மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட
வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்பட டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சின்னத்திரை புகழ்
விஜே சித்திரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look) ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது.

இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது.

தற்போது வெளிவந்த டீஸர் (Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் டீஸர் (Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான
திரு. ஜெ. சபரிஷ் அவர்கள் கூறியதாவது “நம்மிடையே வி.ஜே சித்து தற்போது இல்லையென்றாலும்.. அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

VJ Chithra’s Calls teaser records

#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம்..; மாஸ்டர் & ஈஸ்வரன் ரிலீசாகுமா?

#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டனம்..; மாஸ்டர் & ஈஸ்வரன் ரிலீசாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்து வருகினலறனர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்.?

கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டவற்றை குறிப்பிட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி என்ற உத்தரவை நம்பியே மாஸ்டர் & ஈஸ்வரன் படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருந்தன.

தற்போது இப்படி ரிலீஸில் சிக்கல் எழலாம் எனத் தெரிகிறது.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறதோ..?

Central Govt asks TN Govt to withdraw 100% occupancy in theatres

சிம்பு வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திடீர் போராட்டம்

சிம்பு வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திடீர் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைங்குகளில் ரிலீசாகிறது.

ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பானது.

எவருடைய அட்வைஸ் கேட்காதீர்கள்… இனிமே பேச்சு இல்ல. செயல்தான்… என பேசினார்.

இதன் பின்னர் இப்பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 6 மாலை நேரத்தில் சிம்பு வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் நாகு சதீஷை மாற்ற கோரி சிம்பு வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிம்பு

IMG-20210106-WA0085

#Simbu

Fans protest near Simbu house

விவசாயிகளுக்கு உதவ பழம் காய்கறிகளால் ‘பேஷன் ஷோ’..; ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இல் இடம் பிடித்தது!

விவசாயிகளுக்கு உதவ பழம் காய்கறிகளால் ‘பேஷன் ஷோ’..; ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இல் இடம் பிடித்தது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fruits fashion showவிவசாயிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவை “சங்கமம் 2020 திருவிழா” என்கிற பெயரில் நடைபெற்றது.

இதில் 35 ஒப்பனைக் கலைஞர்களை வைத்து பழம் மற்றும் காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் ஒப்பனை செய்யப்பட்டு மாடல்கள் பங்கேற்றனர்.

இது வேறு யாரும் இதுவரை செய்யாத முயற்சி என்பதால் இந்த நிகழ்வு “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியை ஒப்பனைக் கலைஞராக 21 வருட அனுபவம் கொண்ட இலங்கேஸ்வரி முருகன் நடத்தினார்.

Fruits Fashion show in India book of records

சூரி ஹீரோவாகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு வெயிட்டான ரோல்.!

சூரி ஹீரோவாகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு வெயிட்டான ரோல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soori vijay sethupathi‘அசுரன்’ படத்தை அடுத்து சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன்.

இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிகிறார்.

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையின் தழுவல் இப்படம் என கூறப்படுகிறது.

இப்பட சூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது.

இப்பட முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

கடும் குளிரில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பாரதிராஜா விலகிவிட்டார். பின்பு கிஷோர் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அத்தகவல் உறுதியாகவில்லை.

இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி கமிட்டான உடன் அவருக்கான காட்சிகளை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.

Vijay Sethupathi plays important role in Vetrimaan’s next

சிலரின் பேராசைக்கு நாங்கள் பலிகடா.? மக்களுடன் ஹீரோக்கள் படம் பார்ப்பார்களா..? விஜய் & சிம்புக்கு டாக்டர் கடிதம்

சிலரின் பேராசைக்கு நாங்கள் பலிகடா.? மக்களுடன் ஹீரோக்கள் படம் பார்ப்பார்களா..? விஜய் & சிம்புக்கு டாக்டர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuசென்னை: தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு: டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு. நான் சோர்வாக இருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் சோர்வாகவே உள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கின்றனர்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

கொரோனா தொற்றுக் காலத்தில் நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரிய வில்லை.

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

தொற்றுநோய் இன்னமும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. கொள்கையை வகுப்பவர்களோ ஹீரோக்களோ மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.

பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்தல் போன்று இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த தொற்று நோய் காலத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமே?

மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று அரவிந்த் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்…

A doctor pens an open letter to Actors Vijay and Simbu

doctor open letter to vijay and simbu

More Articles
Follows