நடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு

actor actressகொரோனா லாக் டவுனால் 100 நாட்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சினிமா இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன் பணிகள் இன்று ஜூலை 8 முதல் தொடங்கியுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

(ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் படத்தை வெளிட்டு வருகின்றனர்.)

இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக கலந்துக் கொண்டனர்.

ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய ஆலோசித்துள்ளனர்.

அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது-

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post