தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!*

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

Vishnu Vishal fans celebration at TN and Pondy by Blood donation

‘கருடன் & மகாராஜா’ ஹிட்டு.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

‘கருடன் & மகாராஜா’ ஹிட்டு.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கருடன் & மகாராஜா’ சூப்பர்.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன.

இந்த நேரத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது…

“ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடம் இருந்து இவ்வளவு அன்பையும் வரவேற்பையும் ‘விடுதலை’ படக்குழு பெறுவது நெகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை1’ எங்கள் எதிர்பார்ப்புகளை விடவும் அதிக வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் வணிகம் மற்றும் பேரலல் சினிமாவிற்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் மூலம் எதிர்கால இயக்குநர்களுக்கு ஒரு ப்ளூப்ரிண்ட்டாக இந்தப் படம் மாறியுள்ளது.

‘விடுதலை 1’ மற்றும் ‘கருடன்’ படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரியின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்களோடு ‘விடுதலை2’ படத்தை ரசிகர்களுக்கு சிறந்த முறையில் வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த இரண்டாம் பாகத்தினை வெற்றிமாறன் இன்னும் செழுமைப்படுத்தி வருகிறார். இசைஞானி இளையராஜா சாரின் மேஜிக்கல் இசை இந்தக் கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் படத்தின் மதிப்பை தங்கள் நடிப்பின் மூலம் உயர்த்தி இருக்கிறார்கள். இவர்களுடன், ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் மற்றும் பல நம்பிக்கைக்குரியவர்கள் நடித்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

குறிப்பாக, மஞ்சு வாரியரின் நடிப்பு இந்த படத்தில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படும். நடிகர் கிஷோரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தீவிரமானதாக இருக்கும்” என்றார்.

ரெட் ஜெயண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

*தொழில்நுட்ப குழு:*

இயக்குநர்: வெற்றிமாறன்,
இசை: இளையராஜா,
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
படத்தொகுப்பு: ராமர்,
ஆடை வடிவமைப்பாளர்: உத்ரா மேனன்,
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு: டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ்: ஆர். ஹரிஹரசுதன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர்: வி. மணிகண்டன்,
தயாரிப்பாளர்: எல்ரெட் குமார்.

Viduthalai part 2 poster with Manju warrier

SIIMA 2024 விருது பரிந்துரை : ஜெயிலர் – தசரா – காட்டேரா – 2018 படங்கள் முன்னிலை

SIIMA 2024 விருது பரிந்துரை : ஜெயிலர் – தசரா – காட்டேரா – 2018 படங்கள் முன்னிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SIIMA 2024 விருது பரிந்துரை : ஜெயிலர் – தசரா – காட்டேரா – 2018 படங்கள் முன்னிலை

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌

இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில்…

” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம்.‌ கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்- மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் புதிய தேசிய அளவிலான பிரம்மாண்டமான வெற்றியை உருவாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வலிமையான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்” என்றார்.

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.

தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது.

அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது.

இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான ‘காட்டேரா’ எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ ‘திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் – ஆசிப் அலி நடித்த ‘2018’ எனும் திரைப்படம் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி – ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல்- தி கோர் ‘ எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம்.

SIIMA 2024 NOMINATIONS films released in 2023

South Indian International Movie Awards (SIIMA) is back with its 12th Edition to celebrate the best of South Indian Cinema. SIIMA is a true reflection of South Indian cinema and connects the Global South Indian Film fans to the South Indian Film Stars. SIIMA 2024 has announced the nominations from the films released in 2023 calendar year.

SIIMA 2024 Event will be held in Dubai on 14th and 15th September 2024.

Brinda Prasad Adusumilli, Chairperson of SIIMA has announced the SIIMA Nominations for the films released in 2023. Speaking about the Nominations Brinda Prasad Says “Over the last couple of years the South Indian film makers have broke the language barrier and have produced national hit by making regional the new national; SIIMA 2024 is going to have a strong contenders list”.

Dasara (Telugu), Jailer (Tamil), Kaatera (Kannada) and 2018 (Malayalam) are leading the SIIMA Nominations in most of the popular categories.

In Telugu, ‘Dasara’ directed by Srikanth Odela, starring Nani and Keerthi Suresh, is leading with 11 nominations, while ‘Hi Nanna,’ starring Nani and Mrunal Thakur, follows closely with 10 nominations.

In Tamil, ‘Jailer’ directed by Nelson Dilipkumar, starring Rajinikanth is leading with 11 nominations while ‘Maamannan’, starring Udhayanidhi Stalin and Keerthy Suresh, follows closely with 9 Nominations.

In Kannada, ‘Kaatera’ directed by Tharun Sudhir, starring Darshan is leading with 8 nominations while ‘Sapta Saagaradaache Ello – Side A’, starring Rakshit Shetty and Rukmini Vasanth, follows closely with 7 Nominations.

