சூர்யா இல்லாமல் விஜய்யின் ‘நேருக்கு நேர்’..; மினி திரையில் மீண்டும்.!

சூர்யா இல்லாமல் விஜய்யின் ‘நேருக்கு நேர்’..; மினி திரையில் மீண்டும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி (ஒரு நாள் முன்னதாக) திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று ‘பீஸ்ட்’ பட ட்ரைலர் வெளியாகி 25 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 10 இரவு 9 மணிக்கு பீஸ்ட் புரோமோசன் நிகழ்ச்சி தொடர்பாக ‘நேருக்கு நேர்’ என்ற நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதில் நடிகர் விஜய்யை டைரக்டர் நெல்சன் நேர்காணல் காண்கிறார். 10 வருடத்திற்கு பிறகு விஜய் நேர்காணலில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Nelson interview Beast Promotion on full swing.

கூடுதல் தகவல்…

1997 ஆண்டில் வசந்த் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ படத்தில் விஜய் சூர்யா இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது ‘நேருக்கு நேர்’ என்ற தன் பட டைட்டில் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி டைட்டில் கனெக்ட் பண்ணிட்டோம்னு பாத்தீங்களா.?

‘பீஸ்ட்’ டிரைலர் திரையிடல்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..; ரஜினியை போல் விஜய் நஷ்ட ஈடு கொடுப்பாரா.?

‘பீஸ்ட்’ டிரைலர் திரையிடல்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..; ரஜினியை போல் விஜய் நஷ்ட ஈடு கொடுப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ டிரைலரை நேற்று மாலை 6 மணிக்கு யு டியூப்பில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

தமிழகத்தில் சில தியேட்டர்களில் ரசிகர்களுக்காக பீஸ்ட் ட்ரைலரை இலவசமாக திரையிட்டனர்.

இது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்களை திரையிட தான் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அரசு அனுமதி இல்லாமல் ரசிகர்களை கவர்ந்திழுக்க ட்ரைலரை திரையிட்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் உள்ள பிரபலமான ராம் தியேட்டரில் நேற்று மாலை டிரைலரை திரையிட்டனர். 500 பேர் மட்டுமே அமரக் கூடிய தியேட்டர்களில் 1000க்கும் மேற்ப்பட்ட நபர்களை ஒரே நேரத்தில் இலவசமாக அனுமதித்தன சில தியேட்டர்கள்.

எனவே பலரும் தியேட்டருக்குள் சென்று டிரைலரைப் பார்த்துள்ளனர்.

திரையீடு முடிந்த பின் பெரும்பாலான இருக்கைகளை நாசம் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள். ஆர்வமிகுதியால் ரசிகர்கள் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தியேட்டர் உரிமையாளருக்கு லட்சக்கணக்கில் செலவு ஏற்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

இதனால் விஜய் ரசிகர்களை பலரும் இணையத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

பல வருடங்களுக்கு முன் 1980களில் ரஜினி படத்தை திரையிட்ட போது சென்னை கமலா தியேட்டரில் இது போன்ற சம்பவத்தை ரஜினி ரசிகர்கள் செய்தார்களாம். அப்போது அதனை அறிந்த ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்காக நஷ்டஈட்டை கமலா தியேட்டர் உரிமையாளருக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உண்மையானால் ரஜினியை போல் விஜய்யும் நஷ்டஈடு கொடுப்பாரா.? என பார்க்கலாம்.

Vijay fans damaged theatre in which Beast Trailer screened

இந்த ‘மன்மதலீலை’-கள் எப்போ நடந்துச்சு.? சிக்கிய வெங்கட் பிரபு & பிரேம்ஜீ

இந்த ‘மன்மதலீலை’-கள் எப்போ நடந்துச்சு.? சிக்கிய வெங்கட் பிரபு & பிரேம்ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம் ஜி இசையில் உருவான ’மன்மதலீலை’ திரைப்படம் ஏப்ரல் 1ல் வெளியானது.

அசோக் செல்வன், சம்யுக்தா, ஸ்மிருதி, ரியா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நம் filmistreet தளத்திலும் பாராட்டி இருந்தோம்.

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில்…

ஒரு இளம் நடிகையுடன் வெங்கட்பிரபு உள்ள படத்தை பதிவு செய்து அதை ’மன்மத லீலை’ பட போஸ்டர் போல மாற்றிய இருந்தார்.

கடந்த 2007ல் ’வசந்தம் வந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் ஸ்டில்ஸ் அது. அந்த படத்தில் வெங்கட்பிரபு நந்திதா ஜெனிபர் ஜோடியாக நடித்து இருந்தனர்.

அந்த புகைப்படத்தை தான் தற்போது ’மன்மத லீலை’ படத்திற்காக பிரேம்ஜி பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெங்கட்பிரபும் ஒரு படத்தை போட்டு பிரேம்ஜி யை மாட்டிவிட்டுள்ளார்.

Venkat Prabu and Premjis Manmadha Leelai in out of screen

9 மொழிகளில் 600 படங்களில் நடித்த சரண்ராஜ் இயக்கும் படம்; மகனை அறிமுகம் செய்கிறார்

9 மொழிகளில் 600 படங்களில் நடித்த சரண்ராஜ் இயக்கும் படம்; மகனை அறிமுகம் செய்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது.
Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர்.

ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.

பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தேவ் சரண்ராஜ்.

ஒரு குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர்.

தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ஜனார்தன் செய்கிறார். இணை இயக்கம், பாடல்களை K.சுரேஷ் குமார் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பாலவாக்கத்தில் பூஜையுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கம் பகுதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, ஏலகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Actor Charanraj directing his second son Dev

‘மாநாடு’ தயாரிப்பாளருடன் இணைந்து அடுத்த வெற்றிக்கு ரெடியான ‘ஜீவி 2’

‘மாநாடு’ தயாரிப்பாளருடன் இணைந்து அடுத்த வெற்றிக்கு ரெடியான ‘ஜீவி 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் ‘ஜீவி’.

இயக்குனர் விஜே கோபிநாத் இயக்க பாபு தமிழ் கதை அமைத்து இருந்தார். தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா பிலிம்ஸ்

வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், மோனிகா, கருணாகரன், ரோகினி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

தொடர்பியல் என்பதுதான் இப்பட மையப் புள்ளி. நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒரு தொடர்பு இருக்கும் என்பதே தொடர்பியல்.

இப்படம் வெளியாகி விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குனர் விஜே கோபிநாத் இயக்கி வருகிறார்.

இதில் வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி ‘ஜீவி 2’ படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்பட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Actor Vetri joins Maanaadu producer for Jiivi 2 ?

‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’.: மே 6ல் கவிழ்க்க வரும் கலையரசன் ஆனந்தி ஆஷ்னா

‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’.: மே 6ல் கவிழ்க்க வரும் கலையரசன் ஆனந்தி ஆஷ்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’.

இந்த படத்தை ஜானகிராமன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

பல மாதங்களுக்கு முன்னதாகவே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது மே 6ஆம் தேதி ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Laughter riot Titanic is releasing on May 6th in theatres

More Articles
Follows