தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
கடும் வறுமையை மீறி தங்கத்தை வென்றவர் என்பதால் பலரும் அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.
திருச்சியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்றவர்கள் ரூ. 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை கோமதியிடம் வழங்கியுள்ளனர்.
விஜய்சேதுபதியும் தன் பாராட்டுக்களை மொபைல் போனில் தெரிவித்துள்ளார்.
Vijay Sethupathis kind gesture to TN athlete Gomathi Marimuthu