தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷூடன் கிரிக்கெட்.. அஜித்தின் வரலாறு.. மகாராஜா என் பாக்கியம்.. – விஜய்சேதுபதி
*நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*
’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நடிகர் வினோத்…
“‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.
அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி”.
எடிட்டர் ஃபிலோமின்ராஜ்…
“இந்தப் படம் ஒரு பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்”.
நடிகை அபிராமி…
“விஜய்சேதுபதியின் 50வது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி”.
இயக்குநர் நித்திலன்…
“என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகை மம்தா மோகன்தாஸ்…
“‘எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட ‘மகாராஜா’ படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.
அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது…
ராமோஜிராவ் மரணம் அடைந்த செய்தி கேட்டேன்.. அவருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை.. ஆனால் புதுப்பேட்டை பட ஷூட்டிங் சமயத்தில் நான் ராமோஜிராவ் அரங்கத்திற்கு சென்று இருந்தேன்.. அங்கு பிரம்மாண்ட அதிசயங்களை கண்டேன்.
ராமோஜிராவின் கற்பனை வளத்தை கண்டு வியந்தேன்.. ஒரு மனிதனால் எப்படி இந்த கற்பனைகளை உருவாக்க முடிந்தது என்று எண்ணி வியந்தேன்.. அங்கு சேரி பகுதி இருந்தது. அரண்மனை இருந்தது.. ஹோட்டல் இருந்தது. நாம் நினைக்கும் எல்லாம் இருந்தது.
எங்களுடைய கற்பனைகளுக்கு அவர் உருவம் கொடுத்திருந்தார். அங்கு நான் செல்வராகவன் தனுஷ் கிரிக்கெட் விளையாடினேன். அஜித் நடித்த வரலாறு படத்தில் ஷூட்டிங் அங்கு நடைபெற்றது. அப்போது தூரத்தில் இருந்து அஜித்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்று எனக்கு கனவு பாரம் நிறைய இருக்கிறது.. அதனால் தூக்கம் குறைந்துவிட்டது.. அன்றெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நிறைய நேரம் தூங்குவேன்.. அங்கு அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. அவரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இயக்குனர் நித்திலன் மகாராஜா பட கதையை சொல்லும்போது அவரின் குரங்கு பொம்மை படத்தைக் கூட நான் பார்க்கவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பு தான் அந்த படத்தை பார்த்தேன்.. ஒரு இயக்குனராக அவர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.
எனக்கு 25வது படமாக சீதக்காதி படம் அமைந்தது.. அந்த படம் கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம்.. அதுபோல தற்போது மகாராஜா படம் என 50வது படமாக அமைந்துள்ளது. இதற்கும் மகிழ்ச்சி..
நான் ஹீரோவாக நடித்து பிறகு சில படங்களில் வில்லனாக நடித்த அதற்காக நான் இறங்கி வந்து விட்டேன்.. அல்ல எந்த வேடம் என்றால் நான் ஏற்க தயாராக இருக்கிறேன்.. ஒரு வட்டத்திற்குள் சிக்கல் விரும்பவில்லை.
இந்தப் படத்தில் பாய்ஸ் மணிகண்டன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.. அவர் சிறந்த நடிகர் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் துபாய் நாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தபோது பாய்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் படங்களுக்கு என் போட்டோவை அனுப்பி இருந்தேன்.. இதை நான் சித்தார்த்திடமும் சொல்லி இருக்கிறேன்..
எனக்கு ஆரம்பப் புள்ளி வைத்த அருள் தாஷை என்னால் மறக்க முடியாது.. என் மகாராஜா 50 வது படமாக இருக்கும் இந்த நிலையில் அவரை நான் நினைத்துப் பார்க்கிறேன்.. எனக்கு வாழ்வு அளித்த மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் பத்திரிக்கையாளர்கள் ரசிகர்கள் இயக்குனர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் எனக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாய்ப்பு கொடுத்தார்.. அப்போது என்னை யாரும் நம்பவில்லை.. என்னுடைய உறவினர்கள் ஏன் நானே என்னை நம்பாத காலத்தில் என்னை நம்பி எனக்கு நாயகன் வேடம் கொடுத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி சீனு ராமசாமி அவருக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Vijaysethupathi open talk about his life in Maharaja meet





