விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கடந்த வருடம் 2020 மே மாதமே இப்படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்… அது ஒரு பொய்யான தகவல்.. என ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Vikrams Cobra movie in OTT release

Overall Rating : Not available

Latest Post