நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

இந்தாண்டு 2021 கொரோனா 2வது அலையில் உயிர் சேதம் அதிகமாகி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் உயிர்கள் இழப்பை பார்க்கிறோம்.

இந்த நிலையில் ஊரடங்கில் கிட்டத்தட்ட 40-45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது நாளை ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நிதானமாக இருக்கும் மக்களே நிறைய இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

இதில் போதையில் இருக்கும் குடிகாரர்கள் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள்..? இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகுமே தவிர சற்றும் குறையாது.

டாஸ்மாக் திறப்பு அறிவிப்பை மது பிரியர்கள் வரவேற்றாலும் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர்.

கடந்தாண்டு அதிமுக அரசு டாஸ்மாக்கை திறந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது அப்போதைய எதிர்க்கட்சி திமுக.

திமுக கட்சியினர் ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு 10-05-2020 காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் டாஸ்மாக் கடை திறப்புக்கு அன்றைய அதிமுக அரசை கண்டித்து இருந்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்பதை வன்மையாக கண்டித்திருந்தார்.

“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்”

இவ்வாறு பதிவிட்டு இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இவையில்லாமல் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் சந்திப்பில் கூட “சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்.. நான் அடிப்பட்டு அனுபவப்பட்டு சொல்றேன். மதுவால் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்” என பேசியிருந்தார் ரஜினி.

கடந்தாண்டு டாஸ்மாக் திறப்புக்கு அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி இந்தாண்டு திமுக அரசை கண்டிக்கவில்லை.

மனதில் பட்டதை அதிரடியாக சொல்லும் சூப்பர்ஸ்டார் இன்னும் மௌனம் காப்பது ஏன்..?

திமுக சார்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

ஒருவேளை அவரது மௌனத்திற்கு காரணம் இதுதானா?

உங்கள் ரசிகர்களுக்கு நீங்க தான் சார் ரோல் மாடல்.. நியாயமா இருங்க ரஜினி சார்..!

Why Rajini is silent in TASMAC opening issue during lockdown

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *