நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்

vikramஇவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகமாக இது உருவாகுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இதனிடையில் இதன் ட்ரைலர் வெளியானது.

அதில்… ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றது.

இது அனைவராலும் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் சாமி 2 படக்குழுனிர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இதன் 2ஆம் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் விக்ரம் புது பன்ச் டயலாக்குகள் பேசியுள்ளார்.

எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல… பொறுக்கி… என்ற வசனங்களை பேசியுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Overall Rating : Not available

Latest Post