‘நாற்கரப்போர்’.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க அரசியல் பேசும் இயக்குனர் வெற்றி

‘நாற்கரப்போர்’.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க அரசியல் பேசும் இயக்குனர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நாற்கரப்போர்’.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க அரசியல் பேசும் இயக்குனர் வெற்றி

இயக்குநர் வெற்றி இயக்கியுள்ள படம் ‘நாற்கரப்போர்’.

‘இறுகப்பற்று’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபர்ணதி நாயகியாக நடித்துள்ள படம் ‘நாற்கரப்போர்’.

இவருடன் அஸ்வின், கபாலி, லிங்கேஷ், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினேஷ் ஆண்டனி இசையமைக்க இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள்.

வி6 பிலிம் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் பற்றி, இயக்குநர் வெற்றி பேசும்போது…

“தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன், எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது தான் படத்தின் கதை.

சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.

ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைவருக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்குப் பார்வை இல்லாதவரை இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற அரசியலையும் இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

‘நாற்கரப்போர்’ இந்த படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

“Life of manual scavengers – Emotional sports Drama Teaser of #Narkarappor

▶️ youtu.be/qpJ8gzl8ua0

#Narkarappor_on_Aug09
#நாற்கரப்போர்

@shreevetri @abarnathi21
@LingeshActor @V6Velayutham @Arunmozhi_thev
@music_Dinesh_DA @sriman_ragavan @zeemusicsouth
@johnmediamanagr

——–

Vijay launches Andhagan Anthem : டீன்ஏஜ் பிரசாந்த் மீது கிரஷ்.. – வனிதா.; தியாகராஜன் ஒரு மிலிட்டரி மேன்.. – ஊர்வசி

Vijay launches Andhagan Anthem : டீன்ஏஜ் பிரசாந்த் மீது கிரஷ்.. – வனிதா.; தியாகராஜன் ஒரு மிலிட்டரி மேன்.. – ஊர்வசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay launches Andhagan Anthem : டீன்ஏஜ் பிரசாந்த் மீது கிரஷ்.. – வனிதா.; தியாகராஜன் ஒரு மிலிட்டரி மேன்.. – ஊர்வசி

*பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு*

*’அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்*

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சோனி மியூசிக் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் அசோக் பர்வானி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான தியாகராஜன் பேசுகையில், ”2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.

இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.

படத்தை வாங்கிய பிறகு கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் சென்றது.‌ அதன் பிறகு இடர்பாடுகள் ஏற்பட்டதன. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்தோம். குறிப்பாக இதில் ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு அதிகம். திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றி இருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த் அழகான பெண். இந்த படத்தில் அவரை இளமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.‌ லண்டனின் வீதிகளில் அவர் நடந்து செல்லும் ஸ்டைலும், அவரின் அவுட்லுக்கும் அனைவரும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

நடிகை சிம்ரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சற்று எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். அவருடைய சிறந்த நடிப்பிற்காக இந்த வருடம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்ததாக வனிதா விஜயகுமார்- அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கார்த்திக் பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தொடங்கிய அவருடனான நட்பு இன்றும் தொடர்கிறது. படப்பிடிப்பு தளத்திற்கு காலை எட்டு மணிக்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருடைய தொடக்க காலகட்டத்தில் நடித்த துள்ளலான நடிப்பை இப்படத்தில் காணலாம்.

அதேபோல் படத்தில் இடம்பெறும் சிறிய கதாபாத்திரத்திற்கு கூட பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சமுத்திரக்கனி, பூவையார், மோகன் வைத்யா, ஆதேஷ் பாலா என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்திற்காக வழங்கிய ஒத்துழைப்பும் மறக்க முடியாதது.

யோகி பாபுவுக்கு சகோதரியாக ஊர்வசி நடித்திருக்கிறார். ஊர்வசி என்னுடன் சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒரிஜினலில் ஊர்வசி கதாபாத்திரம் இருக்கிறது.‌ ஆனால் தமிழில் அந்த கதாபாத்திரம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் ஊர்வசி- யோகி பாபு- கே எஸ் ரவிக்குமார்- பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை உற்சாகமாக்கும்.

