மக்களை நான் காப்பாற்றுவேன்.; அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு பன்ச்

மக்களை நான் காப்பாற்றுவேன்.; அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabus Asuraguru first look released‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் J.S.B.சதிஷ் தயாரிக்கும் படம் “அசுரகுரு”.

திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு’, இயக்குனர் ராஜதீப் அவர்களுக்கு தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் மனோபாலா, யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ், நாகிநீடு, சுப்புராஜ், குமரவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம் “மக்களை நான் காப்பாற்றுவேன்”.

இந்த வசனத்திற்கேற்ப போல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

Vikram Prabus Asuraguru first look released

Vikram Prabus Asuraguru first look released

2.ஓ-வில் நடிக்க மறுத்த ரஜினியை நட்பால் சம்மதிக்க வைத்த சுபாஷ்கரன்

2.ஓ-வில் நடிக்க மறுத்த ரஜினியை நட்பால் சம்மதிக்க வைத்த சுபாஷ்கரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini reveals how he accepted to act in 2pointO after hesitationஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை ” 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை.

எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை.

படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம்.

ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம் என்றார்.

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது.கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது.கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும்.

ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது. எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது.

ஹிட் ஆக்குவதுதான் பாக்கி… நான் படத்தை சொன்னேன் என தனக்கே உரிய பாணியில் கூறினார். வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல் ஹாசனுடன் ஷங்கர் செய்யும் ‘இந்தியன் -2’ மாபெரும் வெற்றி பெரும்.

இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியவை ” 2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது “என பேசினார்.

விழாவில் இசையமைப்பாளர் A .R ரஹ்மான் பேசியவை ” ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்,

விழாவில் அக்‌ஷய் குமார் அவர்கள் பேசியவை !

ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.

விழாவில் எமி ஜாக்சன் பேசியவை!

இந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி என பேசினார்.

விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ் பேசியவை ” மிகவும் சந்தோசமாக உள்ளது.ரஜினி சார் ரசிகனாக இருந்து அவர் படத்துலயே வேலை பார்ப்பது.ஷங்கர் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களுக்கும்,படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.

விழாவில் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசியவை ” இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.இயக்குனர் ஷங்கர் ,ரஜினி சார்,அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் ” என பேசினார்.

விழாவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி பேசியவை ” வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் சுபாஷ்கரன் அவர்களுக்கும் நன்றி. இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்.அனைவருக்கும் நன்றி ” என பேசினார்.

விழாவில் ஸ்ரீநிவாசன் மூர்த்தி பேசியவை” இப்படத்தில் நெறய டெக்நாலஜி பயன்படுத்தி உள்ளோம்.எனது டீம் முழு ஒத்துழைப்பு இதற்கு காரணம். மிகவும் அருமையாக vfx வந்துள்ளது. படத்தில் வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி.மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம் ” என பேசினார்.

Rajini reveals how he accepted to act in 2pointO after hesitation

2 point 0 trailer launch photos (9)

கமலுக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர்; சூர்யா-அஜித் பிறகு விதார்த்.. : ஜோதிகா பேச்சு

கமலுக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர்; சூர்யா-அஜித் பிறகு விதார்த்.. : ஜோதிகா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidharth and jyothikaராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள “காற்றின் மொழி” படத்தை தயாரித்துள்ளார் தனஞ்செயன்.

இப் படம் நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது ஜோதிகா மட்டும் மேடையில் பேசாமல் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது ஜோதிகா பேசியதாவது…

நான் நிறைய ஹீரோக்களிடம் நடித்து விட்டேன்.

கமல் நடிப்பதை அப்படியே பார்த்து கொண்டிருப்பேன். அதுபோல் எம்.எஸ் பாஸ்கர் சார் நடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதுபோல் அஜித், சூர்யா, மாதவன் ஆகியோருடன் நடிக்கும்போது கம்பர்ட்டாக பீல் செய்வேன். அதுபோல் விதார்த் உடன் நடிக்கும் போது கம்பர்ட்டாக பீல் செய்தேன்..” என்றார்.

2.0 படத்தில் ஆச்சரியங்கள் இருக்கு.; ராஜமவுலி கேள்விக்கு ஷங்கர் பதில்

2.0 படத்தில் ஆச்சரியங்கள் இருக்கு.; ராஜமவுலி கேள்விக்கு ஷங்கர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shankarஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் லான்ச் இன்று சென்னையில் மிக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஆஸ்க் 2.0 என்ற பெயரில் 2.0 படக்குழுவினருக்கும் பிரபலங்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இதில் ஷங்கரிடம் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி சில கேள்விகளை எழுப்பினார்.

“ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கையாளுவது கடினமாக இருந்ததா, அல்லது இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தைக் கையாள்வது கடினமாக இருந்ததா? இதில் எது கடினமாக இருந்தது?” என்று ஒரு வீடியோ பதிவில் ராஜமௌலி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஷங்கர்…

“நான் உங்களது மிகப் பெரிய விசிறி. நீங்கள் இந்திய சினிமாவின் பெருமை.

வேலைப் பளுவை சமாளிக்க ஒரே வழி இன்னும் அதிகமாக உழைப்பதுதான்.

படத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் நான் அலசி ஆராய்வேன். எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த அதிக முயற்சி எடுப்பேன்.

எதிர்பார்ப்பை பற்றி சொல்லவேண்டுமென்றால், 2.0 படத்தின் ரஜினி அவர்களை வசீகரன் கதாபாத்திரத்தில் பார்க்கப்போகிறோம்.

சிட்டியாக பார்க்கப் போகிறோம். 2.0-வாக பார்க்கப்போகிறோம். பிறகு மிகப்பெரிய உருவத்திலிருக்கும் சிட்டியாக பார்க்கப்போகிறோம்.

இன்னும் சில ஆச்சரியங்களும் இருக்கின்றன. அதனால் கண்டிப்பாக இந்தப் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நான் நம்புகிறேன்” என்றார்.

லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. – ரஜினியின் 2.0 பன்ச்

லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. – ரஜினியின் 2.0 பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது…

படம் தொடங்கிய பிறகு என் உடல்நிலை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் விலக முடிவெடுத்தேன்.

நான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடவும், படமாக்கப்பட்ட வரை ஆன செலவையும் கொடுத்து விடுறேன்.

ஆனால் எனக்காக 4 வருடங்கள் வரை கூட காத்திருப்பேன் என்று லைகா சுபாஷ்கரன் சொன்னார்.

2.0 படம் லேட்டா வருவதாக பலர் கமெண்ட் செய்தனர்.

லேட்டா வந்தாலும் Sure-ஆ அடிக்கணும்.. நா படத்த சொன்னேன்” என்று பேசினார் ரஜினிகாந்த்.

எமலோகத்திலும் எலெக்சன்; போட்டி போடும் யோகிபாபு-கருணாகரன்

எமலோகத்திலும் எலெக்சன்; போட்டி போடும் யோகிபாபு-கருணாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhuஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”.

ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார்.

மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார்.

அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள்.

இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.

இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு.

இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம்.

நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

இப்படத்திற்காக ஸ்டூடியோவில் பல ‘செட்’டுகள் அமைக்கப்படுகிறது. முக்கியமாக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.

இதற்காக கலை இயக்குநர் C.S.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.

இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : மகேஸ் முத்துசாமி
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
பாடல்கள் : யுகபாரதி
நிர்வாக தயாரிப்பு : ராஜா செந்தில்
தயாரிப்பு : P.ரங்கநாதன்

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhu

Yogi Babu And Karunakaran Battle For Next Yama In Dharmaprabhu

More Articles
Follows