ஆன்லைன் ஷாப்பிங்.; விஜய்சேதுபதி விளம்பரத்திற்கு எதிர்ப்பு

ஆன்லைன் ஷாப்பிங்.; விஜய்சேதுபதி விளம்பரத்திற்கு எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Online shopping advt into controversyதமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இதனிடையில் விளம்பர படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக தோன்றியுள்ளார்.

சினிமாவிலும் நிஜத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் மக்கள் செல்வன் இப்படி செய்யலாமா?

உள்ளூர் வியாபாரிகளை அழிக்க வரும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி ஆதரவாக செயல்படலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

என்ன செய்ய போகிறார்? விஜய்சேதுபதி

Vijay Sethupathis Online shopping advt into controversy

லட்சுமி குறும்பட நடிகை லட்சுமி பிரியாவுக்கு கல்யாணம்

லட்சுமி குறும்பட நடிகை லட்சுமி பிரியாவுக்கு கல்யாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi short film fame Lakshmi Priya marriage newsமுன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி.

ரிச்சி உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தபோதிலும் லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்தார். இந்த குறும்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எழுத்தாளரும் நாவலாசிரியருமான வெங்கடராகவன் சீனிவாசன் என்பவரை திருமணம் செய்துள்ளாராம் இந்த நடிகை.

Lakshmi short film fame Lakshmi Priya marriage news

எகிப்தில் முதல் தமிழ் படம் ‘பிகில்’..; விஜய் படைத்த சாதனை

எகிப்தில் முதல் தமிழ் படம் ‘பிகில்’..; விஜய் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil is the first movie which released in Egypt countryதமிழகத்தை தாண்டி கேரளாவிலும் மாஸ் காட்டி வருகிறார் தளபதி விஜய்.

விஜய் பட ரிலீசை பார்த்து அங்குள்ள ஹீரோக்களே தங்கள் ரிலீசை தள்ளி வைத்து விடுகின்றனர்.

பிகில் படத்திற்கு கேரளாவில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பிகில் படம் அவரின் சினிமா பயணத்தில் ஒரு மைக்கல்லாக பார்க்கப்படுகிறது.

இன்று (அக்-3௦) எகிப்து நாட்டில் பிகில் திரைப்படம் ரிலீசாகியுள்ளது.

எகிப்து நாட்டில் எந்த ஒரு தமிழ் படமும் வெளியானதுதில்லை.

அந்த சாதனையை விஜய் நிகழ்த்தியிருக்கிறார்.

Bigil is the first movie which released in Egypt country

கமல்-60 பிரம்மாண்ட விழாவில் ரஜினி & இளையராஜா பங்கேற்பு

கமல்-60 பிரம்மாண்ட விழாவில் ரஜினி & இளையராஜா பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Ilayaraaja will atten Kamal 60 event தன் 5 வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி இன்று வரை 60 ஆண்டு காலமாக ஜொலித்து வருகிறார் கமல்ஹாசன்.

களத்தூர் கண்ணம்மா துவங்கி ஓய்வின்றி விதவிதமான வேடங்களை ஏற்று உலக நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் இந்த உலகநாயகன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் கமலின் 60 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அவரின் பிறந்தநாளில் (நவ. 7,) பெரும் விழாவை நடத்துகிறது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.

இந்த விழா நவம்பர் 8… நவம்பர் 9 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில்….

கமல் பிறந்த நாளான நவ.,7 அன்று தான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாள் ஆகும். அன்று, சொந்த ஊரான பரமக்குடியில், தந்தையின் சிலையை, கமல் திறந்து வைக்கிறார்.

நவம்பர் 8ல்..

சினிமா உலகில் குருவான பாலசந்தர் சிலையை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு திறந்து கமல் வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பாலசந்தர் குடும்பத்தினர், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மஹாத்மா 150வது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 3.30 மணியளவில், ”ஹே ராம்” படம் திரையிடப்பட உள்ளது.

இதனையடுத்து நவம்பர் 9ல்…

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Rajini and Ilayaraaja will atten Kamal 60 event

ஆன்மிக அரசியலுக்கு பொருத்தமாக தலைவர் 168 படத்தலைப்பா..?

ஆன்மிக அரசியலுக்கு பொருத்தமாக தலைவர் 168 படத்தலைப்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRajinis Thalaivar 168 movie to be titled Viyugamஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார்’ படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு 2019 டிசம்பரில் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதனிடையில் சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தில் நடிக்கிறார் ரஜினி.

இவருடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்ளிட்டோர் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இமான் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது.

இப்பட சூட்டிங்கை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்திற்கு ‛வியூகம்’ எனப் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அரசியல் கட்சி தொடங்க தற்போது வியூகம் அமைத்து வருகிறார் ரஜினி. எனவே அதற்கு பொருத்தமாக படத்தலைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Rajinis Thalaivar 168 movie to be titled Viyugam

நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது “ பட்லர் பாலு “

நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது “ பட்லர் பாலு “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

butler baluகாமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது “பட்லர் பாலு” எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார். மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த “ பட்லர்பாலு “ படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற

சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி கலகல காமெடி கலந்த திரைக்கதையாக “ பட்லர் பாலு “ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சுதிர்.M.L

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

ஒளிப்பதிவு – பால் லிவிங்க்ஸ்டன்

இசை – கணேஷ் ராகவேந்திரா

வசனம் – S.P.ராஜ்குமார்

தயாரிப்பு – தோழா சினி கிரியேஷன் கிருத்திகா.

More Articles
Follows