பிரசாந்த் நடித்த ‘செம்பருத்தி’, ‘காதல் கவிதை’ ஆகிய படங்களில் பணியாற்றிய ரவி யாதவ் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். லண்டனில் இருந்த ரவி யாதவ் நான் அழைத்தவுடன் மகிழ்ச்சியுடன் சம்மதித்து இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

கலை இயக்குநர் செந்தில் ராகவன், ஒலி வடிவமைப்பாளர் லட்சுமி நாராயணன் என அவரவர் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற கலைஞர்களை ஒருங்கிணைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தி பதிப்பில் இல்லாத பல விஷயங்களை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து இணைத்திருக்கிறோம். அதனால் அந்தகன் ரீமேக் படம் அல்ல ரீமேட் படம். அதாவது மறு உருவாக்கம் செய்யப்பட்ட படைப்பு. அந்தகன் திரைப்படம் ரசிகர்களுக்காக புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உச்சகட்ட காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.‌ இது ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்திற்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.‌ இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்திற்கும், தமிழில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்வீர்கள்.‌ இந்தியில் இல்லாத பல விஷயங்களை நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறோம்.‌ அதிலும் அந்தகன் திரைப்படம் பிரசாந்தின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,,” என்றார்.

இயக்குநர் – நடிகர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான நிகழ்வு இது. தியாகராஜன் சாரை என்னுடைய கல்லூரி பருவ நாட்களில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தேன். அவரும் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தார். அந்த வகையில் அவர் மீது ஒரு ஈடுபாடு எனக்கு இருந்தது. அவர் நடித்த, தயாரித்த திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். நான் இயக்கி, நடித்த திரைப்படங்களை அவரும் பார்த்திருக்கிறார். இப்படி தொழில் முறையிலான நட்புதான் எங்களுக்குள் இருந்தது.

இந்தத் தருணத்தில் ‘அந்தகன்’ படத்தில் நடிக்க தியாகராஜன் அழைப்பு விடுத்தார். அவர் மீது இருந்த அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு இந்தி படத்தினை பார்த்தேன். பிரமாதமான படைப்பு. அதனை சாதாரணமாக ரீமேக் செய்தாலே வெற்றி கிடைக்கும். ஆனால் தியாகராஜன் சார் அப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள், பிரம்மாண்டமான தயாரிப்பு என பல விஷயங்களை கவனித்து, கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்.

படத்திற்காக சிறிய சமரசம் செய்து கொள்ளாமல் நேர்த்தியாக உருவாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் அவர் பயன்படுத்திய மானிட்டர் கூட பிரம்மாண்டமாக இருக்கும். அப்போதே அவருடைய ஈடுபாடு நன்கு தெரிந்தது . இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

பிரசாந்த்திற்கு அந்தகன் ஐம்பதாவது படம் என்பது இங்கு வந்த பிறகுதான் எனக்கு தெரியும். பிரசாந்த் நூறு படங்களை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன். கண்டிப்பாக அவர் அதனை தொடுவார். பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றம் இருந்தாலும் அவருக்கு குழந்தை மனசு.

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏராளமான திரைப்பட விழாக்களில் அவரை சந்தித்து இருக்கிறேன். நான் ‘புரியாத புதிர்’ படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பட தயாரிப்பு நிறுவனத்தின் அருகில் உள்ள வளாகத்தில் தான் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் அலுவலகம் இருந்தது. நான் நான்கு படங்களை இயக்கி விட்டு, அன்பாலயா பிரபாகரனுக்காக ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ எனும் படத்தை இயக்க ஒப்புக்கொண்ட போது பிரசாந்த் பிசியான முன்னணி நடிகராகிவிட்டார்.

அந்த கால கட்டத்தில வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால்.. முதலில் பிரசாந்தை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று தான் விழா குழுவினர் கோரிக்கை வைப்பார்கள். அந்த அளவிற்கு பிரசாந்த்திற்கு உலக நாடுகளில் ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்.‌

இந்த படத்தில் நடிகை ஊர்வசி நடித்திருக்கிறார். அவருக்கு ஊர்வசி என்று பெயர் வைப்பதற்கு பதிலாக ராட்சசி என்று பெயர் வைத்திருக்கலாம், அந்த அளவிற்கு திறமையான நடிகை.

இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கும். நன்றாகவும் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள்..‌ படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களில் மனதில் நிற்கும் படமாக இது இருக்கும், இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

‘அத்தகன் ஆந்தம்’ பாடலை ஒரு முறை கேட்கும்போதே மனதில் பதிந்து விடுகிறது. இந்த ப்ரமோ பாடல் மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள்.‌ என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் இது. இந்தத் திரைப்படத்தில் அற்புதமான ஒரு வேடம் கிடைத்திருக்கிறது அதில் திறமையாக நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இதனை குறிப்பிடவில்லை. இது என் குடும்பம். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி தியாகராஜன் சார். இன்றும் அவரை நான் நேசிக்கிறேன்.

பிரசாந்த் எனக்கு புதியவரல்ல.‌ நான் 90களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. என்னுடைய முதல் டீன் ஏஜ் கிரஷ் பிரசாந்த் தான்.

அவருடன் கடந்த சில வருடங்களாக பழகும் போது அன்பான நட்பு கிடைத்தது.‌ அந்த நட்பு அழகானது. மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் சிறந்த மனிதர். அவரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அவருடைய நேர்மை , பெருந்தன்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு என எல்லாமே அவருடைய தந்தையிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும், ‘இவர் (தியாகராஜன்) போன்ற ஒரு அப்பா இருந்தால் அதுவே போதும் ‘ என்பார்.

இந்த திரைப்படம் தரமான படைப்பு. அருமையான நட்சத்திர கலைஞர்கள், திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படைப்பை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த திரைப்படம் அதுவாகவே விளம்பரத்தை தேடிக் கொள்ளும். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் எளிதாக தானாகவே சென்றடையும்.‌ இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.‌

ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் வேற்று மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.‌

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் பணிகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அன்றே கொடுத்து விடுவார். படத்திற்கு பின்னணி பேசும் போது இரண்டு மடங்கு சம்பளத்தை கொடுத்தார். அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு நட்சத்திரத்தின் மதிப்பை அறிந்து அதனை கவுரவப்படுத்தும் விதமாக அது இருந்தது.

நான் ஒரு பயணத்தின் போது என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் தொடர்பு கொண்டார். நான் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை பரிசாக அளித்தார், அதுதான் தியாகராஜன் சார்,” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், ”இங்கு வந்த பிறகுதான் தமிழில் பணியாற்றி நீண்ட நாள் ஆகிவிட்டது என்ற உணர்வு எழுகிறது. இந்த ஒட்டுமொத்த படக்குழுவில் இயக்குநர் தியாகராஜன் என்னுடைய நண்பர் என்று தான் சொல்வேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தியாகராஜன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். அனைவரும் பிரசாந்த் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள்.‌ ஏராளமான சக கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அனைவரை காட்டிலும் பிரசாந்த் தனித்துவமிக்கவர். அவருக்கு சினிமா மீதான பற்றும், தேடலும் அதிகம். இந்த திரைப்படத்திற்கு வி எஃப் எக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட்டது பிரசாந்த் தான். சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றி இங்கு வந்து நிற்கும் போது தான் தாய் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது,” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”இந்த அந்தகன் ஆந்தம் பாடலை வெளியிட்ட தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இதற்காக நேரம் ஒதுக்கி, இந்த பாடலை வெளியிட்டதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாட்டை உருவாக்கிய பிரபு தேவாவிற்கும், நடனம் அமைத்த சாண்டி மாஸ்டருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடலில் பங்களிப்பு செய்த அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு படத்திற்கான ப்ரோமோ பாடலை இந்த அளவு பிரம்மாண்டமாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் நட்சத்திர கலைஞர்களை இடம்பெறவைத்து, அனைவரும் ரசிக்கும் வகையிலும், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களுக்கும் நட்சத்திர கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார்கள். இயக்குநர் தியாகராஜன் இந்த விஷயத்தில் நுட்பமாக கவனித்து திறம்பட செயல்பட்டு இருக்கிறார்.‌ கார்த்திக் சார், கே எஸ். ரவிக்குமார் சார், ஊர்வசி மேடம், சமுத்திரகனி சார், மனோபாலா சார், யோகி பாபு சார், பூவையார், ஆதேஷ் பாலா, வனிதா விஜயகுமார், செம்மலர் அன்னம் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் அப்பா அழைத்தவுடன் அவர் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அப்பா மீது இன்றளவும் குறையாத மதிப்பு மரியாதை வைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்களே இணைந்து பணியாற்றினார்கள்.‌ ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கடுமையாக உழைத்து ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கி இருக்கிறார்.இந்தப் படம் பிரம்மாண்டமாக இருக்கிறது என அனைவரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தோஷ் நாராயணனின் இசை, சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, செந்தில் ராகவனின் கலை இயக்கம் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் தங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.‌

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘என் காதலே…’ எனும் பாடலை டான்ஸ் மாஸ்டர் கலா ஆறு மணி நேரத்திலேயே நடனம் அமைத்து ஆச்சரியப்படுத்தினார்.‌

இந்தப் படத்தில் அப்பா எந்த வகையான காட்சிகளை திரையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ அதற்காக அனைவரும் உழைத்தனர். இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் திரையரங்கத்தில் இந்த படத்தை பார்க்கும் போது ஆனந்தம் அடைவார்கள். மகிழ்ச்சி அடைவார்கள். அந்த தருணத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் இன்றளவும் என் மீது அன்பும், பாசமும் காட்டும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ஊர்வசி பேசுகையில், ”தியாகராஜன் சார் மிலிட்டரி மேன் மாதிரி அனைத்தும் நேரத்திற்கு ஏற்றபடி சரியாக நடக்க வேண்டும் என நினைப்பார்.‌ 1984ம் ஆண்டில் தியாகராஜன் சார் தயாரித்த திரைப்படம் ‘கொம்பேறி மூக்கன்’ அதில் நான் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் சரிதாவும் நடித்திருந்தார்.

அன்றிலிருந்து ஆரம்பித்த அந்த மரியாதைக்குரிய அன்பும், நட்பும் இன்றும் தொடர்கிறது. பிரசாந்துடன் நான் ‘தமிழ்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவரும் எனக்கு நல்ல நண்பர். ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்த இருவருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் அடுத்த நிமிடம் எனக்காக வந்து நிற்பார்கள்.‌

அந்தகன் நல்ல படம். நம்முடைய மண்ணிற்கு என்ன தேவையோ அந்த மாற்றங்களை செய்துதான் இந்த படத்தை தியாகராஜன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அமைந்திருக்கும் நட்சத்திர கூட்டணி போல் வேறு எந்த படத்திலும் அமைந்திருக்காது., அமைந்ததும் இல்லை. இந்த படம் நன்றாக ஓட வேண்டும், ஓடும் என நம்புகிறேன் அனைவரும் வாழ்த்துங்கள்,” என்றார்.

Andhagan is not remake Its remade says Director Thiagarajan

வனக்காவலர்களுக்கே தெரியாத இடத்தில் ஷூட்டிங்.. ‘பேச்சி’ பட தயாரிப்பாளரானார் ஜெய்சங்கர் மகன்

வனக்காவலர்களுக்கே தெரியாத இடத்தில் ஷூட்டிங்.. ‘பேச்சி’ பட தயாரிப்பாளரானார் ஜெய்சங்கர் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வனக்காவலர்களுக்கே தெரியாத இடத்தில் ஷூட்டிங்.. ‘பேச்சி’ பட தயாரிப்பாளரானார் ஜெய்சங்கர் மகன்

’பேச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ’வெரூஸ் புரொடக்‌ஷன்’ (Verus Productions) நிறுவனம்

தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் படமாக ‘பேச்சி’ அமையும்! – பிரபலங்கள் பாராட்டு

‘மைனா’, ‘பீட்சா’ படங்கள் வரிசையில் ‘பேச்சி’ இடம் பிடிக்கும்! – படக்குழு நம்பிக்கை

‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக புதுமையான திரை அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் ராமச்சந்திரன்

அனைத்துவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் – ‘பேச்சி’ பட விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று (ஜூலை 23) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி மற்றும் மக்கள் குரல் ராம்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில்…

“’பேச்சி’ உருவான விதமே ஒரு அனுபவமாக இருந்தது. படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் விளம்பர பட இயக்குநர், அவருடன் நான் பல விளம்பர படங்களில் பணியாற்றியுள்ளேன். அப்படி நாங்கள் பணியாற்றிவிட்டு ஏற்காடுக்கு செல்வோம், அங்கு தான் இந்த கரு உருவானது. பிறகு இதை படிபடியாக டெவலப் செய்து திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தோம்.

