உள்ள ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம் எடுத்ததாக பத்திரிகைகளில் அறிவித்துள்ளார்கள்.

இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் முறைப்படி அனுப்பவில்லை.

சம்மேளனத்தின் தலைவராகிய நான் தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்.

இது முற்றிலும் தவறான தகவலாகும். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள அனைவரையும் விட தயாரிப்பாளர் நலனுக்காக நாங்கள் பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்.

தற்போது படங்களை தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக உள்ள முரளி எங்கள் இனிய நண்பர் மறைந்த இயக்குநர் இராமநாராயணனின் புதல்வர் ஆவார். அவர் மீது உள்ள மரியாதையில் நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை.

இருப்பினும் நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நடந்த விஷயங்கள்….

நடிகர் சிம்பு சம்பந்தப்பட்டு 4 தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இருப்பதால் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தை கேட்டுக் கொண்டது. சம்மேளனமும் அதன்படியே நடந்து வந்தது.

இதற்கிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வெளியூரில் படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம் என்றும், மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுவதற்குள் அனைத்து பிரச்சினைகளையும் பேசி சரி செய்த பிறகே சென்னையில் படப்பிடிப்பை துவங்குவோம் என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஐசரி கணேசனின் கோரிக்கையை சம்மேளனம் தெரிவித்தது.

தயாரிப்பாளர்கள் சங்கமும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும் அப்படப்பிடிப்பில் கலந்துக் கொண்டோம். இதில் சம்மேளனத்தின் தவறு ஏதும் இல்லை.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கே.செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் மீறவில்லை.

ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நியாயத்திற்கு புறம்பாக எங்கள் சம்மேளன தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தமிழ்நாடு முதல்வரிடம் முறையிட்டு தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமுகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why Simbu is reason for Producers Council and FEFSI clash

முதன்முறையாக விஜய்யுடன் இணையும் செல்வராகவன்.; நெல்சனின் நெக்ஸ்ட் ப்ளான்

முதன்முறையாக விஜய்யுடன் இணையும் செல்வராகவன்.; நெல்சனின் நெக்ஸ்ட் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலைய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் இணைந்துள்ளார்.

இதில் விஜய்யுடன் மூன்று வில்லன்கள் மோதவுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. (இப்படத்தில் இவரின் கேரக்டர் என்னவென்ற தகவல் வெளியாகவில்லை.)

இதனையடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக செல்வராகவன் நடித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Selvaraghavan to play villain in Beast

கல்யாண் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி

கல்யாண் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் கல்யாண்.

இவர் இதற்கு முன்பு ’கத சொல்லப் போறோம்’, பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கியவர்.

கல்யாண் இயக்கவுள்ள இந்த புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் தேவதர்ஷினி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று போடப்பட்டு் புதுச்சேரியில் தொடங்கியது.

Prabhu Deva and Aishwarya Rajesh joins for a new film

JUST IN 3 நாட்களுக்கு வழிபாட்டுதலங்கள் தடை..; ஆகஸ்ட் 16 முதல் மெடிக்கல் காலேஜ்.. பள்ளிகள் எப்போது..? இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

JUST IN 3 நாட்களுக்கு வழிபாட்டுதலங்கள் தடை..; ஆகஸ்ட் 16 முதல் மெடிக்கல் காலேஜ்.. பள்ளிகள் எப்போது..? இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

ஆக.16 முதல் மருத்துவக்கல்லூரிகள் செயல்படும்

ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல், மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் செயல்பட அனுமதி.

மருத்துவம் சார்ந்த அனைத்து கல்லூரிகளும், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி

மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அனுமதி.

இறைச்சி, மீன் விற்பனைக்கு கட்டுப்பாடு

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில், மக்கள் கூடுவதை தவிர்ப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்

இறைச்சி, மற்றும் மீன் சந்தைகளில், திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக செயல்பட மட்டுமே அனுமதி.

3 நாட்களுக்கு வழிபாட்டுக்குத் தடை

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிப்பாட்டிற்குத் தடை

அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 3 நாட்களுக்குத் தடை

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு..?

9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்காக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு.

ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன், கொரோனா வழிகாட்டுதல்.

நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க உத்தேசம்.

பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

அவசிய தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்

பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – தனிநபர் இடைவெளியும் கட்டாயம்

மாஸ்க் அணியாவிட்டாலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும்

கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும், அவசர அவசியமாகும்

எனவே, தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க முதலமைச்சர் கோரிக்கை.

MK Stalin extends TN Lock down for next 2 weeks

ஷைன் டாம் சாக்கோ உட்பட விஜய்யுடன் மோதும் மூன்று டெரர் வில்லன்ஸ்

ஷைன் டாம் சாக்கோ உட்பட விஜய்யுடன் மோதும் மூன்று டெரர் வில்லன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலைய பகுதிகளில் ஒநடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் இணைந்துள்ளார்.

இதில் விஜய்யுடன் மூன்று வில்லன்கள் மோதவுள்ளனர் என கூறப்படுகிறது.

எனவே மீதமுள்ள வில்லன்கள் யார்.? என்ற விவரங்கள் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Malayalam actor joins Vijay’s Beast shoot

ருத்ரன் & அதிகாரத்தை தொடர்ந்து லாரன்ஸின் தூள் கிளப்பும் ‘துர்கா’ லுக்

ருத்ரன் & அதிகாரத்தை தொடர்ந்து லாரன்ஸின் தூள் கிளப்பும் ‘துர்கா’ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அந்த படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்கு கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு.

பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.

அவர் அடுத்தாக தனது தாயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘துர்கா’.

விரைவில் இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவுப்பு வெளியாகும்.

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raghava Lawrence in new film is titled Durga

More Articles
Follows