IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு

Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்”.

வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது…

Prathab Enterprises ல் அடுத்தடுத்து நிறைய நல்ல படைப்புகள் வரவுள்ளது அதில் இப்படத்தை வெளியிடச் சொல்லி என்னை அணுகினார்கள். படத்தின் ஐடியாவே எனக்கு மிகப்பிடித்திருந்தது. ஒரு செல்ஃபோன் என்ன செய்யும் என்பதே இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியகரமாக இருக்கிறது. அதில் ஏ ஐ வைத்து ஒரு அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் இமான் பேசியதாவது…

இது சின்ன பட்ஜெட் படம் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தைப் பெரிதாக எடுத்துச் செல்லும் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

ஒளிப்பதிவாளர் கீதா கரண் பேசியதாவது…

மிக சின்னதாக ஆரம்பித்த படம், இந்த அளவு பெரிதாக எடுத்து வந்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாப் சுரேஷுக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

கிரி துவாரகேஷ் பேசியதாவது…
இரவின் கண்கள் முதல் நன்றி இயக்குநர் சுரேஷ்க்கு தான். ஏ ஐ பயன்படுத்தி ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். பாப் சுரேஷ் நாளைய இயக்குநரில் வித்தியாசமான குறும்படங்கள் செய்தவர். அவரது பல நாள் ஆசை, இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

இசையமைப்பாளர் சார்லஸ் தனா பேசியதாவது…
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. மிக வித்தியாசமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்திற்குள் நிறைய டிவிஸ்ட் ஆச்சரியங்கள் இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

டாலி ஐஸ்வர்யா பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இயக்குநர் பாப் சுரேஷ், ஜினீத் என எல்லோருக்கும் நன்றி. இந்தப்படம் மிக வித்தியாசமான கான்செப்ட், மனதிற்கு நெருக்கமான மிகவும் பிடித்த படம். வளர்ந்து வரும் எங்களைப் போன்ற புதியவர்களை ஆதரிக்க வேண்டுகிறேன். இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

நடிகர் பிரஜன் பேசியதாவது…

இயக்குநர் என்னிடம் இப்படத்தின் கதையைச் சொன்னார் மிக அருமையாக இருந்தது. வேறொரு கதை தான் அவர் செய்வதாக இருந்தது, அந்த நிலையில் இப்பட வாய்ப்பு கிடைக்கவே இதை செய்தார். புதிய முகங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்தப்படம் வெற்றியடைந்து பிரதாப் சார் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் தர வேண்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாப் சுரேஷ் பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இப்படம் மிக சின்னதாக ஆரம்பித்த படம் இப்படம் வெளியாகுமா என எங்களுக்கே சந்தேகம் இருந்தது, இன்று இப்படம் இந்த நிலைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை வெளியிடும் ஹரி உத்ரா அவர்களுக்கு நன்றி. பிரதாப் சாருக்கு நன்றி. சயின்ஸ் பிக்சன் ஜானரில் சுவாரஸ்யமான படம் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் பிரதாப் பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இந்த படத்தைச் சிறிய அளவில் ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம், ஆனாலும் திரையரங்குகள் குறைவாகவே கிடைக்கும், பத்திரிகையாளர்கள் மனதை வைத்து ஏற்படத்தை பாராட்டினால் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

எனக்கு பிரசாத் லேப் சொந்த வீடு போல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் இயக்குநர்கள் கதை சொல்வதே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சிலர் கதை சொன்னது போல் படம் எடுப்பதில்லை. அங்கு தான் பிரச்சனை.

நான் அப்போது விஜய் சாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டேன். படமும் முடிந்து விட்டது. இந்த தியேட்டரில் தான் நானும் விஜய் சாரும் திருப்பாச்சி படம் ஃபர்ஸ்ட் காபி பார்த்தோம். அப்போது விஜய் சார் நீங்க கதை சொன்னதை விட மூன்று மடங்கு பலமாக இருக்கிறது என்றார். அப்போது தான் மகிழ்ச்சி வந்தது.

இதோ இந்த இரவின் கண்கள் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும். இப்படத்தில் வித்தியாசமான கதை சொல்லியுள்ளார்கள். ஏ ஐ வைத்து வித்தியாசமாக யோசித்துள்ளார்கள். ரஜினி சார் சொன்னாரே சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று அது போல் பாப் சுரேஷ் சிஸ்டம் கெட்டுப்போனதை வைத்து படம் பண்ணியிருக்கிறார்.

