தேர்தல் 2021 : ஓட்டு போட சைக்கிள் ஓட்டி வந்த நடிகர் விஜய்..; ஓ.. இதான் காரணமா?

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார்.

அவர் வந்ததை கண்டதும் அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜய்யை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் தனது வாக்கை செலுத்தினார் தளபதி விஜய்.

கருப்பு சிவப்பு கலர் சைக்கிளில் விஜய் வந்ததால் அவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக வந்துவிட்டதாக சிலர் புரளியை கிளப்பினர்.

விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்? என்பதை அவரது பிஆர்ஓ தரப்பில் விசாரித்தபோது…

“வாக்குச்சாவடி விஜய் வீட்டிற்கு அருகில் உள்ளதால் மற்றும் கார் அங்குள்ள சாலையில் செல்ல முடியாது என்பதால் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்… வேறு எந்த காரணமும் இல்லை..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why Actor Vijay came in Cycling for Casting Vote in Election 2021

Overall Rating : Not available

Latest Post