தீராத சிக்கலில் சிந்துபாத்.; காலை 8 மணி காட்சிகள் ரத்தானது

தீராத சிக்கலில் சிந்துபாத்.; காலை 8 மணி காட்சிகள் ரத்தானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sindhubaadh special shows cancelled‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’.

யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்றது.

சென்னையில் சில அரங்குகளில் காலை 8 மணி காட்சியும் இருந்தன.

ஆனால் காலை காட்சிகள் ரத்தானது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ஆனால் 10 மணி மற்றும் 11 மணி காட்சிகள் சில அரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது

Vijay Sethupathis Sindhubaadh special shows cancelled

விஜய்சேதுபதி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ்

விஜய்சேதுபதி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ரஜினியின் பேட்ட படத்தில் முக்கியமான ரோலில் அதாவது சிம்ரனின் மகளாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் திடீரென கமிட் ஆகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் முதலில் நாயகியாக அமலா பால் நடிக்கவிருந்தார். தற்போது அவர் விலகியதால் மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படம் கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் ஆக உருவாகவுள்ளது.

இயக்குனர் நர்த்தன் என்பவர்தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிம்பு ஒரு நெகட்டிவ்வான ரோலில் நடிக்கிறாராம்.

இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஓர் அழகான கூலிங் கிளாசை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இளையராஜா இசையில் ”முன்பதிவு”

இளையராஜா இசையில் ”முன்பதிவு”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார்.இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் .கதை திரைக்கதை சார்ந்து தீவிரமாக இயங்கிய அவர் நண்பர்கள் மூலம் மலையாளப் பக்கம் போய் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் .சென்ற ஆண்டு ‘ திரைக்கு வராத கதை’ என்றபடம் தமிழில் வந்தது. அது மலையாளத்தில் ‘கேர்ள்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அதில் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
துரைபாண்டியன் இயக்கும் முதல் படம் தான் ‘முன்பதிவு’.டைரக்டர் துளசிதாஸ் எனது நண்பர் அவரிடம் பல படங்களுக்கு நான் பணிபுரிந்துள்ளேன்.

படத்தின் கதை என்ன என்ற போது, “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப்பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்து கொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் முன்பதிவு .இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது.

கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இளையராஜா இசை அமைக்கச் சம்மதித்ததும் படத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.” என்கிறார் இயக்குநர் துரைபாண்டியன்.

இளையராஜா ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். ஜூன் 26ஆம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார் .தமிழ் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணி பற்றியவர். எடிட்டிங் பீட்டர் பாபியா.

‘முன்பதிவு’ விரைவில் படப்பிடிப்பு .

ஹவுஸ் ஓனர் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம் – நடிகர் கிஷோர்

