தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நாளை பிப்ரவரி 24ல் வெளியாக உள்ளது.
போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
‘வலிமை’ பட ட்ரைலரில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். எனவே எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; உள்ளிட்ட பன்ச் டயலாக்குகள் ட்ரைலரில் இடம் பெற்று இருந்தன.
கடந்த சில தினங்களாக ‘வலிமை’ பட ஸ்டில்கள் & புரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ரிலீசை முன்னிட்டு தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
மேலும் தியேட்டர் ஸ்கிரீன் முன் நின்று ரசிகர்கள் நடனம் ஆடுவார்கள். அதனை தடுக்க ஸ்கீரீன் அருகே இருக்கும் மேடையில் ஆணிகளை குத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பிரபலமான தியேட்டரில் இது நடந்துள்ளது.
அந்த போட்டோ இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.
ஸ்கிரீன் அருகே எவரும் ஆட கூடாதுதான்.. அதற்காக இப்படியா செய்வார்கள்.? அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஆபத்து அருகில் உள்ளது. கவனமாக வலிமையை பாருங்கள்.. ஆடினால் வலி உங்களுக்குத்தான்…!
Valimai movie release Danger for Ajith fans