விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..; இயக்குனர் இவரா?

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓடிடி தளத்திற்காக உருவாகும் ஒரு படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

பாலியல் தொழிலாளியாக பூஜா நடித்த படம் ‘விடியும் முன்’. அந்த படத்தை இயக்கிய பாலாஜி குமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் சென்னையை சுற்றி நடக்கிறதாம்.

ஒரே மாதத்தில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பே இப்படி குறித்த தகவல்கள் வந்தன.

அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

பிச்சைக்காரன் 2 மற்றும் கோடியில் ஒருவன் ஆகிய 2 படங்களையும் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

Vijay Antony and Ritika Singh teams up for OTT

எலெக்சன் நேரத்திலும் பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ ட்ரைலர்..; சென்சார் அப்டேட் இதோ..

எலெக்சன் நேரத்திலும் பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ ட்ரைலர்..; சென்சார் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள படம் சுல்தான்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஆனால், பாடல்களுக்கு விவேக் மெர்வினும் இசையமைத்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் & எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதன் டிரைலர் & பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளதால் தேர்தல் பிரச்சார நெருக்கடிகளையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் இப்படத்தை ஏப்ரல் 2-ந்தேதி வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் ‘சுல்தான்’ படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை பட நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Sulthan movie release and Censor updates

தனுஷ் பாடலை போட்டு சிம்பு மாநாட்டுக்கு மோடியை அழைத்த புரொடியூசர்

தனுஷ் பாடலை போட்டு சிம்பு மாநாட்டுக்கு மோடியை அழைத்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘மாநாடு’.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது சிம்புவின் ‘மாநாடு’.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்கள்.

சென்னை பூந்தமல்லி அருகே ஒரு பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்றை கடந்த 10 நாட்களாக அமைத்து வந்தனர்.

இங்கு தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் ட்விட்டரில் RJ Rofina என்பவர் “அமெரிக்க அதிபர் ஜோ-பிடன் பருவகாலநிலை உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமர் உட்பட 40 தலைவர்களுக்கு அழைப்பு!” என்ற செய்தியை பதிவிட்டு இருந்தார்.

இந்த செய்தியை டேக் செய்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்…

*@SilambarasanTR_ மாநாடு க்கு வரசொல்லுங்க ….* என மோடியை அழைப்பது போல் பதிவிட்டு இருந்தார்.

தனுஷ் நடிப்பில் ரிலீசாகவுள்ள ‘கர்ணன்’ படத்தில்… கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பெரும் ஹிட்டடித்து வருகிறது.

அதே பாணியில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu movie Producer invites PM Modi for Maanadu

படைப்பாளிகளுக்கு தேவை ஒரு களம்… நாங்க உருவாக்கி தர்றோம் ஓடிடி தளம்..; டிஆர் பன்ச்

படைப்பாளிகளுக்கு தேவை ஒரு களம்… நாங்க உருவாக்கி தர்றோம் ஓடிடி தளம்..; டிஆர் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தம்பி ராமைய்யா மகன் உமாபதி மற்றும் சம்ஸ்கிருதி இணைந்து நடித்துள்ள படம் ‘தண்ணி வண்டி’.

இவர்களுடன் பாலசரவணன், தம்பி ராமய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா என்பவர் இயக்கியுள்ளார்.

இப்பட டீசர் வெளியீட்டு விழாவில் டீசரை வெளியிட்டு இயக்குனர் டி.ராஜேந்தர் பேசியதாவது….

“சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நான் எப்போதும் சொல்கிறேன்.

டிக்கெட் விலை ரூ 120,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?.

டிக்கெட் விலையை விட பாப்கார்ன் விலை அதிகம்.

ஆந்திராவில் ரூ 50 – 70 ரூபாய் தான் டிக்கெட் விலை.

ஆனால் இங்கே டிக்கெட் விலை பற்றி பேச யாருக்கும் தைரியமில்லை.

ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். நான் கூட ஓடிடி தளம் தொடங்குவேன்.

சின்ன தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு களம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஓடிடி தளம்.”

இவ்வாறு டிஆர் பேசினார்.

T Rajendar will be launching OTT platform

தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.. : பாஜக-வின் டேக் லைன் அறிமுக விழா

தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.. : பாஜக-வின் டேக் லைன் அறிமுக விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION ..

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது..

தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் தொடர்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைப்பெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கு. க. செல்வம், ஆர். கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி.கண்மனி, பிரமீட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிடப்பட்டது.

Tamilnadu BJP Tag line launch event at Chennai

அடுத்த ஜென்மத்தில் ஏஆர். ரஹ்மான் பட ஹீரோ போல அழகாய் பிறக்க ஆசை.. – சிவகார்த்திகேயன்

அடுத்த ஜென்மத்தில் ஏஆர். ரஹ்மான் பட ஹீரோ போல அழகாய் பிறக்க ஆசை.. – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக தயாரித்துள்ள படம் ’99 சாங்ஸ்’.

அவரே இந்த படத்தின் கதையையும் எழுதி உள்ளார்.

இதனை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்.

இஹான் பட், எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவில்… இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“ஏஆர். ரஹ்மான் பாட்டு கேட்டு வளர்ந்தேன். அயலான் படத்தில் அவரின் இசை. அந்த இசை மூலம் இன்னும் வளர்வேன்.

படத்தின் ஹீரோ இஹான் படு ஸ்மார்ட்டா இருக்கிறார். நானும் ஹீரோ தான். ஆனால் அவர் போல இல்லை.

அடுத்த ஜென்மத்தில் அவர் போல் அழகாய் பிறக்க ஆசை.”

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

99 songs hero

Sivakarthikeyan speech at 99 songs audio launch event

More Articles
Follows