இந்த படம் உருவாக முக்கியமான நபர் கோகுல் பினாய். ஒளிப்பதிவாளராக பல படங்கள் செய்திருக்கும் அவர், நண்பர்களுக்காக இந்த படத்தை பண்ணார். பல பேர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு ஒரு துறையில் முதலீடு செய்து நல்லபடியாக வாழ்கிறார்கள். ஆனால், கோகுல் பினாய் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த சமயத்தில் அவருக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தான் தொடங்கினோம். பிறகு படத்தின் பட்ஜெட் அதிகமானது. படத்திற்கு தேவைப்பட்டதால் அதை நாங்கள் செய்தோம். எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அது அனைத்தையும், பட்ஜெட் பார்க்காமல் செய்து கொடுத்தார்கள், அதனால் தான் படத்தின் அவுட்புட் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த படத்தின் நிலப்பரப்பு மிக கடினமானது, இதில் எதையும் எளிதில் செய்ய முடியாது. அதனால் அனைவரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். எனவே, இந்த படத்திற்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில்…

“இந்த படம் எனது நெருங்கிய நண்பர் ராம் மூலமாக கிடைத்தது. இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த கோகுல் பினாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்கிற்கு சென்று பாருங்கள், நன்றி.” என்றார்.

நடிகர் முரளி ராம் பேசுகையில்…

“இத்தனை கேமராக்கள் எங்கள் நிகழ்ச்சியை கவரேஜ் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு படம் பெஞ்ச் மார்க் படமாக அமையும். அதாவது, ‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும்.

அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய மனதோடு பணியாற்றினார்கள், ஒவ்வொருவரும் தங்களது சொந்த படம் போல வேலை பார்த்தார்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என்பதற்காக நானே கேட்டு தான் சேர்ந்துக் கொண்டேன். நான் இரண்டு நாட்கள் பணியாற்றினேன். இயக்குநர் ராமச்சந்திரன் சார், வங்கியில் நல்ல பதவியில் இருந்தார், ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். அதேபோல், அவரது குடும்பத்தாரும் அவரது ஆசையை புரிந்துக்கொண்டு அவரை இந்த துறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறைய விளம்பர படங்களை செய்தார்.

இப்போது படம் பண்ண வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர், கோகுல் பினாய் என அனைவருமே அவரிடம் இருந்து வந்தவர்கள், அவரது தம்பிகள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அனைத்து தம்பிகளும் சேர்ந்து அண்ணனுக்காக இந்த படம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். படத்தை வெளியிடும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் ஜனா பேசுகையில்…

“’பேச்சி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வித்தியாசமான ஒரு திகில் திரைப்படமாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும், நிச்சயம் ரசிகர்கள் படத்தை எஞ்சாய் பண்ணுவார்கள், நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசுகையில்…

“’பேச்சி’ என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். முதல் நன்றி நான் கோகுலுக்கு தான் சொல்ல வேண்டும். நாங்கள் விளம்பர படங்கள் எடுக்கும் போது சேலம் சென்றால், அப்படியே ஏற்காடு சென்று வருவோம். அப்படி ஒரு பயணத்தின் போது, நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சாதாரணமாக பேசியது தான் இந்த பிரஸ் மீட்டில் வந்து நின்கிறது.

10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் ஒரு பக்க கதையாக எழுதியதை தான் நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அது தான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம்.

ஊடக நண்பர்கள் எங்களைப் போல் பலரை பார்த்திருப்பீர்கள், அவர்களுடைய பேச்சுக்களை கேட்டிருப்பீர்கள், அவர்கள் சொன்னது போல் நாங்களும் பல கஷ்ட்டங்களை கடந்து தான் இந்த படத்தை முடித்திருக்கிறோம். எனவே, இப்போது அதைப்பற்றி பேசப்போவதில்லை.

ஒரு படம் தனக்கு தேவையானதை தானாகவே எடுத்துக்கொள்ளும் என்று சொல்வதைப் போல், இன்று பேச்சி படம் வெரூஸ் என்ற புதிய நிறுவனத்தை திரையுலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர்கள் மூலம் படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வெரூஸின் முஜிப் சார் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தொழில்நுட்ப குழிவினர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பார்த்தியின் உழைப்பு மிகப்பெரியது.

