இந்திய துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா.? ப்ளூ டிக்கை நீக்கி விட்டு விளக்கம் தந்த ட்விட்டர்.; மீண்டும் Verified !

Venkaiah Naiduஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பஎட்டு வருகிறது.

ஒரு ப்ளூ டிக் வழங்கும் முறையில் நிறைய புகார்கள் வந்தன.

எனவே புளூ டிக் வழங்கும் முறையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது டுவிட்டர் நிறுவனம்.

தற்போது மீண்டும் ப்ளூ டிக் வழங்கும் முறையை தொடர்ந்துள்ளது.

துணை குடியரசுத்்தலைவர் வெங்கையா நாயுடு் ட்விட்டரில் Official and Personal என. இரண்டு அக்கௌண்ட் வைத்துள்ளார்.

அவரின் இரண்டு அக்கௌண்ட்டுக்கும் நீல நிற டிக் ஏற்கனவயவே வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை அந்த ப்ளூ டிக்கை அவரின் பெர்சனல் அக்கௌண்டில ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனால் இந்திய மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தரனர். துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா? #BanTwitterInIndia என ட்ரெண்ட் செய்தனர்.

இந்த ட்விட்டர் கணக்கு, இறுதியாக கடந்த வருடம் 2020 ஜூலை மாதம், 23-ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக வெங்கையா நாயுடுவின், கணக்கு பயன்படுத்தப்படவில்லை.

எனவே நீல நிற டிக்கை திரும்ப பெற்றதாக கூறியது ட்விட்டர் நிறுவனம்.

தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்நிறுவனம் புளூ டிக்கை மீண்டும் வழங்கியுள்ளது.

Twitter removed #blueTick from Vice President of India #VenkaiahNaidu account

Overall Rating : Not available

Latest Post