தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 17ம் தேதி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிகால் டிடிஎஃப் வாசன்.
எனவே அவர் மீது பொது மக்களுக்கு இடையூராகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனையடுத்து மாவட்ட நீதிபதி செம்மல், டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கூடுதல் தகவல்..
சமீபத்தில் தான் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார் டிடிஎஃப் வாசன்.
அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் அவர் விபத்தில் சிக்கியது.. தற்போது கைதாகி சிறையில் இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் படம் தொடருமா? என்பது கேள்விக்குறிதான்.
TTF Vasan arrest and Court order news