விஜயகாந்த்-கமல் வழியில் இல்லாமல் தனி வழியில் செல்லும் ரஜினி

விஜயகாந்த்-கமல் வழியில் இல்லாமல் தனி வழியில் செல்லும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Rajinikanth select Coimbatore to conduct his political meetஇந்திய சினிமாவில் ஜெயித்த ஹீரோக்கள் அரசியல் களத்தில் இறங்கி வருவது கால காலமாக நடந்து வருகிறது.

அதுவும் தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாத படி பின்னி பிணைந்து கிடக்கிறது.

விஜயகாந்த் தன் தேசிய முற்போக்கு திராவிட கட்சியை மதுரையில் தொடங்கினார்.

அதனையடுத்து இவர் தற்போது சட்டசபையில் எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இவரும் மதுரை மாநகரில் தன் முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளார்.

இவர் விஜயகாந்த், கமல்ஹாசன் அவர்களை போல் மதுரை மாநகரில் தன் அரசியல் மாநாட்டை நடத்தாமல் கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்த மாநாடு அடுத்த ஜீன் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

Why Rajinikanth select Coimbatore to conduct his political meet

kamal vijayakanth meet

BREAKING: நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; ஜுன் மாதம் அரசியல் அதிரடி

BREAKING: நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; ஜுன் மாதம் அரசியல் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth plans to conduct his political meet on June 2018 at Coimbatoreரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து இன்று தன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் தன் முதல் கட்சி மாநாட்டை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

பொதுவாக திருச்சி மற்றும் மதுரையில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் மக்கள் மன்றம் ஆன பின்னர் கோவை மாநகரில் அதிகப்படியான நபர்கள் இணைந்துள்ளதால், அங்கே தன் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் கட்சி என இரட்டை குதிரைகளில் எம்ஜிஆர் பாணியில் தன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Rajinikanth plans to conduct his political meet on June 2018 at Coimbatore

Rajini meet at poes garden

ரஜினி படத்தில் நடித்து அவரை கவர்ந்த 3 வில்லன்கள் இவர்கள்தான்

ரஜினி படத்தில் நடித்து அவரை கவர்ந்த 3 வில்லன்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis favorite baddies from his movies Raghuvaran Ramya Krishnan and Nana Patekarஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 40 ஆண்டு காலமாக ஜொலித்து வருகிறார்.

இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இவரது படங்களில் பல வில்லன்கள் நடித்திருந்தாலும் இதுவரை அவருக்கு பிடித்த வில்லன்கள் 3 பேர்தானாம்.

பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன், படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் என்றார்.

இந்த தகவலை அவர் காலா பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே தெரிவித்தார்.

Rajinis favorite baddies from his movies Raghuvaran Ramya Krishnan and Nana Patekar

கபாலி என் படமல்ல; காலா-தான் என் படம்.. ரஜினி ஓபன் டாக்

கபாலி என் படமல்ல; காலா-தான் என் படம்.. ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali is Director Ranjiths movie Kaala is my movie says Rajinikanthஅபூர்வ ராகங்கள் தொடங்கி கபாலி வரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இதுவரையில்லாமல் இதில் கபாலி படத்தில் தன் ஒரிஜினல் நரைத்த தாடியுடன் நடித்திருந்தார்.

இதுபற்றி அவர் காலா பட இசை வெளியீட்டில் கூறுகையில்….

கபாலி படத்தின் கதையை ரஞ்சித் என்னிடம் கூறியபோது… ஒரு டான் கதை இருக்கிறது என்றார். பாட்ஷா தொடங்கி நிறைய கதைகள் அதுபோல் வந்துவிட்டது. எனக்கு அது வேண்டாம் என்றேன்.

இல்லை இது மலேசியா வாழ் தமிழர்கள் பற்றிய டான் கதை என்றார்.

முதல் பாதியில் விறுவிறுப்பாக இருக்கும் கதை பின்னர் 2ஆம் பாதியில் தன் மனைவியை தேடிக் கொண்டே போவார் கபாலி.

தேடுவார்… தேடுவார்.. தேடுவார் என்றே சொல்லிக் கொண்டே இருந்தார். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

பின்னர் என் நெருங்கிய நண்பர் தானுவிடம் அந்த கதையை சொல்ல சொன்னேன். அவருக்கு இந்த கதையை மிகவும் பிடித்துவிட்டது.