படத்தின் டிரைலரை பார்த்த போதே அதைப் பற்றி பலர் பேசுகிறார்கள். அதேபோல் என்னுடைய படத்தொகுப்பாளர் அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். எங்களது படத்தை நாங்கள் அப்படி…இப்படி…என்று சொல்லவில்லை. அதேபோல் நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

படம் நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் உங்களை புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும் என்பது உறுதி. பத்திரிகையாளர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், நன்றி.” என்றார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனும், வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சஞ்சய் சங்கர் பேசுகையில்…

“என் அப்பா எப்போதும் பத்திரிகையாளர்களிடம் மிக நெருக்கமாக இருப்பார், அவருக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். அதுபோல் எங்கள் வெரூஸ் மற்றும் வெயிலோன் நிறுவனத்திற்கும், ‘பேச்சி’ படத்திற்கும் நீங்க சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான், முஜீப், ராஜராஜன், தனிஷ்டன் நான்கு பேரும் சிறுவயது முதலே நண்பர்கள், நாங்கள் தான் ஒன்றாக சேர்ந்து வெரூஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். வெரூஸ் என்றால் இத்தாலியில் பிரண்ட்ஸிப் என்று அர்த்தம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். அதன்படி, ‘பேச்சி’ திரைப்படத்தை பார்த்த முஜீப் எங்களை தொடர்புக்கொண்டு படத்தை பார்க்க சொன்னார், நாங்கள் படத்தை பார்த்தோம், படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கின்றன. அதேபோல், திகில் காட்சிகளும், ஒலி வடிவமைப்பும் மிரட்டலாக இருந்தது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதனால் தான் இந்த படத்தின் மூலம் நாங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற நல்ல திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

வெரூஸ் நிறுவனத்தின் முஜீப் பேசுகையில்..

“இந்த படம் நண்பர்களுக்காக நண்பர்கள் தயாரித்தது என்று சொன்னார்கள், வெரூஸ் நிறுவனமும் நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான். எங்கள் நிறுவனம் மூலம் பொழுதுபோக்குத்துறையில் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதன்படி, இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, படத்தை பார்த்த உடன் நான் இந்த படத்தின் தயாரிப்பாளராக முடிவு செய்துவிட்டேன். கோகுல் பினாய் உடனான முதல் சந்திப்பிலேயே அவருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டேன். இந்த படம் மட்டும் இன்றி மேலும் ஒரு படத்தை நாங்கள் முடித்து வைத்திருக்கிறோம், அந்த படம் பற்றி விரைவில் அறிவிப்போம். மேலும் பல படங்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளோம். படக்குழுவினர் எந்த அளவுக்கு பரபரப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து நான் பிரமித்துவிட்டேன், அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில்…

“வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் கோகுல் பினாய், விக்னேஷ், விஜய் கந்தசாமி இவர்கள் எல்லாம் என்னுடைய நண்பர்கள், இவங்க மூன்று பேருக்கும் நன்றி. வெரூஸ் நிருவத்தைச் சேர்ந்த சஞ்சய் சங்கர், முஜீப் சார் ஆகியோருக்கும் நன்றி. இயக்குநர் ராமச்சந்திரன் சார் பைக் டிராவல் ஆர்வலர், அவரைப் போன்றவர்களால் தான் இதுபோன்ற இடங்களை கண்டுபிடிக்க முடியும்.

இந்த இடங்களுக்கு சாதாரண வாகனங்களில் பயணிக்க முடியாது. இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக எங்களுடன் வனத்துறை காவலர்கள் வருவார்கள், அவர்களுக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது, என்றார்கள். அப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எங்களை அங்கே அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள்.