In Malayalam, ‘2018’ directed by Jude Anthany Joseph, starring Tovino Thomas and Asif Ali is leading with 8 nominations while ‘Kaathal – The Core’, starring Mammootty and Jyothika, follows closely with 7 Nominations.

The winners are chosen by an online voting system.

Fans can vote for their favorite stars and movies on www.siima.in and the Facebook page of SIIMA.

SIIMA 2024 NOMINATIONS films released in 2023

அஸ்வின் – ஷாம் – நரேன் இணையும் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் ஆரம்பம்

அஸ்வின் – ஷாம் – நரேன் இணையும் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஸ்வின் – ஷாம் – நரேன் இணையும் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் ஆரம்பம்

விஜய் ஆதிராஜ் இயக்கும் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் ஆரம்பம்

*நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது*

தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார்.

எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக ‘நொடிக்கு நொடி’ எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் ‘செம்பி’ புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது ‘நொடிக்கு நொடி’.

திரைப்படம் குறித்து பேசிய விஜய் ஆதிராஜ்…

“விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு ‘நொடிக்கு நொடி’ மூலம் நனவகிறது.

பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய விஜய் ஆதிராஜ்,…

“அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய ‘புத்தகம்’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் ‘நொடிக்கு நொடி’ திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவுக்கு கோபிநாத், கலை இயக்கத்திற்கு ராமலிங்கம், நடனத்திற்கு ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி என முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஜி கண்ணன் & பாலு கே நிமோ. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் ‘நொடிக்கு நொடி’யை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.

Vijay Adirajs directorial Nodikku Nodi starrer Ashwin Shyam Narain

‘சட்னி – சாம்பாருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

‘சட்னி – சாம்பாருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சட்னி – சாம்பருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

‘சட்னி – சாம்பார்’ டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

‘சட்னி – சாம்பார்’ முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.

இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார்.

கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Yogibabu debut in Chutney Sambar web series

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள முத்தங்கள்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள முத்தங்கள்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள கிஸ் சீன்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : ‘பார்க்’ திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு!

படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு!

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது..

“இந்த இயக்குநர் முருகன் 10 ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார். சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை.

அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார். ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்.
படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும். இரண்டாவது பாதியில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.

அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்

இணைத் தயாரிப்பாளர் ந. ராசா பேசும்போது,

“பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பாடல் ஆசிரியராகும் ஆசை இருந்தது. இந்த முருகன் அறிமுகத்தில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் பாடல் எழுதி விட்டேன்.இது மூன்றாவது படம். இதில் நம் இந்தக் காலத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸப் காலத்து இளைஞர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளைப் போட்டுப் பாடல் எழுதி இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,

” இந்த பார்க் படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை விரட்ட மதத்து சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம், சாலையில் செல்லும் நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன்.அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது.
முதலில் தயாரிப்பாளர் வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன் அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது.

அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம். இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.

நடிகை ஸ்வேதா டோரத்தி பேசும் போது,

” அண்மையில் வெளியான லாந்தர் படத்துக்குப் பிறகு விரைவிலேயே பார்க் படத்தின் மூலம் படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.பார்க் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேசும்போது,

” சாதாரணமாகப் படத்தில் பணியாற்றியவர்கள்தான் அந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் ஸ்கிரிப்ட் எழுதியவர் கூட படம் நன்றாக இருக்கிறது என்றார். அதனால் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது.

சினிமாவில் இப்போது படம் எடுக்க 500 கோடி , 400 கோடி, 200 கோடி என்று கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். எல்லாமா ஓடி விடுகின்றன?அவர்கள் 10 கோடிக்குள் எடுத்தால் 50 படங்கள் எடுக்கலாம். அப்படிப் படம் எடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்கலாம். 50 நடிகர்களை உருவாக்கலாம்; 50 இயக்குநர்களை உருவாக்கலாம்.
ஏன் அதைச் செய்வதில்லை?” என்றார்.

கதாநாயகன் தமன் குமார் பேசும் போது…

” இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகி விடுவார்.படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார் .அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன்.

இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது.படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள்.
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

“இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது..,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள் .எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது.

தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.

எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன், எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை.. அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. எல்லாம் ஐட்டம் பாடல்களாக இருக்கின்றன.

இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .

இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.

பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா லட்டு போல அப்படி இருக்கிறார்.

சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்” என்றார்

இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, தனது முன் கதையை எல்லாம் சினிமாவில் சிரமப்பட்ட கதையை எல்லாம் சொன்னார்.தொடர்ந்து அவர் பேசும்போது,

“நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும்.எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.

இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான்.

இந்தக் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது.

ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும் தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.

எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும் ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்.”என்று பேசியவர் ,சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.

விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா, படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன், நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Perarasu and Rv Udhayakumar speech at Park audio launch

———–

More Articles
Follows