சூர்யா பட போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பார்’ படக்குழு

Vijay Sethupathis Tughlaq Durbar first look copied from Suriyas TSKஅறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் துக்ளக் தர்பார்.

முக்கியமான கேரக்டரில் இயக்கநரும் நடிகருமான பார்த்திபன் இணைந்துள்ளார்.

இவர்களுடன் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60′ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ்  லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

முழு நீள அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓரிரு நிமிடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது படக்குழு.

இதன் போஸ்டர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட போஸ்டரை போல் உள்ளது. (படம் பார்க்க)

Vijay Sethupathis Tughlaq Durbar first look copied from Suriyas TSK

Overall Rating : Not available

Latest Post