இப்படி ஒரு கடினமான நிலப்பரப்பில் படப்பிடிப்பு நடத்தியதற்கு எங்கள் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படத்தை எடுப்பதற்கு இரண்டு படங்கள் எடுத்து விடலாம், அந்த அளவுக்கு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் நாம் இறங்கிவிட்டோம் என்றால், அது பிக் பாஸ் வீடு தான். எந்த ஒரு தொடர்பும் இருக்காது. அப்படி ஒரு இடத்திலும், எங்களுக்கு உணவு சரியான நேரத்தில் வந்துவிடும். வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் சில சமயங்களில் உணவு வருவதில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆனால், இப்படி ஒரு இடத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் எங்களுக்கு அனைத்தையும் சரியான நேரத்தில் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, நான்கு நண்பர்களில் ஒரு வேடமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம், படத்தில் இருந்த வேற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை அவரிடம் கேட்கலாமா என்று யோசித்த போது, அவரே நீங்க மாரி வேடத்தில் தான் நடிக்கிறீங்க, என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது. நான் காமெடி வேடம் மட்டும் இன்றி அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாரி கதாபாத்திரம் இருக்கும். மற்றவர்கள் சொன்னது போல், இந்த படம் இதுவரை பார்க்காத படம், என்று சொல்லவில்லை. இன்று ஆடியன்ஸ் ரொம்ப திறமையானவர்களாக இருக்கிறார்கள், உலகத்திரைப்படங்கள் பார்க்கிறார்கள், அதனால் அப்படி இப்படி என்று சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. ஆனால், ‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இது முழுக்க முழுக்க திகில் சஸ்பென்ஸ் படம். இப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று ஏங்கும், ரசிகர்களுக்கு இந்த படம் செம படமாக இருக்கும். இன்று டிரைலர் பார்த்து பலர் பாராட்டுகிறார்கள், நல்ல நல்ல கமெண்ட் வருகிறது. அதுபோல் படமும் நிச்சயம் ரசிகர்களிடம் பாராட்டு பெறும். இப்படி ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கே இருக்கும், அப்படி ஒரு படத்தில் நடித்தது மகிழ்ச்சி நன்றி.” என்றார்.

நடிகர் தேவ் பேசுகையில், “நான் இங்கே நிற்பதற்கு காரணம் கோகுல் பினாய் மற்றும் ராமச்சந்திரன் சார் தான், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறேன், இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. பார்த்திபன் சொன்னது போல் நண்பர்களுக்காக நண்பர்கள் பண்ண படம். பாலசரவணன் சொன்னது போல், இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிக கடுமையான நிலப்பரப்பில் உருவாகியிருக்கும் படம். என்னதான் கஷ்ட்டமாக இருந்தாலும் தயாரிப்பு தரப்பு எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார்கள், அதற்காக வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனங்களுக்கு நன்றி. திகில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். ஆகஸ்ட் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது, படத்தை திரையரங்குகளில் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், “தயாரிப்பாளராக எனக்கு இது முதல் மேடை. ஒளிப்பதிவாளராக பண்ணையாரும் பத்மினியும் தான் எனது முதல் படம். நான் இங்கு நிற்பதற்கு என் பெற்றோர்கள் தான் காரணம்.

நான் சினிமாவுக்கு போகப் போகிறேன், மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு, பிறகு கேமராமேனாக பணியாற்ற செல்லப் போகிறேன், என்று சொன்ன போது என் பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள். இப்போது படம் தயாரிக்கப் போகிறேன், என்று சொன்ன போதும் எனக்கு சப்போர்ட் பண்ணார்கள், அவர்களுக்கு நன்றி. அதேபோல், எனது சகோதரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி. என் சகோதரி தான் இந்த படம் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு கொடுத்தார். அதேபோல், என் குருநாதன் மனோஜ் பரமஹம்சாவுக்கு நன்றி. இன்று நான் தயாரிப்பது என அனைத்தும் அவரிடம் இருந்து வந்தது தான். நான் முதல் படம் முடித்துவிட்டு இரண்டாம் படம் பணியாற்ற இரண்டு வருடங்கள் சும்ம இருந்த போது, எனக்கு பொருளாதார ரீதியாக உதவியது ராமச்சந்திரன் அண்ணாவின் விளம்பர படங்கள் தான், அதற்கு அவருக்கு நன்றி. அதேபோல் வெயிலோன் நிறுவனத்தை தொடங்கும் போது என் நண்பர்கள் என்னுடன் இணைந்துக் கொண்டார்கள். அது தான் இப்போது தயாரிப்பு நிறுவனமானது. இதன் மூலம் ராம் அண்ணா மூலம் படம் எடுக்க முடிவான போது, வேறு கதையை படமாக்கலாம் என்று இருந்தோம். ஆனால், அவருக்கு திகில் கதை நன்றாக வருவதால் அதையே படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து, அவருடைய பேச்சி குறும்படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்.