படம் வித்தியாசமான திரில்லர் மூவி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

ஹாலிவுட்டில் சமீபத்தில் ஏ ஐ வைத்து நடிகரே இல்லாமல் நடிகரை ஏ ஐ இல் உருவாக்கிப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் ஹாலிவுட்டே சேர்ந்து ஏ ஐ க்கு எதிரான பெரிய போராட்டம் செய்தது.

அதனால் இனிமேல் ஏ ஐ வைத்துப் படமெடுப்பதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். தம்பி பாப் சுரேஷ் அந்த ஏ ஐ வைத்து, வித்தியாசமான கதையைச் சொல்லியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது அவருக்கு வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் வாழ்வியலைப் படமாக எடுப்பது குறைந்து விட்டது.

இப்போதெல்லாம் ஓடிடி விற்றால் தான் படம் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி உலகமெல்லாம் இருக்கக் கூடிய ஒரு தளம் அதில் படம் பார்ப்பவர்கள் இரவில் தான் பார்க்கிறார்கள் அவர்கள் அந்த இரவில் சில காட்சிகள் இருந்தால் தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரி காட்சிகள் படத்திலிருந்தால் தான் படம் ஓடிடி வாங்குகிறார்கள். பேரரசு படமெடுத்தால் இனி அது மாதிரி தான் படமெடுக்கவேண்டும். இன்றைக்கு வந்த ஆல்பம் பாடலில் அந்த மாதிரி மஜா காட்சிகள் இருக்கிறது. உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை என்கிறார்கள் ஆனால் அப்படிப் படமெடுத்தால் படம் ஓடாது.

இப்போது படத்தில் கஞ்சா, பத்துப்பேர் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் தான் வருகிறது. பெரிய ஹீரோக்கள் மாற வேண்டும், உணர்வுப்பூர்வமான படங்களில் நடிக்க வேண்டும். இப்போதுள்ள இயக்குநர்கள் நல்ல தரமான படங்களை எடுக்க முன் வாருங்கள். மாணவர்கள் மனதில் வக்கிரத்தைப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் குற்றங்கள் சினிமாவின் தாக்கம் இருக்கிறது.

இரவின் கண்கள் திறந்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது, முதல் படம் போல் தெரியவில்லை, நல்ல அனுபவம் உள்ளது போல் உருவாக்கியுள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : கீதா கரண்
இசை : சார்லஸ் தனா
எடிட்டிங் : இமான்
பாடல்கள் : மூர்த்தி
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை : பாலசுப்ரமணியம் K. G
திரைக்கதையமைத்து, இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – பாப் சுரேஷ்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Top heroes must avoid violence says RV Udhayakumar at Iravin Kangal event

‘இனிமேல்’ ரிலேஷன்ஷிப் இப்படி.. லோகேஷூம் நானும் இணைஞ்சது அப்பாவுக்கு ஓகே.. – ஸ்ருதி

‘இனிமேல்’ ரிலேஷன்ஷிப் இப்படி.. லோகேஷூம் நானும் இணைஞ்சது அப்பாவுக்கு ஓகே.. – ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இனிமேல்’ ரிலேஷன்ஷிப் இப்படி.. லோகேஷூம் நானும் இணைஞ்சது அப்பாவுக்கு ஓகே.. – ஸ்ருதிஹாசன்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு லோகேஷ் கனகராஜ்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர். 

இந்நிகழ்வில்

இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது,

எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன்.

பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது.

நான் சிறுவயதில் இருந்தே திரையிசைப் பாடல்களுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன். அது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றால் மிகையில்லை. இதற்கு இடையில் Independent பாடல்கள் மீதான காதல் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலுமே வளர்ந்து வந்தது.

திரையிசை என்பது ஒரு மிகப்பெரிய மான்ஸ்டர் போன்றது. அதற்கு முன்னர் இன்டிபெண்டன்ட் மியூசிக் என்பது ஒரு 30 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். “இனிமேல்” ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் தந்தை மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்திருக்கும் சலுகை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன்.  ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது.

”இனிமேல்” பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான்.  ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்  நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான்.

எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  காதல் என்பது ஒரு டெலூஷன் என்பார்கள்.  அது நிறைவடையவில்லை என்றால் அது ஒரு மாயாவாகவே எஞ்சிவிடும். ஆனால் அது நிறைவடைந்துவிட்டால் அந்த மொமண்ட் Dreams Comes true” மொமண்ட்.  இது Delution-ல் இருந்து Solution நோக்கி காதல் நகரும் இடம் என்று கூறுவேன்” என்று பேசினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம். நான் ஏற்கனவே பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கிறேன். எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன் தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது.

அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம் தான்.  அப்பொழுது எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணமும் எழுந்தது. எனக்கு கமல் சார் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாத் துறையில் இருந்து வரும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் நான் அவரைப் பற்றித் தான் அதிகம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்.

இருப்பினும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே ஸ்ருதிஹாசன் அவர்களிடம், நீங்கள் உங்கள் முடிவை இன்று மாலையே மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும் நேரலாம். எனக்கு அதுகுறித்து ஒரு வருத்தமும் இருக்கப் போவதில்லை. எனவே எதற்கும் ஒரு பேக்-அப் நடிகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தேன்.  படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குநர் துவாரகேஷ், மற்றும் அவரின் குழுவினர் என அனைவருமே மிகவும் நட்பாக பழகினார்கள்.  அதனால் நடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாக தோன்றவில்லை.

உண்மையாகவே நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த அளவிற்கெல்லாம் இல்லை.  உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை.

லியோ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன்.  எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார்.  அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் தரப்பு என்னுடைய தாய்வீடு போன்றது.  அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும்,  என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை. மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும்.  கேமரா முன் ஒரு சிறு பயம் இருந்தது. இப்பொழுது இந்த குழுவினரின் முயற்சியால் அந்த பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  என் நாயகர்களுக்கு திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டூயட் இல்லாமல் அமைவது திட்டமிட்டதல்ல. என் படத்தின் வேலைகள் எதுவுமே தடைபடவில்லை.  இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு வெறும் 3 நாட்கள் தான் நடந்தது. ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன.

ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3வது காரணம்.

நான் சோசியல் மீடியாவில் இல்லை என்பதால், பர்ஸ்ட் லுக் வெளியானதை கவனிக்கவில்லை. ஆனால் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. 

மாநகரம் படம் வெளியாகும் போது எனக்கு இந்த பதட்டம் இல்லை. ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த துறை. எனக்குப் பிடித்த வேலை என்பதால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்பினேன். ஆனால் நடிப்பு என்பது ஸ்ருதி மற்றும் அவரின் குழுவினர் என் மீது வைத்த நம்பிக்கை. அதனால் ஒரு பதட்டம் இருந்தது. என் உதவி இயக்குநர்களிடம் கேட்டேன்.  சில மீம்ஸ் காட்டினார்கள்” என்று பேசினார்.

Shruthihassan open talk about Lokesh Kanagaraj

ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் படம்..

இயக்குநர் சுகுமாரும், ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர்.

எஸ். எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது.

‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார்.

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத இப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ‘ராக்ஸ்டார்’ டிஎஸ்பி கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் சுகுமார் இணைந்திருப்பதால்.. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பான் இந்திய சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம்..

RC17 Update Ramcharan acting in Sugumar direction

குடும்ப சண்டையை தாண்டி சகோதரர்கள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

குடும்ப சண்டையை தாண்டி சகோதரர்கள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடும்ப சண்டையை தாண்டி அண்ணன் தம்பிகள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

“ஃபேமிலி படம் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில் நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை, அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், RJ பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். KP நந்து கலை இயக்கம் செய்கிறார். R சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். பெரும் பொருட்செலவில் UK Creations சார்பில் K பாலாஜி தயாரிக்க, R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Family padam movie news updates

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது

ஆனந்தி நடிப்பில் உருவான ‘மங்கை’ திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் கைதாகி சிறையில் உள்ளார்.

இது ஆனந்தி மற்றும் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நிலையில் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அதன் விவரம் வருமாறு…

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி நாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.

இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது. படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.

மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

*நடிகர்கள்*: கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இயக்குநர்: ராஜசேகர்,
தயாரிப்பாளர்: ரஞ்சனி,
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ்,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
ஒளிப்பதிவு: இளையராஜா,
இசை: சுதர்ஷன்,
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்,
கலை: டி.என். கபிலன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

Anandhi starring White Rose got its release date

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது

மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது.

டீசர் வெளியான குறுகிய காலத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையை கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையை கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் படத்திற்கு நடன இயக்குநர்கள்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் தயாரித்திருக்க நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Suriyas Ganguva teaser reached 20M views

More Articles
Follows