ஹவுஸ் ஓனர் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம் – நடிகர் கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகர் கிஷோர் அவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த சக்தி உள்ளது. ஒவ்வொரு முறையும், அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் பாராட்டுக்களை பெறுகிறார். அது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன் மீது கவனத்தை திருப்புவதை தவறவிடமாட்டார். வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் “ஹவுஸ் ஓனர்” படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே மிகுந்த பாராட்டுக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையானது. ஆனால் நடிகர் கிஷோரின் மேற்கோள்கள் மிகவும் உணர்ச்சிவசமானது. அவர் கூறும்போது, “ஆம், ஹவுஸ் ஓனர் பயணம் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறியது என்றாலும், நான் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பில் இருந்ததை போலவே நிறைய கற்றுக்கொண்டேன். லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர், இது 100% உண்மை. வெளிப்படையாக, அவருடன் பணிபுரிந்த எவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். இது வெறுமனே அவரது இயக்குனர் திறமை பற்றியது மட்டுமல்ல, அவர் படப்பிடிப்பு தளத்தில் எல்லாவற்றையும் கையாண்ட விதத்தை பற்றியது. “ஹவுஸ் ஓனர்” போன்ற ஒரு சுயாதீன படத்தில் வேலையாட்கள் மிகக்குறைவு, பல பணிகளிலும் அவரே ஈடுபட்டார், இது நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. இன்றைய சினிமாவில் நாம் தொழில்நுட்பரீதியில் புத்திசாலித்தனமான, ஆனால் வாழ்க்கை அனுபவம் இல்லாத பல இளம் திரைப்பட இயக்குனர்களை சந்திக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பார்வையை பகிர்ந்து கொள்ள கஷ்டப்பட்டிருக்கிறார்கள், சில சமயங்களில், நான் அவர்களிடம் நடித்து காட்ட சொல்லுவேன், அப்போது தான் நான் அதை பின்பற்ற முடியும். இருப்பினும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார். ஒரு கலைஞராக, நாம் நடிக்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை முற்றிலும் உணர்வது என்பது பொதுவானது. ஆனால் என் மனைவி ராதாவின் கதாபாத்திரத்தில் (நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்தது) இருக்கும் வலி, சோகம் மற்றும் அன்பை என்னால் உணர முடிந்தது. படம் பார்க்கும்போது பார்வையாளர்கள நிச்சயமாக அதே அனுபவங்களை அனுபவிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஸ்ரீரஞ்சனி மிக அற்புதமாக நடித்துள்ளார். நான் சொன்னது போல, அவரது கதாபாத்திரம் அவ்வளவு உணர்ச்சிகளை கொண்டுள்ளது, அதை அவர் பாராட்டத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளார். கிஷோர் மற்றும் லவ்லின் இருவரும் தான் “ஹவுஸ் ஓனர்” படத்தின் ஆன்மாக்கள், அவர்கள் தான் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்” என்றார்.

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த “ஹவுஸ் ஓனர்” படத்தை வரும் ஜூன் 28ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா சேகர் டி.எஸ். (ஒளிப்பதிவு), சி.எஸ்.பிரேம் குமார் (படத்தொகுப்பு), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), கார்க்கி, அனுராதா (பாடல்கள்) மற்றும் எம்.வி. ரமேஷ் (தயாரிப்பு நிர்வாகம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

பிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை மீரா மிதுன்

பிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபிக்பாஸ் 3 தான் இப்போதைக்கு தமிழ்நாட்டின் ஒரே பரபரப்பு. நடிகர் கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார். முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ்.

இதுவரை 15 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 16 வது சிறப்பு போட்டியாளராக மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா புகழ் மீரா மிதுன் களமிறங்க உள்ளார்.

மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் வெகுவாக ஆர்வம் கொண்டிருந்த இவர் ஒரு தமிழ்ப்பெண்ணாக கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் மாடலிங் துறையில் தனியாளாக மோதி ஜெயித்தவர். ஐந்து வருடங்களாக மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர். அதைத்தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ்ப்பெண்ணாக மாடலிங் துறையில் ஜெயித்த இவர் தன்னைப்பொன்றே மாடலிங் ஆசை கொண்ட தமிழ்ப்பெண்கள் எந்தக் கஷ்டங்களும் படக்கூடாது என்றே மிஸ் தமிழ்நாடு திவா அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தற்போது மாடலிங் துறையில் இருந்து முதல் தமிழ்ப்பெண்ணாக பிக் பாஸிக்குள் நுழைந்துள்ளார். மாடல் என்றாலே வெளிநாட்டு, வெளி மாநில பெண் என்ற நிலையை மாற்றி ஒரு தமிழ்ப்பெண் மாடலாக பிக் பாஸுக்குள் நுழைகிறார். இவரது சாதனைகள் கேள்விப்பட்டே பிக் பாஸில் கலந்து கொள்ள பிக்பாஸ் குழு சிறப்பு போட்டியாளராக இவரை அழைத்துள்ளது.

இன்றைய எபிஸோட் முதல் இவர் பிக்பாஸ்3 ல் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows