தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘டாக்டர்’ படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.
அனிருத் இசையமைக்க இந்த படத்தை சன் பிக்ச்ர்ஸ் தயாரித்து வருகிறது.
தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வரும் இந்த படக்குழுவினர் விரைவில் ஜார்ஜியா பறக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள அவரது 66வது படத்தி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க தில்ராஜூ தயாரிக்கிறார். அந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் விஜய்யின் 67ஆவது படத்தை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், துப்பாக்கி, தெறி, கபாலி, அசுரன் ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
மாஸ்டர் இயக்குனர் பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் மாஸான நடிகர் விஜய் இணைந்தால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம் தானே…
Vijay 67 team up with Lokesh and Kalaipuli Thanu