3 நியமன MLAக்கள் விவகாரம்.: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி.; திமுக தலையிட திருமா வலியுறுத்தல்

3 நியமன MLAக்கள் விவகாரம்.: புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி.; திமுக தலையிட திருமா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirumavalavanபுதுச்சேரியில் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் அசோக் பாபு என மூவரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது பாஜக.

யூனியன் பிரதேச அரசாங்க சட்டம் 1963, பிரிவு 3, உட்பிரிவு 3இன் படி மத்திய அரசு நேரடியாக புதுச்சேரி சட்டப் பேரவைக்கான மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது…

புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திரு.என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட.சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. என்.ரங்கசாமி அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.

மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும்
பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்!

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
விடுதலை சிறுத்தைக் கட்சிகள்.

VCK request DMK to solve pondicherry issue

JUST IN விஜயகாந்த்-சூர்யா-தனுஷ் படங்களை தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்

JUST IN விஜயகாந்த்-சூர்யா-தனுஷ் படங்களை தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த ‘சபரி’, சூர்யா நடித்த ‘கஜினி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ படங்களை தயாரித்தவர் சேலம் சந்திரசேகர்.

மேலும் பிப்ரவரி 14 & கில்லாடி உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

ஸ்ரீ சரவணா கிரியேசன்ஸ் என்ற பெயரில் தயாரித்தார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக சேலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7.15 மணியளவில் உயிரிழந்தார்.

Producer Salem Chandrasekar passed away due to Covid

#RIP ! #gajini producer #salemchandrasekar passed away now at 7pm in Salem. Due to #COVID19 #RIPSalemchandrasekar

85 கோடியை நெருங்கும் விஜய் சம்பளம்..? தெலுங்கு தயாரிப்பாளரின் தாராள மனசு

85 கோடியை நெருங்கும் விஜய் சம்பளம்..? தெலுங்கு தயாரிப்பாளரின் தாராள மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 66மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனரான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறாராம்.

இப்படத்திற்காக விஜய்க்கு 85 கோடி சம்பளத்தைத் தர அவர் முன் வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தின் பட்ஜெட் 150 கோடி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay gets highest salary ever for next movie

‘மாநாடு’ படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர் சுரேஷ் காமாட்சி

‘மாநாடு’ படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh kamachiவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா எஸ்ஏசி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’.

யுவன் இசையமைத்த இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் மூலம் தயாரித்துள்ளார்.

இப்பட டப்பிங் முடிந்து அவரும், சிம்புவும் படத்தை பார்த்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளதாவது…

“மங்காத்தா படத்தை உருவாக்கியவர் த்ரில்லிங் மாஸ் என்டர்டெயினருடன் திரும்பி வந்துள்ளார்.

எங்கள் பாசத்துக்குரிய இயக்குனருக்கு நன்றி.

அற்புதமான நடிப்பை எஸ்.ஜே.சூர்யா தந்துள்ளார்” என ‘மாநாடு’ பற்றி பகிர்ந்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷிணி ஆகியோரின் நடிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu latest update by producer suresh kamatchi

விஜய்-செல்வராகவன் இணையும் படம்..; வேற மாரி ட்விஸ்ட் தரும் நெல்சன்.?

விஜய்-செல்வராகவன் இணையும் படம்..; வேற மாரி ட்விஸ்ட் தரும் நெல்சன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Selva Raghavanகோலிவுட்டில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

இவரும் பல முன்னணி இயக்குனர்களை போல கதையின் நாயகனாகி விட்டார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘சாணி காகிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க செல்வா
நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் தளபதி விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இயக்குனராக இல்லை. நடிகராக இணைகிறாராம்.

அதாவது… செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதில்லையாம்.

விஜய் நடிக்கும் படத்தில் செல்வராகவனும் நடிக்கிறாராம்.

நெல்சன் இயக்கும் விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Selva Raghavan is part of Thalapathy 65?

ராதா மோகன்-வைபவ்-வாணி போஜன் இணையும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

ராதா மோகன்-வைபவ்-வாணி போஜன் இணையும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav and Vani bhojanZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’.

ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.

மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்
இசை – பிரேம்ஜி
கலை – கதிர்

Vaibhav and Vani bhojan joins for Malaysia to Amnesia

More Articles
Follows