தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு..; அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் & கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 8-10 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன.

இதனிடையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

2021 ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பின்னர் பிப்ரவரி 8 தேதி முதல் முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது.

தற்போது அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு தேர்வு அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்து வருகிறோம்.

மேலும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

“பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பள்ளி பாடங்களை தொடங்குவது குறித்து முடிவு செய்வோம்.

மருத்துவத் துறை, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்

Upddate on school reopening for 6th to 8th students

Overall Rating : Not available

Latest Post