வெங்கட்பிரபு – நாகசைதன்யா – கீர்த்திஷெட்டி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

வெங்கட்பிரபு – நாகசைதன்யா – கீர்த்திஷெட்டி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில்,  வித்தியாசமான பரிமாணத்தில்   கதைகளை உருவாக்குவதில் வல்லவர்.
அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும்  ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் உருவாகும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது,
இதனையொட்டி தயாரிப்பாளர்கள் நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்த, பெரும் உற்சாகமான இரண்டு அறிவிப்புகளை தந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிப்பின் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால், தென்னிந்திய திரைத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை வரவேற்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்  உற்சாகத்தில் உள்ளது.
வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா  கூட்டணியில் ஒரு திரைப்படம்  முன்னதாகவே நடக்க இருந்தது. ஆனால் இருவரும் அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற ஒரு சரியான திரைப்படத்திற்காக காத்திருந்தனர்.
தற்போது இந்த கூட்டணி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் பிரமாண்டமாக இணைந்துள்ளது.
இப்படம் வெங்கட் பிரபுவின் டிரேட்மார்க் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த அட்டகாசமான  கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.
தவிர, நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள அனைவரையும் கவரும் ஒரு அழகான பாத்திரத்தில் தோன்றவுள்ளார்.
இந்த திரைப்படத்தில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தை பற்றி  வரவிருக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகள் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கும்.
Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட் தூரி, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்படி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
தற்போது, அவர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தைத் தயாரித்து வருகிறார். பவன் குமார் வழங்கும் இப்படத்தை  இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.
இப்படம் ஜூலை 14, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் ராம் பொதினேனி மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குனர் போயபதி ஸ்ரீனு (அகண்டா புகழ்) கூட்டணியில் மற்றுமொரு அட்டகாசமான திரைப்படத்தை இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ளது குறிப்பிடதக்கது.
இத்திரைப்படம் இயக்குநராக வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகும், டோலிவுட்டில் அவர் இயக்குநராக  அறிமுகமாகும் முதல் படம். தெலுங்கு திரையுலகின் யூத் ஐகான் நாக சைதன்யா இந்த திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடதக்கது.
பனியன் கம்பெனி படமாகிறது.; பாலமுருகன் – அம்மு அபிராமி இணையும் ‘குதூகலம்’

பனியன் கம்பெனி படமாகிறது.; பாலமுருகன் – அம்மு அபிராமி இணையும் ‘குதூகலம்’

எதார்த்தமான வாழ்க்கை…
நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும்.
அந்த வகையில் ‘அங்காடித்தெரு’,
சமீபத்தில் ‘அசுரன்’ போன்ற   படங்களை மக்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் இப்போது,
திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது.
இப்படத்திற்கு “குதூகலம்” என்று பெயரிட்டுள்ளார்கள்.  இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் (Rat & Cat Pictures)
சார்பில் M.சுகின்பாபு முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த யதார்த்தமான கதையை உருவாக்கி, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். உலகநாதன் சந்திரசேகரன்.
துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிசட்டை’,
‘எதிர்நீச்சல்’ படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷ் நடித்த ‘கொடி’, ‘பட்டாசு’ போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதே இந்த கதை.
இதை திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் உருவாக்குகிறார் டைரக்டர்.
இதன் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார்.
இவர்களுடன் கவிதாபாரதி, ‘விஜய் டிவி’ புகழ், பியான், சஞ்சீவி, ‘நக்கலைட்’ யூ-ட்யூப் புகழ் அனிஸ், மன்மோகித், ‘மெட்டி’ பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுகிறது.
இசை  :  பியான் சர்ராவ்
ஒளிப்பதிவு  :  மணி பெருமாள்
       (கும்கி சுகுமார்உதவியாளர்)
எடிட்டர் : பிரகாஷ் மப்பு
               (கொடி, பட்டாசு)
ஆர்ட்: L.கோபி – அறிமுகம் (ஆர்ட் டைரக்டர் துரைராஜ் உதவியாளர்)
ஸ்டண்ட் : டேஞ்சர் மணி
PRO: ஜான்சன்
நிறுவனம் : ரெட் & கேட் பிச்சர்ஸ்
தயாரிப்பாளர் : எம்.சுகின்பாபு
பார்வையற்ற திருமூர்த்தியின் இசைக் கல்விச் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

பார்வையற்ற திருமூர்த்தியின் இசைக் கல்விச் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது.
கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி  ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நேற்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.
திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.
திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ  வைரலானது.
அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்தார்.
அந்த வீடியோவை பார்த்த இமான் தன் இசையில் திருமூர்த்தி பாட வைப்பதாக உறுதியளித்து அதன்படி ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து உருவான சீரு என்ற படத்தில் ஒரு அருமையான ஆத்மார்த்தமான பாடலை கொடுத்தார்.
அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற ‘வா சாமி…’ என்ற ஹிட் பாடலைப் பாடியவரும் பாடகர் திருமூர்த்தி தான்.
கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள்  படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.
‘களவாணி’ படத்தில் விமலின் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி.
சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.
தற்போது சட்ட படிப்பு LLB இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அவர் தாயின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்று .
தற்போது , UPSC… IAS..ஆரம்ப கட்ட படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள்  வாங்கி தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்க அவரும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன் என்று வாழ்த்தியுள்ளர் ஜெய்.
இத்துடன் ஜெய்யை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் மனீஷா பிரியதர்ஷினி
என் அன்பு உங்களுக்கும் உங்கள் ஆசி எனக்கும்.; விக்ரமை வாழ்த்திய இளையராஜாவுக்கு கமல் நன்றி

என் அன்பு உங்களுக்கும் உங்கள் ஆசி எனக்கும்.; விக்ரமை வாழ்த்திய இளையராஜாவுக்கு கமல் நன்றி

கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விக்ரம்.
லோகேஷ் இயக்கிய இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி ரிலீசானது.
இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை செய்து முன்னேறி வருகிறது.
இந்த படம் ரிலீசுக்கு முன்பும் படத்தின் ரிலீஸ் பின்பும் கமல்ஹாசன் பிரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் படம் வெளியாகி மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா. தனது ட்விட்டர் பக்கத்தில்…
“வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே. மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன்…
 “நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்” என்று தெரிவித்துள்ளார்
லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகிர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்  கதிரேசன்.
இவரை பைவ் ஸ்டார் கதிரேசன் என்று அழைத்தால் மட்டுமே பலருக்கு தெரியும்.
பிரபல தயாரிப்பாளரான இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் இப்படம் உருவாகுகிறது.
 இங்கு ராகவா லாரன்ஸ், சரத்குமார் மோதும் சண்டைக் காட்சி 10 நாட்கள் படமாக்கப்படுகிறது.
இப்படத்தின் சண்டைக் காட்சியை ஸ்டன்ட்  சிவா அமைக்கிறார். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
More Articles
Follows