அதன்பின்னர் ஒத்துக் கொண்டேன். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் கபாலி படம் என் படமல்ல. அது ரஞ்சித் படம். ஆனால் காலா படம் என் படம்.

என் ரசிகர்களை நினைத்தே நான் எல்லா கதைகளையும் கேட்பேன். அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் காலாவில் இருக்கும்.” என்றார்.

Kabali is Director Ranjiths movie Kaala is my movie says Rajinikanth

ரஜினி முன்னிலையில் பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்

ரஜினி முன்னிலையில் பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush reaction to Bharathiraja controversy speech about Rajiniரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், அனிருத் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தனுஷ் பேசுகையில்…

“நாம் மக்களிடம் பிரபலமாக இரு வழிகள் உண்டு. சிலர் கடுமையாக உழைத்து உச்சத்திற்கு வருகிறார்கள். ஆனால், உச்சத்தில் இருப்பவர்களை விமர்சித்தால் உச்சத்திற்கு வரலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ரஜினியால் வாழ்ந்தவர்கள், அவரால் சம்பாதித்தவர்களே அவர் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

உங்களை விமர்சனம் செய்தவர்களுக்கு காலா இசை வெளியீட்டு அழைப்பிதழை கொடுக்கலாமா என்று ரஜினியிடம் கேட்டேன்.

அதற்கு எல்லோருமே என்னுடைய நண்பர்கள் தான். எல்லாரையும் அழையுங்கள் என்றார் ரஜினி. இதுதான் அவரது பெருந்தன்மை” என்றார்.

இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டவர்கள் ரஜினியை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.

நான் தான் ரஜினிக்கு வசனங்கள் சொல்லிக்கொடுத்து அவரை நடிக்க வைத்து வளர்த்துவிட்டேன் என பாரதிராஜா அண்மையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் தனுஷ் இப்படி பேசினார் என்பது இங்கே கவனித்தக்கது.

Dhanush reaction to Bharathiraja controversy speech about Rajini

நதிகளை இணைத்துவிட்டு அடுத்த நாளே உயிர் விட தயார்; ரஜினி உருக்கமான பேச்சு

நதிகளை இணைத்துவிட்டு அடுத்த நாளே உயிர் விட தயார்; ரஜினி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Linking Southern Rivers My Only Dream says Rajini at Kaala audio launch

சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய ரஜினிகாந்த்…

இது காலா படத்தின் இசை வெளியீட்டு விழா போல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் உள்ளது.

என்னுடைய படத்தில் சிவாஜி படத்திற்கு தான் இறுதியாக வெற்றி விழா நடைபெற்றது.

அப்போதைய முதல்வர் கருணாநிதி எனது சிவாஜி பட திரைப்பட வெற்றி விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடையில் பேசியும் இருந்தார்.

75 வருடமாக தமிழக மக்கள் அந்த குரலை கேட்டு கொண்டு இருந்தனர்.

தற்போதும் அந்தக் குரலை கேட்பதற்கு கோடிக்கணக்கான தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர் விரைவில் பேசுவார் என நம்புகிறேன்.

நான் கங்கையை காணவே அடிக்கடி செல்கிறேன். என் வாழ்க்கையில் கனவுகளில் ஒன்று நதி இணைப்புகள்தான்.

தென்னிந்திய நதிகளையாவது இணைத்து விட்டு அடுத்த நாளே நான் கண் மூட (உயிரை விட) தயார்.

வாழ்க்கையிலும் சரி, திரைப்படத்திலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது.

ஒரு படம் ஓடவில்லை என்றால் ரஜினி முடிந்துவிட்டான் என சொல்கிறார்கள். இதை 40 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

20 வருடங்கள் ஓடலாம். 30 வருடங்கள் ஓடலாம். இவன் என்னய்யா ஓடிக்கிட்டே இருக்கான் என்கிறார்கள்.

நான் என்ன செய்ய.? நான் ரசிகர்களாலும், ஆண்டவனாலும் நான் 40 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.” என பேசினார் ரஜினிகாந்த்.

Linking Southern Rivers My Only Dream says Rajini at Kaala audio launch

Kaala audio launch photos

More Articles
Follows