தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படம் மஹா.
இந்த படத்தில் தன் முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.
இதனையடுத்து வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்கள் சிம்பு கைவசம் உள்ளது.
இந்த நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்திருந்தனர். விஜய் சந்தர் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
வாலு படத்திற்கு பின் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்களை விஜய்சந்தர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Chandar to join hands with STR aka Simbu again