‘வலிமை’ அப்டேட் தந்தா ஓட்டு.. ஆள்பவர் முதல் ஆட்டோ வரை விடாத அஜித் ரசிகர்கள்..; இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு.?

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

இது போன்ற சில தகவல்கள் மட்டுமே வெளியே தெரிய வந்துள்ளது.

எனவே அஜித் ரசிகர்கள். அப்டேட் தராத போனி கபூரை கண்டித்து வால் போஸ்டர் கூட ஒட்டி வந்தனர்.

சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட ‘வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க, உங்களுக்கு ஓட்டு போடுறோம் என ஒரு சில அஜித் ரசிகர்கள் கோஷம் போட்டனர்.

நாட்டு பிரச்னைகளை பேசாமல் இதையா முதல்வர் கிட்ட கேட்பீங்க என அங்கிருந்தவர்களே பேசினர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வெயிட்டிங் ஃபார் வலிமை அப்டேட்’ என தனது ஆட்டோவில் வாசக ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.

இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் முடியும் வரை வலிமை அப்டேட் & ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என அஜித் சொன்னாராம்.

ஆனால் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

வலிமை அப்டேட் வரவில்லை என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ அஜித் பேஃன்ஸ்? தெரியலையே…

Valimai updates and Ajith fans atrocity

Overall Rating : Not available

Latest Post