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் நிச்சயம் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு நின்று போயிருக்கும், அந்த அளவுக்கு கடினமான் நிலப்பரப்பு அது, அதில் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நடித்துக் கொடுத்தார். நல்ல குழு அமைந்தாலே நமக்கு பெரிய நம்பிக்கை வரும், அப்படி ஒரு நம்பிக்கையை படத்தில் பணியாற்றைய அனைவரும் கொடுத்தார்கள். பாலசரவணன் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இருந்தே நண்பர். ஏதோ வந்தோம், நடித்தோம் என்று அவர் இருக்க மாட்டார்.

ஒரு கதாபாத்திரம் என்று சொன்னால் அதன் வசனம் உள்ளிட்ட அனைத்தையும் முன் கூட்டியே வங்கிக்கொண்டு, அந்த கதாபாத்திரத்தை எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம், என்று யோசிக்க தொடங்கி விடுவார். அவரை காமெடி வேடத்தில் காட்டாமல் வித்தியாசமான வேடத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அதை அவர் விலங்கு தொடரில் செய்துவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் செய்திருக்கிறார்.

படம் முடிந்துவிட்டது, அதன் பிறகு அந்த படத்தின் மீது ஒரு ஒளி விழ வேண்டும் அல்லவா அது தான் வெரூஸ் நிறுவனம், முஜீப், சஞ்சய், ராஜராஜன், டனிஸ் ஆகியோருக்கு நன்றி. முஜீப் சார் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய அளவில் உருவானது. நான் பல வருடங்களாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் அனைவருக்கும் உங்களது ஆதரவை பலருக்கு கொடுத்து வருகிறீர்கள், எங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன். ‘பேச்சி’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.” என்றார்.

Even forest officers don’t know that place Pechi producer Sanjay Sankar

அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

ஒரு திரைப்பட நடிகர் – நடிகை எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் அவர்களின் படங்களில் முக்கியமாக 25 – 50 – 100 ஆகிய படங்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

அதுவும் அந்த சம்பந்தப்பட்ட நடிகரின் 100வது படம் என்றால் எதிர்பார்ப்பு நிச்சயம் பெரிய அளவில் இருக்கும்.. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா படம் அவருக்கு நூறாவது படம்.. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

அது போல கமல் நடித்த ராஜபார்வை அவரது நூறாவது படம்.. அதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை.. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் அவரது நூறாவது படமாக அமைந்தது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயரையும் பெற்று தந்தது..

சத்யராஜ் நூறாவது படம் வில்லாதி வில்லன் பெரும் தோல்வியை சந்தித்தது அதுபோல பிரபு நடித்த ராஜகுமாரன் படமும் (நூறாவது படம்) பெரும் தோல்வியை சந்தித்தது..

இப்படியான சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் விஜய் & அஜித் ஆகியோரின் 50வது படங்களை குறித்து ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்ப்புடன் பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜய்யின் 50வது படமான சுறா படம் பெரிய வெற்றியை பெறவில்லை.. ஆனால் அஜித் நடித்த மங்காத்தா அவரது 50வது படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதுபோல விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான மகாராஜா படமும் அவருக்கு 50 வது படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி அவரது இயக்கத்தில் உருவான ‘ராயன்’ படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Will Raayan hit like Mangatha and Maharaja

—-

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா

ஒரு திரைப்படத்தை நான்கு வருடங்கள் எடுத்தோம்.. 20 மாதங்கள் எடுத்தோம்.. ஐந்து மாதங்கள் எடுத்தோம்.. மூன்று மாதங்கள் எடுத்தோம் என பலரும் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கூட நிறைவு பெறாத நிலையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.சுகன். அந்த படத்தின் பெயர் தான் ‘பிதா’.

(இதற்கு முன்பே 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் இவர் சுகனே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.)

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.

ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ்.சுகன் விறுவிறுப்பாக மங்காத்தா, சூது கவ்வும் பாணியில் இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,

தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்..

Pitha movie shoot completed within 23 hours 23 mins

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘கூலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிற ரஜினிகாந்த்.

இது ஒரு புறம் இருந்தாலும் மற்ற பொது நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்று ரஜினிகாந்த் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினிகாந்த்.

சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று செல்பி எடுத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு ரஜினி பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “இந்தியன் 2 திரைப்படம் நன்றாக இருந்தது. நல்லா இருந்துச்சு” என்று கூறினார்.

மேலும் ‘கூலி’ படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. ‘வேட்டையன்’ திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” எனவும் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

Rajinikanths review for KamalHaasans Indian 2

More Articles
Follows